1-குளோரோபிப்பெரிடின்
1-குளோரோபிப்பெரிடின் (1-Chloropiperidine) என்பது C5H10ClN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். N-குளோரோபிப்பெரிடின் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. 1-குளோரோபிப்பெரிடின் ஒரு நிறமற்ற திரவமாகும். கரிம குளோராமைனுக்கு ஓர் அரிய உதாரணமாகக் கருதப்படுகிறது. அதாவது N-Cl பிணைப்புடன் கூடிய ஒரு சேர்மத்திற்கு இது உதாரணமாகும். பிப்பெரிடினுடன் கால்சியம் ஐப்போகுளோரைட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து 1-குளோரோபிப்பெரிடின் தயாரிக்கப்படுகிறது. குளோரமைன்களில் பொதுவான இச்சேர்மம் மிகவும் வினைத்திறன் கொண்டதாகும். தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக தளத்தில் உருவாக்கப்பட்டு இது பயன்படுத்தப்படுகிறது. 1-குளோரோபிப்பெரிடின் ஐதரோ ஆலசன் நீக்க வினைக்கு உட்பட்டு வளைய இமைனை கொடுக்கிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபிப்பெரிடின் | |
இனங்காட்டிகள் | |
2156-71-0 | |
ChemSpider | 15680 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16540 |
| |
UNII | 4V5HK98PCN |
பண்புகள் | |
C5H10ClN | |
வாய்ப்பாட்டு எடை | 119.59 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 50–60 °C (122–140 °F; 323–333 K) 40-50 மி.மீ பாதரசம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Claxton, George P.; Allen, Lloyd; Grisar, J. Martin (1977). "2,3,4,5-Tetrahydropyridine Trimer". Organic Syntheses 56: 118. doi:10.15227/orgsyn.056.0118.