2,2,2-டிரைகுளோரோயெத்தனால்

2,2,2-டிரைகுளோரோயெத்தனால் (2,2,2-Trichloroethanol) என்பது C2H3Cl3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். 2,2,2-முக்குளோரோயெத்தனால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. எத்தனாலுடன் தொடர்புடைய இச்சேர்மத்தின் கட்டமைப்பில் எத்தனாலின் 2 ஆம் நிலையில் உள்ள ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக குளோரின் அணுக்கள் இடம் பிடித்திருக்கும். குளோரால் ஐதரேட்டு, குளோரோபியூட்டனால் போன்ற முன்னோடி மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகளையே இச்சேர்மத்தின் மருந்தியல் சார் விளைவுகள் ஒத்திருக்கின்றன. வரலாற்றில் இச்சேர்மம் அறிதுயில் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது [1]. அறிதுயில் மருந்தான டிரைகுளோஃபோசு (டிரைகுளோரோயெத்தில் பாசுபேட்டு) உட்செலுத்தும்போது 2,2,2-டிரைகுளோரோயெத்தனாலாக வளர்சிதை மாற்றமடைகிறது. மிகையான பயன்பாட்டால் சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம் [2].

2,2,2-டிரைகுளோரோயெத்தனால்2,2,2-Trichloroethanol
2,2,2-Trichloroethanol
2,2,2-Trichloroethanol
2,2,2-Trichloroethanol
2,2,2-Trichloroethanol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2,2-டிரைகுளோரோயெத்தனால்
இனங்காட்டிகள்
115-20-8 Y
ChEBI CHEBI:28094 Y
ChEMBL ChEMBL1171 Y
ChemSpider 7961 Y
InChI
  • InChI=1S/C2H3Cl3O/c3-2(4,5)1-6/h6H,1H2 Y
    Key: KPWDGTGXUYRARH-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H3Cl3O/c3-2(4,5)1-6/h6H,1H2
    Key: KPWDGTGXUYRARH-UHFFFAOYAW
IUPHAR/BPS
2293
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C07490 Y
  • ClC(Cl)(Cl)CO
UNII AW835AJ62N Y
பண்புகள்
C2H3Cl3O
வாய்ப்பாட்டு எடை 149.40 கி/மோல்
அடர்த்தி 1.55 கி/செ.மீ3
உருகுநிலை 17.8 °C (64.0 °F; 290.9 K)
கொதிநிலை 151 °C (304 °F; 424 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. The Merck Index, 13th Edition.
  2. S. Budavari; M. O'Neil; Ann Smith; P. Heckelman; J. Obenchain (15 March 1996). The Merck Index (12th print ed.). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-911910-12-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,2,2-டிரைகுளோரோயெத்தனால்&oldid=3995840" இலிருந்து மீள்விக்கப்பட்டது