ஹோம்ஸ் ஆளுநரகம்
ஹோம்ஸ் கவர்னரேட் (Homs Governorate, அரபு மொழி: مُحافظة حمص ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது மத்திய சிரியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 40,940 km2 (15,807 sq mi) [1] முதல் 42,223 km2 (16,302 sq mi) [2] வரை என பல்வேறு தரவுகளில் வேறுபடுகிறது. இது புவியியல் ரீதியாக சிரியாவின் மிகப்பெரிய ஆளுநரகமாகும். ஹோம்ஸ் கவர்னரேட்டின் மக்கள் தொகை 1,763,000 (2010 மதிப்பீடு) ஆகும். ஹோம்ஸ் ஆளுநரகம் 6 நிர்வாக மாவட்டங்களாக ( மந்திகா ) பிரிக்கப்பட்டுள்ளது. ஹோம்ஸ் நகரம் ஒரு தனி மாவட்டமாக உள்ளது. ஹோம்ஸ் மாவட்டத்தின் தலைநகரம் ஹோம்ஸ் ஆகும். இதன் ஆளுநர் தலால் அல் பராஸி என்பவராவார். [3]
ஹோம்ஸ் கவர்னரேட்
مُحافظة حمص | |
---|---|
சிரியாவில் ஹோம்ஸ் ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (ஹோம்ஸ்): 34°18′N 38°18′E / 34.3°N 38.3°E | |
நாடு | சிரியா |
தலைநகரம் | ஹோம்ஸ் |
மாவட்டங்கள் | 7 |
அரசு | |
• ஆளுநர் | தலால் பராஸி |
பரப்பளவு | |
• மொத்தம் | 42,223 km2 (16,302 sq mi) |
Estimates range between 42,223 km² and 42,226 km² | |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,03,000 |
• அடர்த்தி | 43/km2 (110/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | SY-HO |
மொழிகள் | அரபு |
உதுமானிய சிரியாவின் ஒரு பகுதியாக ஹோம்ஸ் ஆளுநரகம் இருந்தது. இது ஹோம்ஸின் சஞ்சாக் என்றும் அழைக்கப்பட்டது.
மாவட்டங்கள்
தொகுஆளுநரகம் பத்து மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 25 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:
|
* - 2010 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம், முன்பு ஹோம்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தது
மக்கள் வகைப்பாடு
தொகுஅல்-முகர்ரம் மாவட்டத்தில் பெரும்பாலும் அலவைட்டுகள் வசிக்கின்றனர். தால்டோ, டக்கலாக், ஹோம்ஸ் மற்றும் அல்-குசெய்ர் மாவட்டங்களில் அலவைட், சுன்னி முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்கள் போன்றோர் கலந்து வாழ்கின்றனர். அல்-குசெய்ர் மாவட்டத்தில் ஏராளமான ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
குறிப்புகள்
தொகு- ↑ "Syria Provinces".
- ↑ "Syria: Governorates, Major Cities & Localities - Population Statistics in Maps and Charts".
- ↑ Zwaan, Irene de (7 April 2014). "Pater Frans van der Lugt doodgeschoten in Homs - Burgeroorlog in Syrië - VK" (in nl). de Volkskrant. http://www.volkskrant.nl/vk/nl/13828/Burgeroorlog-in-Syrie/article/detail/3630277/2014/04/07/Pater-Frans-van-der-Lugt-doodgeschoten-in-Homs.dhtml. பார்த்த நாள்: 7 April 2014.