சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு

(சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு (Shiromani Gurdwara Parbandhak Committee, பஞ்சாபி மொழி: ਸ਼੍ਰੋਮਣੀ ਗੁਰਦੁਆਰਾ ਪ੍ਰਬੰਧਕ ਕਮੇਟੀ, சுருக்கமாக எஸ்ஜிபிசி) பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேச மாநிலங்களிலும் நடுவண் ஆட்பகுதியான சண்டிகரிலும் அமைந்துள்ள சீக்கிய கோயில்களான குருத்துவாராக்களையும் பிற சீக்கிய வழிபாட்டுத் தலங்களையும் மேலாண்மை செய்யும் பொறுப்புள்ள சட்டப்படியான இந்திய அமைப்பாகும்.[1] எஸ்ஜிபிசி அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலையும் நிர்வகிக்கிறது. தில்லியிலுள்ள குருத்துவாராக்களை மேலாண்மை செய்ய தில்லி குருத்துவாரா மேலாண்மை செயற்குழு தனியாக உள்ளது.

இந்த செயற்குழுக்களின் அலுவலர்கள் சீக் குருத்துவாரா சட்டம், 1925 வரையறுத்துள்ளபடி 18 அகவைக்கு மேலான ஆண்,பெண் சீக்கியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஸ்ஜிபிசி உறுப்பினர்களை பொற்கோவிலில் கூடும் சீக்கிய மாநாடு தேர்ந்தெடுக்கிறது. இந்த தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இது சீக்கிய நாட்டின் நாடாளுமன்றம் எனவும் வர்ணிக்கப்படுகிறது.[1]

எஸ்ஜிபிசியை ஓர் தலைவரும், பொருளாளரும், பொதுச் செயலரும் நிர்வகித்து வருகின்றனர். குருத்துவாராக்களின் பாதுகாப்பு, நிதித்தேவைகள், வசதிகள் மேலாண்மை, சமய நெறிமுறைகளை இச்செயற்குழு மேற்பார்வையிட்டு வருகிறது. ஆயுதங்கள்,ஆடைகள், நூல்கள், சீக்கிய குருமார்களின் எழுத்துக்கள் போன்ற தொல்லியல் சிறப்புமிக்க புனிதப் படைப்புகளை குருத்துவாரா பரபந்தக் கமிட்டி நிர்வகித்து வருகின்றது. சமய வழிபாட்டுத் தலங்களைத் தவிர, எஸ்ஜிபிசி பல கல்வி நிலையங்களையும் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் அறக்கட்டளைகளையும் நடத்தி வருகிறது.

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Shiromani Gurdwara Parbandhak Committee". சீக்கிய விக்கி. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.

வெளி இணைப்புகள்

தொகு