1947 பஞ்சாப்பில் இந்துக்கள், சீக்கியர்கள் மீது முசுலிம் லீக்கின் தாக்குதல் (நூல்)
1947-இல் பஞ்சாப் பகுதியில் இந்து மற்றும் சீக்கியர்கள் மீதான முஸ்லீம் லீக்கின் தாக்குதல்கள் என்ற நூலை எழுதியவர் குருபச்சன் சிங் தாலிப் ஆவார். இந்நூல் 1950-ஆம் ஆண்டில், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவால் வெளியிடப்பட்டது.[1]
இந்நூலில், இந்தியப் பிரிவினையின் போது, 1947-ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு புதிய சுதந்திர நாடுகள் உருவான போது, இந்து - சீக்கிய மக்கள் மீது, பாகிஸ்தான் நாட்டின் முஸ்லீம் லீக் அரசியல் கட்சியினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து விளக்குகிறது.
பாகிஸ்தான் நாட்டின் மேற்கு பஞ்சாப், சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வாழ்ந்த சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்கும், பாகிஸ்தான் நாட்டில் தொடர்ந்து வாழ, முஸ்லீம் லீக் கட்சியினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்ட நிலையில், விடுதலை இந்தியாவை நோக்கி அகதிகளாக புறப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், தாக்குதல்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது
நூல் குறித்தான விமர்சனங்கள்
தொகுஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர், இஸ்தியாக் அகமது என்பவர் இந்நூலை ஆராய்ந்து, நடந்த சம்பவங்களை சரிபார்த்து அறிக்கையாக வழங்கியுள்ளார். [2]
இதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Muslim League Attack on Sikhs and Hindus in the Punjab 1947
- ↑ 'Forced Migration and Ethnic Cleansing in Lahore in 1947: Some First Person Acoounts', in Ian Talbot & Shinder Thandi (eds), People on The Move, Punjabi Colonial, and Post-Colonial Migration, Oxford University Press 2004
வெளி இணைப்புகள்
தொகு- Ebook version of the text
- Select Research Bibliography on the Partition of India, Compiled by Vinay Lal, Department of History, UCLA; University of California at Los Angeles list
- A select list of Indian Publications on the Partition of India (Punjab & Bengal); University of Virginia list
- What Really Happened in 1947 ? An Open Letter to Khushwant Singh