1866 ஒரிசா பஞ்சம்
1866 ஒரிசா பஞ்சம் (Orissa famine of 1866) என்பது 1866 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் ஒரிசா பகுதியைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சம். இது ஏறத்தாழ 1,80,000 சதுர மைல்கள் பரப்புள்ள நிலப்பரப்பையும் 4 கோடியே 75 லட்சம் மக்களையும் பாதித்தது.
19ம் நூற்றாண்டில் ஒரிசா பகுதி பிரித்தானிய இந்தியாவின் பிற மாகாணங்களுடன் சரியாக இணைக்கப்படவில்லை. குறைவான போக்குவரத்து வசதிகளுடன் தனிமைப்பட்டிருந்தது. 1865 இல் பருவமழை பொய்த்ததால், விளைச்சல் குறைந்து உணவுத் தட்டுப்பாடு உருவானது. வங்காள வருவாய்த் துறை நிலைமையின் தீவிரத்தை உணராது, பஞ்சத்தை சமாளிக்க போதுமான முன்னேற்பாடுகள் செய்யவில்லை. மே 1866 இல் பஞ்சத்தின் தீவிரத்தை உணர்ந்த பின்னர் காலனிய நிருவாகம், நிவாரணப் பணிகளுக்கு ஏற்பாடு செய்தது. கடல்வழியாக உணவுப் பொருட்களை ஒரிசாவுக்கு அனுப்பும் முயற்சிகள் மோசமான வானிலையால் தாமதமாகின. அவ்வாறு ஒரிசா கடற்கரைக்கு அனுப்பபட்ட உணவுப் பொருட்களை, போதிய போக்குவரத்து கட்டுமானம் இல்லாத காரணத்தால் ஒரிசாவின் உட்பகுதிக்கு அனுப்ப இயலவில்லை. காலனிய ஆட்சியாளர்கள் பஞ்சத்தை சமாளிக்க இறக்குமதி செய்த 10,000 டன் அரிசி செப்டம்பர் 1866 இல் தான் மக்களைச் சென்றடைந்தது. இதற்குள் பட்டினியாலும், காலரா போன்ற தொற்று நோய்களாலும் ஒரிசாவில் மட்டும் பத்து லட்சம் பேர் மாண்டிருந்தனர். இரு ஆண்டுகளில் இப்பகுதி முழுவதும் பஞ்சத்தினால் நாற்பது முதல் ஐம்பது லட்சம் பேர் மாண்டனர்.
அடுத்த ஆண்டும் பஞ்சம் நீடிக்கும் என்று எதிர்பார்த்த அரசு 40,000 டன் அரிசி இறக்குமதி செய்தது. ஆனால் 1866 மற்றும் 1867 இல் பருவமழை பொய்க்காது, விளைச்சல் அதிக அளவில் இருந்ததால், 1868 இல் பஞ்சம் முடிவடைந்தது. பஞ்ச நிவாரணப் பணிகளுக்காக அரசு மொத்தம் 95 லட்சம் ரூபாய்களை செலவிட்டது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Ambirajan, S. (1976), "Malthusian Population Theory and Indian Famine Policy in the Nineteenth Century", Population Studies, 30 (1): 5–14, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2173660
- Arnold, David; Moore, R. I. (1991), Famine: Social Crisis and Historical Change (New Perspectives on the Past), Wiley-Blackwell. Pp. 164, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0631151192
- Bhatia, B. M. (1991), Famines in India: A Study in Some Aspects of the Economic History of India With Special Reference to Food Problem, 1860–1990, Stosius Inc/Advent Books Division, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122002110
- Dutt, Romesh Chunder (2005) [1900], Open Letters to Lord Curzon on Famines and Land Assessments in India, London: Kegan Paul, Trench, Trubner & Co. Ltd (reprinted by Adamant Media Corporation), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1402151152
- Dyson, Tim (1991), "On the Demography of South Asian Famines: Part I", Population Studies, 45 (1): 5–25, JSTOR 2174991
- Dyson, Tim (1991), "On the Demography of South Asian Famines: Part II", Population Studies, 45 (2): 279–297, JSTOR 2174784
- Dyson, Time (ed.) (1989), India's Historical Demography: Studies in Famine, Disease and Society, Riverdale, MD: The Riverdale Company. Pp. ix, 296
{{citation}}
:|first=
has generic name (help) - Ghose, Ajit Kumar (1982), "Food Supply and Starvation: A Study of Famines with Reference to the Indian Subcontinent", Oxford Economic Papers, New Series, 34 (2): 368–389, JSTOR 2662775
- Government of India (1867), Report of the Commissioners Appointed to Enquire into the Famine in Bengal and Orissa in 1866, Volumes I, II, Calcutta
- Government of India (1880), Report of the Indian Famine Commission, Part I, Calcutta
- Grada, Oscar O. (1997), "Markets and famines: A simple test with Indian data", Economic Letters, 57: 241–244, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0165-1765(97)00228-0
- Hardiman, David (1996), "Usuary, Dearth and Famine in Western India", Past and Present, 152 (1): 113–156, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/past/152.1.113
- Hill, Christopher V. (1991), "Philosophy and Reality in Riparian South Asia: British Famine Policy and Migration in Colonial North India", Modern Asian Studies, 25 (2): 263–279, JSTOR 312512
- Imperial Gazetteer of India vol. III (1907), The Indian Empire, Economic (Chapter X: Famine, pp. 475–502, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552.
- Klein, Ira (1973), "Death in India, 1871-1921", The Journal of Asian Studies, 32 (4): 639–659, JSTOR 2052814
- McAlpin, Michelle B. (1983), "Famines, Epidemics, and Population Growth: The Case of India", Journal of Interdisciplinary History, 14 (2): 351–366, JSTOR 203709
- McAlpin, Michelle B. (1979), "Dearth, Famine, and Risk: The Changing Impact of Crop Failures in Western India, 1870–1920", The Journal of Economic History, 39 (1): 143–157, JSTOR 2118916
- Owen, Nicholas (2008), The British Left and India: Metropolitan Anti-Imperialism, 1885–1947 (Oxford Historical Monographs), Oxford: Oxford University Press. Pp. 300, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199233012
- Sen, A. K. (1977), "Starvation and Exchange Entitlements: A General Approach and its Application to the Great Bengal Famine", Cambridge Journal of Economics, 1 (1): 33–59
- Stone, Ian, Canal Irrigation in British India: Perspectives on Technological Change in a Peasant Economy, Cambridge South Asian Studies, Cambridge and London: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521526639