புனித சிலுவை கல்லூரி, திருச்சிராப்பள்ளி

தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பெண்களுக்கான கல்லூரி
(ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சிராப்பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனித சிலுவை கல்லூரி (Holy Cross College (தன்னாட்சி)) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பெண்களுக்கான கலைக்கல்லூரி ஆகும். இது 1923 ஆம் ஆண்டில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக நிறுவப்பட்டு, திருச்சிராப்பள்ளி சவானோட் சகோதரிகளால் நடத்தப்படுகிறது. இந்தக் கல்லூரியே பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற கல்லூரிகளில் முதலாவதாகும். இது தென்னிந்தியாவில் உள்ள பெண்களுக்கான பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். [1]

புனித சிலுவை கல்லூரி (HOLY CROSS COLLEGE), திருச்சிராப்பள்ளி
குறிக்கோளுரைTruth and Charity
உருவாக்கம்1923
முதல்வர்சகோதரி.கிறிஸ்டினா பிரிகேட்
நிருவாகப் பணியாளர்
416
மாணவர்கள்5800
அமைவிடம், ,
10°49′28″N 78°41′31″E / 10.82457°N 78.692055°E / 10.82457; 78.692055
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்Official website

வரலாறு தொகு

பிரெஞ்சு தேசத்திலிருந்து மத மற்றும் சமுதாய பணியாற்றும் நோக்கத்தோடு இந்தியாவிற்கு வந்த அருட்சகோதரி சோபி அவர்களால் இந்திய பெண்களின் கல்வி, சமுதாய மற்றும் வாழ்க்கை முறையை முன்னேற்றுவதற்காக தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரத்தில் காவிரி நதி கரையோரத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியே புனித சிலுவை கல்லூரி ஆகும். பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக 1923 ஆம் ஆண்டு ஐந்தே ஐந்து மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 1928ஆம் ஆண்டு இரண்டாம் தர கல்லூரி என சென்னை பல்கலைக்கழகத்துடன் இசைவு பெற்றது. [1] 1964 ஆம் ஆண்டு முதல் இளங்கலை படிப்புடன் முதுகலை படிப்பையும் கற்பதற்கான அனுமதியைப் பெற்றது. 1973 ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டை கொண்டாடிய அக்கல்லூரி 1976 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தேர்வு எழுதும் செமஸ்டர் முறையை அமல்படுத்தியது. தமிழ்நாட்டை சேர்ந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் 1982 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட இந்த கல்லூரி, 1987ஆம் ஆண்டு தன்னாட்சி அந்தஸ்தினை பெற்றது. அதன்படி பாடத்திட்டங்கள் தேர்வு முறைகள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகள் கல்லூரி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட நடைபெற்று வருகிறது. தன்னாட்சி கல்லூரிகளுக்கான தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டினை 1999 ஆம் ஆண்டு பெற்றது. 2005ஆம் ஆண்டு மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆண்டுகளில் ஏ - தர மதிப்பீட்டினைப் பெற்றது. மேலும் அனைத்திந்திய அளவில் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தக் கல்லூரி இருபத்தி ஆறாம் இடத்தில் இந்தக் கல்லூரி உள்ளது. [1] 5 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரி தற்பொழுது 1500க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகிறது.

கற்பிக்கப்படும் பாடங்கள் தொகு

பெண்கள் மட்டுமே பயிலும் இந்த புனித சிலுவை கல்லூரியில் கலை, அறிவியல், மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இளங்கலை பிரிவில் 23 பாடங்களும், முதுகலை பிரிவில் 17 பாடங்களும், எட்டு பட்டயப்படிப்பு பாடங்களும் கற்பிக்கப்படுகிறது. இதைத்தவிர பதினோரு பாடங்களில் முனைவர் பட்டத்திற்கான பிரிவுகளும் உள்ளது. கிட்டத்தட்ட 270 ஆசிரியர்கள் மூலம் இந்தப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன இந்த ஆசிரியர்களில் சுமார் 125 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவார். இவர்களைத் தவிர 127 அலுவலக பணியாளர்களும் இந்த கல்லூரியில் பணிபுரிகின்றனர்.

இந்த கல்லூரியின் முதல்வராக முனைவர்.சகோதரி.கிறிஸ்டினா பிரிகெட் அவர்களும், தாளாளராக சகோதரி நிரஞ்சனா அந்தோணிசாமி அவர்களும் நிர்வகித்து வருகின்றனர்.[1]

பிற சேவைகள் தொகு

பல்வேறு ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் இந்த கல்லூரியில் பெண்களின் கல்லூரி படிப்பிற்கு பின்பான வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அவற்றில் இக்கல்லூரியின் மாணவிகள் சிறந்து விளங்கும் பல இதர சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்

  • 2006ம் ஆண்டு இக்கல்லூரி வளாகத்தில் இயங்கும் வகையில் ரேடியோ அலைவரிசை 90.4 தொடங்கப்பட்டது
  • 2003 ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் பங்களிப்பிற்கான கிராமப்புற வளர்ச்சி மாணவர்கள் மூலமாக என்ற பெயரில் ஒரு பாடத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களின் கல்வியுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.
  • கல்லூரியின் மனிதவள பிரிவு மாணவிகளை அரசு மற்றும் வங்கி பணிக்கான போட்டித் தேர்வுகளில் பங்கெடுப்பது வெற்றி பெறுவது எவ்வாறு என வழிகாட்டி வருகிறது்
  • தொலைதூரத்தில் இருந்து படிக்க வரும் மாணவிகளுக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவிகளுக்கும் தங்கிப் படிக்க விடுதி வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
  • கல்வி மட்டும் அல்லாது பாட்டு, நடனம், நடிப்பு, தற்காப்பு கலை போன்ற இதர கலைகளிலும் மாணவிகள் பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்லூரியிலும், வேறு கல்லூரிகளிலும் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வெற்றி பெறவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • இதுபோன்ற எல்லா சேவைகளிலும் மாணவிகளின் பங்களிப்பு இருப்பதற்காக மாணவர் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது
  • சமுதாய, மத ரீதியாக உள்ள சிறுபான்மையினருக்கு அரசாங்கத்தால் அளிக்கப்படும் உதவித்தொகையை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கவும் இக்கல்லூரி உதவுகிறது.
  • அனைத்திற்கும் மேலாக மாணவிகளின் மனவளர்ச்சி முன்னேற்றத்திற்க்காக ஆலோசனை வழங்கும் சான்று பெற்ற குழுவினரும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Holy Cross College (Autonomous) Tiruchirappalli - Welcome to Our College".