1983–84 சந்தோசு கோப்பை

1983–84 சந்தோசு கோப்பை (1983–84 Santosh Trophy) கால்பந்தாட்ட போட்டியானது 40 ஆவது ஆண்டாக நடைபெற்ற போட்டியாகும். சந்தோசு கோப்பை போட்டி இந்தியாவில் கால்பந்தாட்டத்திற்காக மாநிலங்களுக்கிடையில் நடத்தப்படும் முக்கியமான போட்டியாகும். 1984 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இப்போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி கோவா அணி இரண்டாவது முறையாக இக்கோப்பையை வென்றது. [1] கோவா அணியைச் சேர்ந்த அர்னால்டு ரோத்ரிகியூசு போட்டியின் சிறந்த முன்கள வீர்ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே அணியைச் சேர்ந்த கெமிலோ கொன்சல்வெசு போட்டியின் சிறந்த கால்பந்தாட்ட வீர்ர் என்ற சிறப்பைப் பெற்றார். [2] இலக்குக் காவலர் பிரமானந்து சங்வாக்கர் கோவா அணியின் தலைவராக இருந்தார். இறுதிப் போட்டியில் எதிரணியை புள்ளிகள் எதுவும் எடுக்கவிடாமல் இவர் இறுதி ஆட்டத்தை முடித்தார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. Sengupta, Somnath (27 April 2014). "Legends Of Indian Football : Brahmanand Sankhwalkar". thehardtackle.com. Archived from the original on 2014-04-30. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
  2. "Football: Teamwork gives Goa the Santosh Trophy". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 12 July 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
  3. Chandran, M. R. Praveen (18 March 2017). "'Standard of football in national c'ship falling', feels former goalkeeper Brahamanand Sankhwalkar". Sportstarlive (in ஆங்கிலம்). Sportstar. Archived from the original on 12 July 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1983–84_சந்தோசு_கோப்பை&oldid=3111610" இலிருந்து மீள்விக்கப்பட்டது