1,9-நோனேண்டையால்

வேதிச் சேர்மம்

1,9-நோனேண்டையால் (1,9-Nonanediol) என்பது C9H20O2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நோனாமெத்திலீன் கிளைக்கால் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு டையால் வகை வேதிப்பொருளாகும். இதன் வேதியியல் அமைப்பு வாய்ப்பாடை HO(CH2)9OH என்று எழுதலாம். நிறமற்று திண்மநிலையில் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவு கரையும். ஆனால் எத்தனாலில் எளிதில் கரையும்.[1]

1,9-நோனேண்டையால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,9-நோனேண்டையால்
வேறு பெயர்கள்
1,9-ஈரைதராக்சி நோனேன்
இனங்காட்டிகள்
3937-56-2 Y
ChEBI CHEBI:167089 Y
ChemSpider 18685 Y
EC number 223-517-5
InChI
  • InChI=1S/C9H20O2/c10-8-6-4-2-1-3-5-7-9-11/h10-11H,1-9H2 N
    Key: ALVZNPYWJMLXKV-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19835
  • C(CCCCO)CCCCO
UNII N4385C65C6 Y
பண்புகள்
C9H20O2
வாய்ப்பாட்டு எடை 160.25 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 46.4 °C (115.5 °F; 319.5 K)[1]
கொதிநிலை 173 °C (343 °F; 446 K) 20மி.மீபாதரசம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

அல்லைல் ஆல்ககாலை மாற்றியமாக்கல் வினை மூலம் 1,9-நோனேண்டையால் சேர்மத்தை உற்பத்தி செய்யலாம்.[2] டிரையெத்தில்சிலில் ஐதரோடிரையாக்சைடுடன் இலித்தியம் அலுமினியம் ஐதரைடையும் மெத்தில் ஓலியேட்டையும் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.[3]

பயன்கள்

தொகு

1,9-நோனேண்டையால் சில பலபடிகள் தயாரிப்பில் ஓர் ஒருமமாகப் பயன்படுத்தப்படுகிறது. அரோமாட்டிக் வேதிப்பொருள்கள் மற்றும் மருந்துத் தொழிலில் இது ஓர் இடைநிலை வேதிப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 3.420. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
  2. Tsuji, J. (2002). Transition Metal Reagents and Catalysts: Innovations in Organic Synthesis. Wiley. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-56027-2.
  3. Fuchs, P.L. (2011). Reagents for Silicon-Mediated Organic Synthesis. Handbook of Reagents for Organic Synthesis. Wiley. p. 514. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-71023-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,9-நோனேண்டையால்&oldid=4030151" இலிருந்து மீள்விக்கப்பட்டது