சூர்யகாந்த் திரிபாதி

சூரியகாந்த் திரிபாதி "நிராலா" (Suryakant Tripathi "Nirala", सूर्यकांत त्रिपाठी, பெப்ரவரி 21, 1899 – அக்டோபர் 15, 1961) இந்தி மொழியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். சிறுகதை, கவிதை, புதினம், கட்டுரை என பல வகைப் படைப்புகளைப் படைத்துள்ளார். நிராலா என்ற புனைபெயரில் எழுதியவர். ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர் வங்காளி, பெர்சியன், சமற்கிருதம் மற்றும் இந்தி மொழிகளைத் தனியாகக் கற்றுக் கொண்டார். 1916 ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் பின்னர் கொல்கத்தாவிலிருந்து வெளியான “சமான்வே” என்ற இதழின் ஆசிரியராக 1920 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சூரியகாந்த் திரிபாதி ’நிராலா’
Suryakant Tripathi 'Nirala'
सूर्यकांत त्रिपाठी 'निराला'
பிறப்பு(1899-02-21)பெப்ரவரி 21, 1899
மித்னப்பூர், வங்காளம்
இறப்புஅக்டோபர் 15, 1961(1961-10-15) (அகவை 65)
அலகபாத், உத்தரப் பிரதேசம்
தொழில்எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர்
தேசியம்இந்தியர்

நூல்கள்

தொகு

1923 ஆம் ஆண்டில் “அனாமிகா” எனும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.1929 ஆம் ஆண்டில் இவருடைய மற்றொரு கவிதைத் தொகுப்பு “பரிமள்” வெளியானது. அதன் பிறகு அவருடைய மகள் சரோஜ் நினைவாக 1935 ஆம் ஆண்டில் “சரோஜ் ஸ்மிருதி” எனும் நூலை எழுதினார். இவர் எழுதிய நூல்களில் 1936 ஆம் ஆண்டில் “கீதிகா”, 1938 ஆம் ஆண்டில் “துளசிதாஸ்”, 1942 ஆம் ஆண்டில் “குர்கர்மட்டா”, 1943 ஆம் ஆண்டில் “அனிமா”, 1946 ஆம் ஆண்டில் “நயே பேட்டி”, 1950 ஆம் ஆண்டில் “அர்ச்சனா”, 1953 ஆம் ஆண்டில் “ஆராதனா”, 1954 ஆம் ஆண்டில் “கீத்குஞ்சன்” போன்ற நூல்கள் மிகவும் புகழ் பெற்றன.

“பில்லெசர் பஹரிகா” எனும் வாழ்க்கை வரலாற்று நூல், “சதுரி சாமர்”, “சுகுல் கி பீவி” எனும் இரு சிறுகதைத் தொகுப்பு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.

இவர் எழுதிய நூல்களில் 1927 ஆம் ஆண்டில் எழுதிய “ரபீந்த்ர கவிதா கானன்”, 1948 ஆம் ஆண்டில் எழுதிய “பண்ட் அவுர் பல்லவ்” மற்றும் 1951 ஆம் ஆண்டில் எழுதிய “சபக்” ஆகிய நூல்கள் விமர்சன நூல்களாகும். இவை பிரச்சனைகளை சந்தித்த நூல்களுமாகும்.

மறைவு

தொகு

இவர் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாகையில் அக்டோபர் 15, 1961 ஆம் நாளன்று மரணமடைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யகாந்த்_திரிபாதி&oldid=2711872" இலிருந்து மீள்விக்கப்பட்டது