2-நைட்ரோதொலுயீன்
2-நைட்ரோதொலுயீன் (2-Nitrotoluene) என்பது CH3C6H4NO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை ஆர்த்தோ-நைட்ரோதொலுயீன் என்றும் அழைக்கலாம். வெளிர் மஞ்சள் நிறத்துடன் ஒரு நீர்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. பல்வேறு சாயங்களை உற்பத்தி செய்யும் செயல்முறையில் ஒரு பன்முக இடைநிலை வேதிப்பொருளாக இச்சேர்ம்ம் பயன்படுகிறது[4].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்-2-நைட்ரோ-பென்சீன்
| |||
வேறு பெயர்கள்
ஆ-நைட்ரோதொலுயீன், ஆ-மெத்தில்நைட்ரோபென்சீன், 2-மெத்தில்நைட்ரோபென்சீன், ஆர்த்தோ-நைட்ரோதொலுயீன்
| |||
இனங்காட்டிகள் | |||
88-72-2 | |||
ChEBI | CHEBI:33098 | ||
ChEMBL | ChEMBL47047 | ||
ChemSpider | 21106144 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
C7H7NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 137.14 g·mol−1 | ||
தோற்றம் | மஞ்சள் நீர்மம்[1] | ||
மணம் | இலேசான, அரோமாட்டிக்[1] | ||
அடர்த்தி | 1.1611கி/செ.மீ−3 @ 19°செல்சியசு [2] | ||
உருகுநிலை | −10.4[2] °C (13.3 °F; 262.8 K) | ||
கொதிநிலை | 222 °C (432 °F; 495 K)[2] | ||
0.07% (20°செல்சியசு)[1] | |||
ஆவியமுக்கம் | 0.1 மி.மீ பாதரசம் (20°செல்சியசில்[1] | ||
-72.28•10−6 செ.மீ3/மோல் | |||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 106 °C; 223 °F; 379 K [1] | ||
வெடிபொருள் வரம்புகள் | 2.2%-?[1] | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
891 மி.கி/கி.கி (வாய்வழி,எலி) 970 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி) 1750 மி.கி/கி.கி (வாய்வழி, முயல்)[3] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 5 பகுதிகள் (30மி.கி/மி3) [தோல்][1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 2 பகுதிகள் (11 மி.கி/மீ3) [skin][1] | ||
உடனடி அபாயம்
|
மில்லியனுக்கு 200 பகுதிகள் [1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுதொலுயீனை -10°செல்சியசு வெப்பநிலையில் நைட்ரோயேற்றம் செய்து 2-நைட்ரோதொலுயீன் தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில் மாற்றியன்களான 2-நைட்ரோ தொலுயீன் மற்றும் 4-நைட்ரோ தொலுயீன் இரண்டும் 2:1 என்ற விகித்த்தில் உருவாகின்றன[4].
வினைகள்
தொகு2-நைட்ரோதொலுயீனை குளோரினேற்றம் செய்யும்போதும் மேற்கண்ட வினை போலவே விளைபொருள்களாக குளோரோநைட்ரோதொலுயீன்களின் இரண்டு மாற்றியன்கள் உருவாகின்றன. சாயங்கள் தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படும் தொலுயிடின் தயாரிப்பில் பெரும்பாலும் 2-நைட்ரோதொலுயீன் பயன்படுத்தப்படுகிறது[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0462". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 2.0 2.1 2.2 Lide DR, ed. (2004). CRC handbook of chemistry and physics: a ready-reference book of chemical and physical data (85 ed.). Boca Ratan Florida: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0485-7.
- ↑ "Nitrotoluene (ஆர்த்தோ-,மெட்டா-, பாரா-மாற்றியன்கள்)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 4.0 4.1 4.2 Gerald Booth (2007). Nitro Compounds, Aromatic. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a17_411.