2,6-இருகுளோரோபிரிடின்

வேதிச் சேர்மம்

2,6-இருகுளோரோபிரிடின் (2,6-Dichloropyridine) என்பது C5H3Cl2N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம ஆலைடு சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மப் பொருளாக 2,6-இருகுளோரோபிரிடின் காணப்படுகிறது. இருகுளோரோபிரிடினின் ஆறு மாற்றிய வடிவங்களில் ஒன்றாக 2,6-இருகுளோரோபிரிடினும் அறியப்படுகிறது. நுண்ணுயிரிகளை அழிக்கவும் நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படும் மருந்து வகையான எனோக்சசின் என்ற மருந்தை தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக 2,6-இருகுளோரோபிரிடின் பயன்படுகிறது.[1]

2,6-இருகுளோரோபிரிடின்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,6-இருகுளோரோபிரிடின்
இனங்காட்டிகள்
2402-78-0
ChEMBL ChEMBL3561947
ChemSpider 16095
EC number 219-282-3
InChI
  • InChI=1S/C5H3Cl2N/c6-4-2-1-3-5(7)8-4/h1-3H
    Key: FILKGCRCWDMBKA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16989
  • C1=CC(=NC(=C1)Cl)Cl
UNII WM26PC2SBW Y
பண்புகள்
C5H3Cl2N
வாய்ப்பாட்டு எடை 147.99 g·mol−1
உருகுநிலை 86–89 °C (187–192 °F; 359–362 K)
கொதிநிலை 211–212 °C (412–414 °F; 484–485 K)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H315, H319, H335
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

2,6-இருகுளோரோபிரிடினனை குளோரின் உடன் பிரிடீனை சேர்த்து நேரடியாக வினை புரியச் செய்வதன் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் 2-குளோரோபிரிடீன் ஓர் இடைநிலை வேதிப்பொருளாகும்.[1]

பாதுகாப்பு

தொகு

சுண்டெலிகளுக்கு வாய்வழியாக 2,6-இருகுளோரோபிரிடின் சேர்மத்தை கொடுக்கும்போது இதன் உயிர் கொல்லும் அளவு 115 மி.கி/கி.கி ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Shimizu, Shinkichi; Watanabe, Nanao; Kataoka, Toshiaki; Shoji, Takayuki; Abe, Nobuyuki; Morishita, Sinji; Ichimura, Hisao (2005), "Pyridine and Pyridine Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_399
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,6-இருகுளோரோபிரிடின்&oldid=3780204" இலிருந்து மீள்விக்கப்பட்டது