போசளப் பேரரசு

(ஹொய்சலப் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போசளப் பேரரசு அல்லது ஹோய்சாளப் பேரரசு (Hoysala Empire) பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தது. இது தென்னிந்தியாவின் முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும். இவர்கள் முதலில் பேளூரைத் தலைநகராகக் கொண்டும் பின் ஹளபீடினைத் தலைநகராகக் கொண்டும் ஆண்டு வந்தனர்.

Hoysala Empire
போசளப் பேரரசு
பொ.ஊ. 1026பொ.ஊ. 1343
ஹோய்சாலப் பேரரசு ஆட்சி செய்த நிலப்பகுதிகள், பொ.ஊ. 1200
ஹோய்சாலப் பேரரசு ஆட்சி செய்த நிலப்பகுதிகள், பொ.ஊ. 1200
நிலைபேரரசு
(பொ.ஊ. 1187 வரையில் மேலைச் சாளுக்கியத்தைச் சார்ந்திருந்தது)
தலைநகரம்பேளூர், ஹளபீடு
பேசப்படும் மொழிகள்கன்னடம்
சமயம்
இந்து
அரசாங்கம்மன்னராட்சி
மன்னர் 
• பொ.ஊ. 1026–1047
நிருப காமா II
• பொ.ஊ. 1292–1343
வீர வல்லாளன் III
வரலாறு 
• முற்கால போசள அரசின் பதிவுகள்
பொ.ஊ. 950
• தொடக்கம்
பொ.ஊ. 1026
• முடிவு
பொ.ஊ. 1343
முந்தையது
பின்னையது
மேற்கு சாளுக்கியம்
விஜயநகரப் பேரரசு

போசளப் பேரரசர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேட்டுப் பகுதியான கர்நாடகவின் மலைநாடு பகுதிவாழ் மக்களின் வழிவந்தவர்கள். 12 ஆம் நூற்றாண்டில், மேற்குப் ப‌குதியை ஆண்ட‌ சாளுக்கிய‌ர்க‌ளுக்குள் ம‌ற்றும் கால‌ச்சூரி பேரரசுக்குள்ளும் ந‌ட‌ந்த‌ உள்நாட்டுப் போரைத் த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்கிக் கொண்டு, த‌ங்க‌ள‌து எல்லைக‌ளை இன்றைய‌ க‌ர்நாட‌க‌ப் ப‌குதிக‌ளுக்கும் ம‌ற்றும் இன்றைய‌த் த‌மிழ்நாட்டிலிருக்கும் விளைச்சல் நிலங்கள் நிறைந்த காவிரியாற்றின் வ‌ட‌க்குப் ப‌குதிக்கும் விரிவுப்ப‌டுத்தின‌ர். 13ம் நூற்றாண்டிலே, அவர்கள் இந்தியாவில் இன்றைய கர்நாடகாவின் பெரும்பாலானப் பகுதிகளையும், தமிழகத்தின் ஒருசிலப் பகுதிகளையும் மற்றும் வடக்கு ஆந்திரப்பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.[1][2]

தென்னிந்தியாவில் கலை, கட்டிடக்கலை, சமயம் இவற்றின் வளர்ச்சியில் ஹோய்சால அரசவைக் காலகட்டம் மிக‌ முக்கியமானதாகும். முதன்மையாகக் கோவில்களின் கட்டிடக்கலைக்காக ஹோய்சாலப் பேரரசன் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கர்நாடகா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன, அவைகளில் பெருமை வாய்ந்தவை பேளூரி்ல் உள்ள சென்னகேசவ கோவில், ஹளபீடில் உள்ள ஹோய்சாலசுவரா கோவில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவக் கோவில் ஆகியன. ஹோய்சால அரசர்கள் தொடர்ந்து கலைகளை வளர்த்து வந்தனர். அவர்கள் இடைவிடாது அளித்த‌ ஊக்கம் இலக்கியங்கள் கன்னடத்திலும், சமசுக்கிரத்திலும் வளர்வதற்கு வழிசெய்தன. போசள மன்னர்கள் சமண, இந்து சமயங்களைப் பின்பற்றினர். விஷ்ணுவர்த்தனன் என்ற மன்னரும் அவருடைய வாரிசுகளும் வைணவர்கள் ஆவர்.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hoysala dynasty
  2. The Alluring History of Hoysalas
"https://ta.wikipedia.org/w/index.php?title=போசளப்_பேரரசு&oldid=3853758" இலிருந்து மீள்விக்கப்பட்டது