1864 கொல்கத்தா புயல்

1864 கொல்கத்தா புயல் (1864 Calcutta Cyclone) என்பது 1864 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கொல்கத்தாவைத் தாக்கிய கொடூரமான புயல் ஆகும். இதன் பாதிப்பாக 60,000 மக்கள் உயிரிழந்தனர்[1]. மேலும் பல்லாயிரம் மக்கள் புயலின் பின் ஏற்பட்ட நோயின் காரணத்தால் உயிரிழந்தனர். இது கொல்கத்தாவை உலுக்கிய மிகப்பெரிய புயல்களில் ஒன்று ஆகும். இது சுமார் காலை பத்து மணியளவில் கிழக்குக்கரையில் உள்ள ஹுக்ளி நதியைக் கடந்தது. அப்பொழுது அந்த நதியின் நீரின் அளவு 40 அடி உயரம் வரை எழுந்தது. இதன் விளைவாக அதன் கரையிலிருந்த பகுதிகள் அனைத்தும் நீரினால் இழித்து செல்லப்பட்டது. துறைமுகத்திலிருந்த பெரும்பாலான கப்பல்கள் (172/195) நாசமடைந்தன[2]. அதன் பின் அந்த நகரத்தை நிர்மாணிக்க மாதக்கணக்காகியது.

1864 கொல்கத்தா புயல்

மேற்கோள்கள்

தொகு
  1. Gastrell, J. E.; Henry F. Blanford (1866). Report On The Calcutta Cyclone Of The 5th October 1864. Calcutta: Government Of Bengal. பார்க்கப்பட்ட நாள் 2009-08-15.
  2. "Calcutta". 1902 Encyclopedia. 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-04-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1864_கொல்கத்தா_புயல்&oldid=3630112" இலிருந்து மீள்விக்கப்பட்டது