1812 அனந்தபூர் போர்

1812 அனந்தபூர் போர் (Battle of Anandpur (1812)) சோதி சுர்ஜன் சிங் தலைமையிலான சீக்கியப் படைகளுக்கும்ம், இராஜா மகான் சந்த் தலைமையிலான கலூரின் இராஜபுத்திரப் படைகளுக்கும் இடையே 1812 ஆம் ஆண்டில் ரூப் நகர் மாவட்டத்திலுள்ள அனந்தபூரில் .நடந்த போரைக் குறிக்கிறது.

அனந்தபூர் போர்
Battle of Anandpur
மலை மன்னர்கள்-சீக்கியர்கள் போர் பகுதி
நாள் 1812
இடம் அனந்தபூர் சாகிபு
சீக்கியர் வெற்றி
பிரிவினர்
சீக்கியப் பேரரசு கலூர்
தளபதிகள், தலைவர்கள்
இரஞ்சித் சிங்
சோதி சுர்ஜன் சிங்
ஊக்மா சிங் சிம்னி
பாய் மக்னா சிங்
பாய் சுக்கா சிங்
இராஜா மகான் சந்து
பலம்
5,000 வீரர்கள் சோதி சுர்ஜன் சிங்கின் தலைமையில்[1]
ஊக்மா சிங் சிம்னி தலைமையில் , தெரியவில்லை
தெரியவில்லை

பின்னணி

தொகு

சீக்கியர்களுக்கு மலை மாநிலங்களில், குறிப்பாக கலூரில் எதிரிகள் இருந்தனர். சீக்கியர்களுக்கும் கலூருக்கும் இடையில் அனந்தபூர் சர்ச்சைக்குரியதாக இருந்தது. , மேலும் அவர்கள் 1682 ஆம் ஆண்டு தொடங்கி நகரத்தின் சரியான உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க பல போர்களை நடத்தினர். [2] [3] 1704 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்த 100 ஆண்டுகளுக்கு மேல் மலை மன்னர்களின் போர் வன்முறைகள் ஏதுமின்றி சீக்கியர்கள் அனந்தபூரை ஆட்சி செய்தனர். 1812 ஆம் ஆண்டில், கலூர் இராஜா மகான் சந்த், சோதி சுர்ஜன் சிங்கிடம், அந்த நகரத்தை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வதாகக் கூறி அவருக்கு வரி செலுத்தச் சொன்னார். இது நிராகரிக்கப்பட்டதும் அவர் அனந்த்பூரைத் தாக்கினார். [4] [5]

போர்

தொகு

ஊக்மா சிங் சிம்பி என்ற சீக்கியத் தளபதி , அனந்தபூரில் தாக்குதல் நடப்பதாகக் கேள்விப்பட்டபோது, அந்நகருக்கு அருகில் முகாமிட்டிருந்தார். இதனால் அவர் தனது படையுடன் நகரத்திற்கு அணிவகுத்துச் சென்றார். [4]னந்தபூர் தி வார் என்று அழைக்கப்படும் ஒரு பஞ்சாபி புராணம் சோதியன் தி வார் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது போரைப் பற்றி ராம் சிங் எழுதியதாகும். [6] இத்துருப்புக்கள் பலத்த இழப்புகளுடன் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களுக்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [7] புகழ்பெற்ற புத்தகமான குர்பிலாசு தசுவின் பாட்சாகியின் ஆசிரியர் பாய் சுக்கா சிங் மற்றும் அனந்தபூரின் சீக்கியத் தலைவர் பாய் மக்னா சிங் ஆகியோர் இந்தப் போரில் சண்டையிட்டதாக கூறுகிறார். [8]

பின்விளைவு

தொகு

வரியைப் பெறுவதற்குப் பதிலாக, மலை மன்னர்கள் சீக்கியர்களுக்கு வரி செலுத்த வேண்டியிருந்தது. பஞ்சாபின் காலனித்துவ காலத்திற்கு முன்பு அனந்தபூரில் நடந்த கடைசி தாக்குதல் இதுவாகும். [4]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Harajindara Siṅgha Dilagīra (1997). The Sikh reference book. p. 627. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170103011.
  2. Hari Ram Gupta (1994). History Of The Sikhs Vol. I The Sikh Gurus (1469-1708). pp. 226–228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8121502764.
  3. Karam Singh Raju (1999). Guru Gobind Singh: Prophet of Peace. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380213644.
  4. 4.0 4.1 4.2 Harjinder Singh Dilgeer (May 2003). Anandpur Sahib. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-930247-06-1.
  5. Religions of India. 2000. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176292290.
  6. Indu Banga (2005). Precolonial and Colonial Punjab. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173046544.
  7. Harbans Singh (1995). The Encyclopedia Of Sikhism - Volume I A-D. p. 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173801006.
  8. Shamsher Singh Ashok (1950). Prachin Jang Name.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1812_அனந்தபூர்_போர்&oldid=3706707" இலிருந்து மீள்விக்கப்பட்டது