ஹ்யூன்சாட் - 1

ஹ்யூன்சாட் - 1 (Peheunsat - 1) என்பது அர்ஜெண்டினாவால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய செயற்கைக்கோள். இது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முனைய துணைக்கோள் ஏவுகலம் மூலம் 27.01.2007 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்ட நான்கு செயற்கைக் கோள்களுள் ஒன்று. இச் செயற்கைக்கோள் கல்விப் பயன்பாட்டிற்காக அர்ஜெண்டினா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஆம்சாட் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியதாகும். இதன் உருவாக்கத்தில் மாணவர்களும் முக்கியப் பங்கு வகித்தனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "மாணவர்கள் வடிவமைத்த செயற்கைக் கோள்" (PDF). தமிழ்ச் சுடர். 2007-01-13. பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 24, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹ்யூன்சாட்_-_1&oldid=3578378" இலிருந்து மீள்விக்கப்பட்டது