2-புரோமோபிரிடின்

வேதிச் சேர்மம்

2-புரோமோபிரிடின் (2-Bromopyridine) BrC5H4N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம ஆலைடு சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இந்த கரிம ஆலைடு கரிமத்தொகுப்பு வினைகளில் இடைநிலை வேதிப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 2-அமினோபிரிடினை ஈரசோனியமாக்கல் வினையின் வழியாக புரோமினேற்றம் செய்து 2-புரோமோபிரிடின் தயாரிக்கப்படுகிறது. [1]

2-புரோமோபிரிடின்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-புரோமோபிரிடின்
இனங்காட்டிகள்
109-04-6 Y
ChEBI CHEBI:51574
ChEMBL ChEMBL331374
ChemSpider 7685
EC number 203-641-6
InChI
  • InChI=1S/C5H4BrN/c6-5-3-1-2-4-7-5/h1-4H
    Key: IMRWILPUOVGIMU-UHFFFAOYSA-N
  • InChI=1/C5H4BrN/c6-5-3-1-2-4-7-5/h1-4H
    Key: IMRWILPUOVGIMU-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7973
  • c1ccnc(c1)Br
UNII 7Z7MLC4VD8 Y
பண்புகள்
C5H4NBr
வாய்ப்பாட்டு எடை 158.00
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 194.8 °செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வினைகள்

தொகு

பியூட்டைல் இலித்தியத்துடன் 2-புரோமோபிரிடின் வினைபுரிந்து பல்பயன்பாட்டு[2] வினைப்பொருளான 2-இலித்தியோபிரிடினைத்[3] தருகிறது. பிரித்தியோன் என்ற கரிம கந்தகச் சேர்மத்தை தயாரிக்கவும் 2-புரோமோபிரிடின் பயன்படுகிறது. பொருத்தமான பெராக்சி அமிலத்தைப் பயன்படுத்தி இருபடிநிலை ஆக்சிசனேற்றம் செய்து தொடர்ந்து தயோல் வேதி வினைக்குழுவை சேர்க்கும் பொருட்டு சோடியம் இருதயோனைட்டு அல்லது சோடியம் சல்பைடுடன் சோடியம் ஐதராக்சைடு சேர்த்து இத்தயாரிப்பு வினை மேற்கொள்ளப்படுகிறது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Allen, C. F. H.; Thirtle, John R. "2-Bromopyridine" Organic Syntheses 1946, volume 26, pp. 16-18. எஆசு:10.15227/orgsyn.026.0016
  2. Satinder V. Kessar, Paramjit Singh, Dmitry Zuev, Zhenlei Song, Ya Wu "2-Lithiopyridine" e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis, 2015. எஆசு:10.1002/047084289X.rl025.pub3
  3. Yamamoto, Yasunori; Sugai, Juugaku; Takizawa, Miho; Miyaura, Norio (2011). "Synthesis of Lithium 2-Pyridyltriolborate and ITS Cross-Coupling Reaction with Aryl Halides". Organic Syntheses 88: 79. doi:10.15227/orgsyn.088.0079. 
  4. "1-Hydroxypyridine-2(1H)-thione". Encyclopedia of Reagents for Organic Synthesis. (15 September 2006). John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rh067.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-புரோமோபிரிடின்&oldid=3064495" இலிருந்து மீள்விக்கப்பட்டது