1,5-டை ஐதராக்சிநாப்தலீன்
1,5-டை ஐதராக்சிநாப்தலீன் (1,5-Dihydroxynaphthalene) என்பது C10H6(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறியப்படும் டை ஐதராக்சி நாப்தலீனின் மாற்றியங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாகும். நிறமற்ற படிகங்களாக கா்ணப்படும் 1,5-டை ஐதராக்சிநாப்தலீன் முனைவு கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. பல வகையான சாயங்கள் தயாரிப்பதற்குரிய முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1,5-டையால்
| |
வேறு பெயர்கள்
அசுரோல்; 1,5-நாப்தலீன்டையால்
| |
இனங்காட்டிகள் | |
83-56-7 | |
ChemSpider | 6492 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6749 |
| |
பண்புகள் | |
C10H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 160.17 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
உருகுநிலை | 259–261 °C (498–502 °F; 532–534 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநாப்தலீன்–1,5-டைசல்போனிக் அமிலத்தை வலிமையான காரத்தின் முன்னிலையில் நீராற்பகுப்பு செய்தும் அதைத் தொடர்ந்து அமிலமாக்கல் வினைக்கு உட்படுத்தியும் 1,5-டை ஐதராக்சிநாப்தலீன் தயாரிக்க முடியும்.
பயன்கள்
தொகு1,5-டை ஐதராக்சிநாப்தலீன் சேர்மம் பல்வேறு அரைல் ஈரசோனியம் உப்புகளுடன் இணைந்து டையசோ சாயங்களைக் கொடுக்கிறது. குரோமியம் முவாக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்யும் போது C10H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டல் குறிக்கப்படும் யக்லோன் என்ற இயற்கைச் சாயம் கிடைக்கிறது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Gerald Booth (2005). "Naphthalene Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a17_009. .