1897 அஸ்ஸாம் நிலநடுக்கம்
1897 அஸ்ஸாம் நிலநடுக்கம் (1897 Assam earthquake) என்பது 1897-ம் ஆண்டு ஜூன் 12-ம் நாள் இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கம் ஆகும். இது ரிக்டர் அளவில் 8.7 எனப் பதிவாகியது. இதன் விளைவாக 6,000 மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். இது அப்பகுதியிலிருந்த கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியது. மேலும் இது இந்தியாவின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது.[2] மேலும் டாக்காவில் (கிழக்கு வங்காளத்தின் தலைநகரம்) அதிகமான மக்கள் உயிரை இழந்தனர். இதனால் 50 மைல் நீள இருப்புப்பாதை முழுவதுமாக அழிக்கப்பட்டது. டார்ஜிலிங்கில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டன. இதனால் தேயிலைத் தொழில் அழிந்தது. கிழக்கு வங்காளத்தில் பல பாலங்கள் உடைந்த காரணத்தால் தொடருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
நாள் | June 12, 1897 |
---|---|
நிலநடுக்க அளவு | 8.3 Mw |
நிலநடுக்க மையம் | 26°00′N 90°42′E / 26.0°N 90.7°E[1] |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | இந்தியா |
அதிகபட்ச செறிவு | VII (மிக வலுவானது) அல்லது IX (வன்மையானது)[2] |
உயிரிழப்புகள் | 1,542[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Subedi, Shiba; Hetényi, György (1 அக்டோபர் 2021). "Precise Locating of the Great 1897 Shillong Plateau Earthquake Using Teleseismic and Regional Seismic Phase Data" (in en). The Seismic Record 1 (3): 135–144. doi:10.1785/0320210031. பன்னாட்டுத் தர தொடர் எண்:2694-4006. https://pubs.geoscienceworld.org/tsr/article/1/3/135/609665/Precise-Locating-of-the-Great-1897-Shillong.
- ↑ 2.0 2.1 2.2 "Documentation on past disasters, their impact, Measures taken, vulnerable areas in Assam" (PDF). Archived from the original (PDF) on 11 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2024.
உசாத்துணை
தொகு- ENCYCLOPEDIA OF DISASTERS பரணிடப்பட்டது 2021-12-08 at the வந்தவழி இயந்திரம், Environmental Catastrophes and Human Tragedies, VOLUME 1 by ANGUS M. GUNN, GREENWOOD PRESS, Assam, India, earthquake, 1864- பக்கம்:165