1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1968 Summer Olympics), அலுவல்முறையாக XIX ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள், அக்டோபர் 1968இல் மெக்சிக்கோவின் தலைநகரம் மெக்சிக்கோ நகரத்தில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 18 அக்டோபர் 1963 அன்று, மேற்கு ஜெர்மனியின் பேடன்-பேடனில் நடந்த 60வது பன்னாட்டு இலிம்பிக் கூட்டமைப்பின் அமர்வின்போது நடைபெற்ற ஏலத்தில் டெட்ராய்ட், பியூனஸ் அயர்ஸ் மற்றும் லியோன் ஆகிய நகரங்களை பின்னுக்குத் தள்ளி மெக்சிகோ நகரம் போட்டிகளை நடத்துவதற்கு முந்தியது.[2]

Games of the XIX Olympiad
நிகழ்ச்சிகள்18 உடல் திறன் விளையாட்டுக்களில் 172 போட்டிகள்
துவக்கம்12 அக்டோபர் 1968
நிறைவு27 அக்டோபர் 1968
அரங்குபல்கலைக்கழக ஒலிம்பிக் விளையாட்டரங்கம்
1968 Summer Paralympics
1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா

இலத்தீன் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இதுவாகும். எசுப்பானிய மொழி பேசும் நாடொன்றில் நடத்தப்பட முதல் நிகழ்வும் இதுவேயாகும். ஓர் வளர்ந்து வரும் பொருளாதார நாட்டில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக்கும் இதுவாகும். இந்தப் போட்டிகளில் வழக்கமான சாம்பல் தடகளத்திற்கு மாற்றாக அனைத்து-வானிலை (கெட்டியான) தடகளம் அமைக்கப்பட்டது. அத்துடன் மின்னணு நேரக்கட்டுப்பாடு கருவிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒலிம்பிக்கின் முதல் எடுத்துக்காட்டாகும்.[3]

இலையுதிர்காலத்தில் நடத்தப்பட்ட மூன்றாம் ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இது அமைந்தது. 1956 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு, 1968 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் நடைபெற்ற மூன்றாவது விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 1968 மெக்சிகன் மாணவர் இயக்கம் சில நாட்களுக்கு முன்பு நசுக்கப்பட்டது, எனவே விளையாட்டுகள் அரசாங்கத்தின் அடக்குமுறையுடன் தொடர்புபடுத்தப்பட்டன.

கடைசியாக 1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரை அமெரிக்கா அதிக தங்கம் மற்றும் ஒட்டுமொத்த பதக்கங்களை வென்றது.

முன்னதாக 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் 1964 தோக்கியோ ஒலிம்பிக்கும் அந்நாட்டு இலையுதிர்காலங்களில் நடத்தப்பட்டன. இந்த ஒலிம்பிக் நிகழ்வு மெக்சிக்கோ அரசின் அடக்குமுறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு மெக்சிக்க மாணவர்கள் இயக்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.

பதக்கப் பட்டியல்

தொகு

1968 கோடைக்கால ஒலிம்பிக்கில் மிகுந்தப் பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகள்: ஏற்று நடத்திய மெக்சிக்கோ ஒவ்வொருவகைப் பதக்கத்திலும் மூன்று பதக்கங்களை வென்றது (3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்).

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 45 28 34 107
2   சோவியத் ஒன்றியம் 29 32 30 91
3   சப்பான் 11 7 7 25
4   அங்கேரி 10 10 12 32
5   கிழக்கு ஜேர்மனி 9 9 7 25
6   பிரான்சு 7 3 5 15
7   செக்கோசிலோவாக்கியா 7 2 4 13
8   மேற்கு செருமனி 5 11 10 26
9   ஆத்திரேலியா 5 7 5 17
10   ஐக்கிய இராச்சியம் 5 5 3 13
15   மெக்சிக்கோ (நடத்திய நாடு) 3 3 3 9

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
மெக்சிக்கோ நகரம்

XIX ஒலிம்பியாடு (1968)
பின்னர்


  1. International Olympic Committee(9 October 2014). "Factsheet - Opening Ceremony of the Games of the Olympiad". செய்திக் குறிப்பு.
  2. "IOC Vote History". Archived from the original on 25 May 2008. பார்க்கப்பட்ட நாள் 11 June 2008.
  3. "Omega, the Olympics, and the innovations required to time the Earth's Best". SecondTime (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-24.