1999 ஒடிசா புயல்

1999 ஒடிசா புயல் ( இந்திய வானிலை ஆய்வுத்துறை இட்ட பெயர் BOB 06,[1][2] ) என்பது வட இந்திய பெருங்கடலில் உருவாகிய மிகப்பெரிய வெப்பமண்டல புயலாகும். இது இப்பகுதியைத் தாக்கிய மிகவும் அழிவுகரமான புயலாக இருந்தது.

1999  ஒடிசா புயல் 25 அக்டோபர் அன்று அந்தமான் கடலில், புயலாக உருவாகியது. பின் மேற்கு-வட மேற்கு நோக்கி நகரத் துவங்கியப் புயல் தொடர்ந்ந்து வலு அடைந்துக் கொண்டே இருந்தது. பின் 28 அக்டோபர் அன்று சாதகமான சூழலில் மிகவும் தீவிரம் அடைந்து அதி தீவிரப் புயலாக உருமாறியது.

அடுத்த நாளில் 260 கீமீ / ம (160 மைல்/ம) வேகத்தில் காற்று வீசியது மற்றும் 912 பார் என குறைந்த அழுத்தம் பதிவானது. இப்புயல் ஒடிசாவில் அக்டோபர் 29 தேதி கரையைக் கடக்கத்தொடங்கியது. தொடர்ச்சியான நில பரவல் மற்றும் வறண்ட காற்று காரணமாக புயல் பலவீனம் ஆனது. புயல் நவம்பர் 4 இல் வங்காள விரிகுடாவில் மறைந்தது.

தாக்கம்

தொகு

மியான்மர் மற்றும் பங்களாதேஷ்

தொகு

மியான்மரில், 10 மக்கள் புயலில் கொல்லப்பட்டனர் மற்றும் 20,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.[3]

பங்களாதேஷின் தெற்கே கடந்து, 1999 ஒடிசா புயலின் வடக்குப் பகுதி நாடெங்கும் வீசியடித்தது. இப்புயலின் காரணமாக பங்களாதேஷில் இரண்டு பேர் இறந்தனர்.[4]

இந்தியா

தொகு

ஒடிசா மாநிலத்தைத் தாக்கிய இப்புயல், 20ஆம் நூற்றாண்டில் ஒடிசாவைத் தாக்கிய மிக கடுமையானப் புயலாகும்.[5]

ஒடிசாவின் பன்னிரெண்டு மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன. இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இவற்றில், ஜகத்சிங்பூரில் உள்ள இராஸ்மா மற்றும் குஜாங்க் ஊராட்சிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

புயல் காரணமாக மொத்தம், 12.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; புயல் இறப்பு எண்ணிக்கை கணிசமாக மாறுபட்டன. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் படி சுமார் 9,887  இப்புயலில் கொல்லப்பட்டனர், மேலும் 40 பேர் காணாமல் போனவர்கள் மற்றும் 2,507 பேர்   காயமடைந்தனர். இந்த மரணங்கள் பெரும்பாலானவை ஜகத்சிங்பூரில் நிகழ்ந்தன. இந்த மாவட்டத்தில் மட்டும் 8,119   கொல்லப்பட்டனர்.[1] EM-DAT பேரழிவு தரவுத்தளம் புயலில் 10,915 மக்கள் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடுகிறது .[6] இருப்பினும், மற்ற மதிப்பீடுகள் இறப்பு எண்ணிக்கை 30,000 ஆக உயர்ந்திருக்கக்கூடும் என்று தெரிவித்தது. புயலின் விளைவுகள் 14,643 கிராமங்கள் மற்றும் 97 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1.6 மில்லியன் வீடுகள் சேதமடைந்தன .[1] இப்புயலில் மட்டும் 2.5   மில்லியன் மக்கள் சிக்கிக்கொண்டு இருந்தனர்.[5] மொத்தமாக இந்த புயலினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 4.4444 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிட்டுள்ளனர்.

வெளிநாடுகளின் பங்களிப்பு

தொகு
நாடு பங்களிப்பு
(USD) [note 1]
ஆஸ்திரேலியா $1,91,700
கனடா $2,03,964
டென்மார்க் $64,361
ஐரோப்பிய ஒன்றியம் $21,02,000
பின்லாந்து $1,76,955
ஜெர்மனி $2,34,447
நெதர்லாந்து $2,38,554
நியூசிலாந்து $99,823
ஸ்வீடன் $1,21,959
சுவிச்சர்லாந்து $8,45,236
ஐக்கிய ராஜ்யம் $13,00,000
அமெரிக்கா $74,82,000
மொத்த $1,30,60,999

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Report on Cyclonic Disturbances Over North Indian Ocean During 1999 (PDF). India Meteorological Department (Report). RSMC-Tropical Cyclones New Delhi. February 2000. pp. 50–64. பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.
  2. McPherson, Terry; Stapler, Wendell (2000). 1999 Annual Tropical Cyclone Report (PDF). Naval Oceanography Operations Command (Report). Pearl Harbor, Hawaii, United States: Joint Typhoon Warning Center. pp. 154–159. Archived from the original (PDF) on 24 December 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.
  3. International Federation of Red Cross And Red Crescent Societies (30 October 1999). Orissa, India: Cyclone Information Bulletin No. 1 (Report). ReliefWeb. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
  4. United Nations Office for the Coordination of Human Affairs (29 October 1999). Bangladesh/India – Cyclone OCHA Situation Report No. 2 (Situation Report). Geneva, Switzerland: ReliefWeb. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
  5. 5.0 5.1 . 
  6. Centre for Research on the Epidemiology of Disasters (17 November 1999). "EM-DAT". Brussels, Belgium: Université catholique de Louvain. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.

வெளி இணைப்புகள்

தொகு
  1. Values converted to United States dollar via Oanda using 29 October 1999 exchange rates
"https://ta.wikipedia.org/w/index.php?title=1999_ஒடிசா_புயல்&oldid=4113369" இலிருந்து மீள்விக்கப்பட்டது