1070 அலுமினிய உலோகக் கலவை

அலுமினியத்தின் கலப்புலோகம்

1070 அலுமினிய உலோகக் கலவை (1070 aluminium alloy) ஒரு தூய்மையான அலுமினியக் கலப்புலோகமாகும். அதிமான அரிப்பு எதிர்ப்பும் சிறந்த பற்றவைத்து இணைக்கும் திறனும் கொண்ட உலோகக் கலவையாக இது பயன்படுகிறது. [1]

1070 அலுமினிய உலோகக் கலவையில் அலுமினியம், இரும்பு, சிலிக்கான், துத்தநாகம், வனேடியம், செப்பு, தைட்டானியம், மக்னீசியம், மற்றும் மாங்கனீசு போன்ற தனிமங்கள் சிறுபான்மை அளவுகளில் கலந்துள்ளன.[2]

வேதி இயைபுதொகு

தனிமம் [2] உள்ளடக்கம் (%)
அலுமினியம் ≥ 99.7
இரும்பு ≤ 0.25
சிலிக்கான் ≤ 0.20
துத்தநாகம் ≤ 0.040
வனேடியம் ≤ 0.050
செப்பு ≤ 0.040
தைட்டானியம் ≤ 0.030
மக்னீசியம் ≤ 0.030
மாங்கனீசு ≤ 0.030
பிற தனிமங்கள் ≤ 0.030

பயன்பாடுகள்தொகு

அலுமினியம் 1070 கலப்புலோகத்தின் பயன்கள்: [2]

  1. பொதுவான தொழிற்சாலை உட்கூறுகள்
  2. கட்டிடமும் கட்டுமானமும்
  3. போக்குவரத்து
  4. மின் பொருட்கள்
  5. கூர் உணர்வுத் தட்டுகள்
  6. ஆபரணக் கீற்றுகள்
  7. தகவல் தொடர்பு வடங்கள்
  8. குளிர்சாதன மற்றும் உறைவிப்புப் பெட்டிகள்

மேற்கோள்கள்தொகு

  1. "Aluminium 1070 alloy".
  2. 2.0 2.1 2.2 "1070 ALuminium alloy".