1918: இந்தியாவில் இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல்

1918: இந்தியாவில் இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல் (1918 flu pandemic in India) என்பது 1918 மற்றும் 1920க்கு இடையில் உலகளாவிய இன்புளுவென்சா தொற்றுநோயின் ஒரு பகுதியாக இந்தியாவில் அசாதாரணமான கொடிய இன்ஃப்ளூயன்சா பெருந்தொற்றுநோய் ஏற்பட்டது.[1][2] இதனை இந்தியாவில் பாம்பே இன்ஃபுளுவென்சா அல்லது பாம்பே காய்ச்சல் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.[3][4]

நோய்த் தாக்கம் தொகு

இந்த தொற்றுநோயினால் 18,00,000 பேர் வரை கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.[5] இந்நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் இது அதிகம்.[6][7] டேவிட் அர்னால்ட் (2019) குறைந்தது 12,00,000 பேர் இறந்ததாக மதிப்பிடுகிறார். இது மக்கள் தொகையில் 5% ஆகும்.[8] 1911 மற்றும் 1921க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் மட்டும் தான் இந்தியாவின் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்த கணக்கெடுப்புக் காலமாக உள்ளது.[9][10] இந்தியாவில் பிரித்தானிய பேரரசு ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,88,000 பேர் ஆவர்.[11]

தொற்று தொகு

சூன் 1918-ல் பம்பாயில் தொற்றுநோய் பரவத் தொடங்கியது.[12] சாத்தியமான வழிகளில் ஒன்றாக ஐரோப்பாவில் முதல் உலகப் போர் முடிந்து கப்பல்கள் மூலம் தாயகம் திரும்பி துருப்புக்கள் மூலம் பரவத்தொடங்கியது.[13][14] இந்நொய் பின்னர் நாடு முழுவதும் மேற்கு மற்றும் தெற்கிலிருந்து கிழக்கு மற்றும் வடக்கு நோக்கிப் பரவியது.[13] ஆகத்து மாதத்திற்குள் நாடு முழுவதையும் அடைந்தது.[15] இது மூன்று அலைகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளைத் தாக்கியது. இரண்டாவது அலை இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது.[14][15] இறப்பு விகிதம் செப்டம்பர் 1918 கடைசி வாரத்தில் பம்பாயிலும், அக்டோபர் நடுப்பகுதியில் சென்னையிலும், நவம்பர் நடுப்பகுதியில் கல்கத்தாவிலும் உச்சத்தை எட்டியது.[12]

20-40 வயதிற்குட்பட்ட இளைஞர்களை இந்த பெருந்தொற்று மிகக் கடுமையாகப் பாதித்தது. பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.[15] 1918ஆம் ஆண்டுக்கான சுகாதார ஆணையரின் அறிக்கையின்படி, ஒரு வாரத்தில் அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை பம்பாய் மற்றும் சென்னை இரண்டிலும் 200க்கும் அதிகமானது.[12] பருவமழை பெய்யாமை மற்றும் இதன் விளைவாக ஏற்பட்ட பஞ்சம் போன்ற நிலைமைகளால் நோய் பரவுதல் தீவிரமடைந்தது. இது மக்களை உணவின்றி மற்றும் பலவீனமாக ஆக்கியது. மேலும் மக்கள் அடர்த்தியான நகரங்களுக்குச் செல்ல கட்டாயப்படுத்தியது.[4] பெருந்தொற்றின் தீவிரத்தின் விளைவாக, 1919ஆம் ஆண்டில் பிறப்புகள் சுமார் 30 சதவிகிதம் குறைந்தது.[15] 1911-1921 தசாப்தத்தில் இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி 1.2% ஆக இருந்தது. இது பிரித்தானிய பேரரசு ஆட்சியின் கீழ் இருந்த அனைத்து தசாப்தங்களையும் ஒப்பிடும்போது மிகக் குறைவு ஆகும். இந்திக் கவிஞர் சூர்யகாந்த் திரிபாதி தனது நினைவுக் குறிப்புகளில், "கங்கை இறந்த உடல்களால் வீங்கி இருந்தது" என்று எழுதினார்.[16] 1918ஆம் ஆண்டுக்கான துப்புரவு ஆணையரின் அறிக்கை, தகனம் செய்வதற்கு விறகுகள் இல்லாததால், [15] இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆறுகளிலும் உடல்கள் தேங்கியுள்ளன என்று குறிப்பிட்டு இருந்தார்.[14][17][18]

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் தலைவரான மகாத்மா காந்தியும் இந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்தார்.[7] நாட்டில் சுதந்திர இயக்கத்தில் தொற்றுநோய் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டில் உள்ள சுகாதார அமைப்பால் மருத்துவ கவனிப்புக்கான தேவைகள் திடீரென அதிகரித்ததைச் சந்திக்க முடியவில்லை. இதன் விளைவாக ஏற்பட்ட இறப்பு மற்றும் துயரங்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகியவை காலனித்துவ ஆட்சிக்கு எதிரான உணர்ச்சியை அதிகரிக்க வழிவகுத்தது[7][14]

மேற்கோள்கள் தொகு

  1. "A study maps the spread (and decline) of the 1918 Spanish flu in India". Scroll.in. 8 March 2020. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  2. Man Aman Singh Chhina (12 May 2021). "Explained: When corpses of influenza victims were dumped in Narmada river in 1918". The Indian Express.
  3. "Deja flu: Spanish Lady killed 14 million in British India a century ago". The Times of India. 8 March 2020. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  4. 4.0 4.1 "Coronavirus: What India can learn from the deadly 1918 flu". BBC. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
  5. "References to death and disease in Hindi literature". 12 April 2020.
  6. Mayor, S. (2000). "Flu experts warn of need for pandemic plans". British Medical Journal 321 (7265): 852. doi:10.1136/bmj.321.7265.852. பப்மெட்:11021855. 
  7. 7.0 7.1 7.2 "How the Spanish flu changed the course of Indian history". Gulf News. 15 March 2015. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  8. Arnold, David (2019). "Death and the Modern Empire: The 1918–19 Influenza Epidemic in India". Transactions of the Royal Historical Society 29: 181–200. doi:10.1017/S0080440119000082. 
  9. Sreevatsan, Ajai (13 March 2020). "Why 1918 matters in India's corona war".
  10. Malik, Shiv (15 April 2020). "What the history of pandemics tells us about coronavirus". Hindustan Times.
  11. "Mortality from the influenza pandemic of 1918–1919: the case of India". Demography 49 (3): 857–65. August 2012. doi:10.1007/s13524-012-0116-x. பப்மெட்:22661303. https://archive.org/details/sim_demography_2012-08_49_3/page/857. 
  12. 12.0 12.1 12.2 "The evolution of pandemic influenza: evidence from India, 1918–19". BMC Infectious Diseases 14 (510): 510. 2014. doi:10.1186/1471-2334-14-510. பப்மெட்:25234688. 
  13. 13.0 13.1 "Pandemics of the Past". India Today. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  14. 14.0 14.1 14.2 14.3 "An unwanted shipment: The Indian experience of the 1918 Spanish flu". The Economic Times. 3 April 2020. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/an-unwanted-shipment-the-indian-experience-of-the-1918-spanish-flu/articleshow/74963051.cms. "An unwanted shipment: The Indian experience of the 1918 Spanish flu". The Economic Times. 3 April 2020. Retrieved 8 April 2020.
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 "The 1918–1919 Influenza Pandemic – The Indian Experience". The Indian Economic & Social History Review 23 (1): 1–40. 1986. doi:10.1177/001946468602300102. பப்மெட்:11617178. 
  16. Kulli Bhat. 
  17. A preliminary report on the influenza pandemic of 1918 in India / by the Sanitary Commissioner with the Indian Government. https://wellcomecollection.org/works/baz3x459/items?canvas=11. பார்த்த நாள்: 20 April 2022. 
  18. The Influenza Epidemic of 1918 in India. June 1919. https://www.indianculture.gov.in/flipbook/134563. பார்த்த நாள்: 20 April 2022. 

மேலும் படிக்க தொகு

  • Tumbe, Chinmay (2020). The age of pandemics (1817–1920): How they shaped India and the world. HarperCollins.