கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை

(ஹொங்கொங் KCR தொடரூந்துச் சேவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை அல்லது கவுலூன்-கான்டன் தொடருந்துச் சேவை (Kowloon-Canton Railway, KCR; சீன மொழி: 九廣鐵路) ஹொங்கொங்கில் உள்ள ஒரு தொடருந்துச் சேவையைக் குறிக்கும்[1]. 1911ம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டது.

கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை
Kowloon-Canton Railway (KCR)
தகவல்
அமைவிடம்ஹொங்கொங்
போக்குவரத்து
வகை
மொத்தப் பாதைகள்4 (3 தொடருந்து பாதைகள், 1 இலகு தொடருந்து சேவை)
நிலையங்களின்
எண்ணிக்கை
33 தொடருந்து நிலையங்கள், 68 இலகு தொடருந்து நிலையங்கள்
பயணியர் (ஒரு நாளைக்கு)அண்ணளவாக 1.49 மில்லியன் (2006)
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
அக்டோபர் 10 1911
- டிசம்பர் 2 2007 (MTRCL இனால் பொறுப்பேற்கப்பட்டது)
இயக்குனர்(கள்)எம்டிஆர் கோர்ப்பரேஷன்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்120.5 கிமீ (75 மை)
இருப்புபாதை அகலம்1,435 மிமீ (4 அடி 8 12 அங்) (standard gauge)


இதுவே ஹொங்கொங்கில் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டத் தொடருந்து சேவையாகும்.

இதனை 2007 டிசம்பர் 2 ஆம் எம்.டி.ஆர் தொடருந்து கூட்டுத்தாபனம் தமது சேவையுடன் இணைத்துக்கொண்டது. அத்துடன் கே.சி.ஆர் எனும் பெயர் எம்.டி.ஆர் என்றாகிவிட்டது. அத்துடன் "கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை" உடன் இருந்த புதிய குடியிருப்பு நிர்வாகப் பகுதிகளில் சேவையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இலகுரக தொடருந்து சேவையினையும், கே.எம்.பி பேருந்து சேவையும் தற்போது எம்.டி.ஆர் கூட்டுத்தாபனம் தமதாக்கிக்கொண்டது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Legislative Council information paper CB(1)357/07-08(01), THB(T) CR 8/986/00

வெளி இணைப்புகள்

தொகு