191 பீச்ட்றீ கோபுரம்

191 பீச்ட்றீ கோபுரம் (பொதுவாக "பீச்ட்றீ" கோபுரமென்றே அழைக்கப்படுகிறது) அட்லான்டாவின் நான்காவது உயரமான வானளாவியாகும். 50 மாடிகளையும், 235 மீட்டர் உயரத்தையும் கொண்ட இக் கட்டிடம், உலகின் மிக உயர்ந்த 200 கட்டிடங்களுள் ஒன்றாகும்.

191 பீச்ட்றீ கோபுரம்
Information
அமைவு 191 பீச்ட்றீ தெரு வடகிழக்கு
அட்லாண்டா
நிலை முற்றியது
கட்டுமானம் 1990
கூரை 770 அடி (235 மீட்டர்)
மாடிகள்t 50
நிறுவனங்கள்
Architect ஜோன்சன்/பர்கீ ஆர்க்கிட்டெக்ட் நிறுவனம்
Developer Cousins Properties
உரிமையாளர் Cousins Properties

மிகவும் அழகிய தோற்றம் கொண்ட இக் கட்டிடம், 1991, மற்றும் 1998 ஆம் ஆண்டுகளுக்கான போமா (BOMA) விருதைப் பெற்றது. இதன் இரண்டு கோபுரங்களினதும் முகப்புகளுக்கு "ரோசா தாந்தே" எனும் கருங்கல் பலகைகள் பதிக்கப்பட்டுள்ளன. யன்னல்கள், சாம்பல் நிற கண்ணாடிகளால் ஆனவை. ஒவ்வொரு கோபுரமும், இரவில் ஒளியூட்டப் படுகின்ற உச்சிகளைக் கொண்டுள்ளன.

கட்டிடக்கலை நிறுவனங்களான கெண்டால்/ஹீற்றன் அசோசியேற் நிறுவனமும், ஜோன்சன்/பர்கீ ஆர்க்கிட்டெக்ட் நிறுவனமும் இக்கட்டிடத்தை வடிவமைத்துள்ளன. இக்கட்டடம் முன்னாள் முக்கிய விடுதியாகிய மஜஸ்டிக் விடுதி இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
191 Peachtree Tower
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=191_பீச்ட்றீ_கோபுரம்&oldid=2067965" இலிருந்து மீள்விக்கப்பட்டது