2-மெத்தில்-6-நைட்ரோபென்சாயிக் நீரிலி

வேதிச் சேர்மம்

2-மெத்தில்-6-நைட்ரோபென்சாயிக் நீரிலி (2-Methyl-6-nitrobenzoic anhydride) என்பது C16H12N2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமவேதியியல் அமில நீரிலியான இச்சேர்மம் சைனா வினைப்பொருள் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது [1][2]. இச்சேர்மத்தின் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கார்பாக்சிலிக் அமிலங்கள் மூலக்கூற்றிடை நிர்நீக்க ஒடுக்க வினைகளுக்கு உட்படுகின்றன. சப்பானைச் சேர்ந்த டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் இசாமு சைனா 2002 ஆம் ஆண்டு இச்சேர்மத்தை தயாரித்தார் [3]. 2-மெத்தில்-6-நைட்ரோபென்சாயிக் நீரிலி சேர்மத்தை பொதுவாக எம்.என்.பி.ஏ என்ற சுருக்கெழுத்துகளால் குறிப்பிடுவர்.

2-மெத்தில்-6-நைட்ரோபென்சாயிக் நீரிலி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2-மெத்தில்-6-நைட்ரோபென்சாயில்) 2-மெத்தில்-6-நைட்ரோபென்சோயேட்டு
இனங்காட்டிகள்
434935-69-0
ChemSpider 8648059
InChI
  • InChI=1S/C16H12N2O7/c1-9-5-3-7-11(17(21)22)13(9)15(19)25-16(20)14-10(2)6-4-8-12(14)18(23)24/h3-8H,1-2H3
    Key: YEKPNMQQSPHKBP-UHFFFAOYSA-N
  • InChI=1/C16H12N2O7/c1-9-5-3-7-11(17(21)22)13(9)15(19)25-16(20)14-10(2)6-4-8-12(14)18(23)24/h3-8H,1-2H3
    Key: YEKPNMQQSPHKBP-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10472648
SMILES
  • CC1=C(C(=CC=C1)[N+](=O)[O-])C(=O)OC(=O)C2=C(C=CC=C2[N+](=O)[O-])C
பண்புகள்
C16H12N2O7
வாய்ப்பாட்டு எடை 344.28 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தொகுப்பு தொகு

இவ்வினையாக்கியை செயற்கை வேதி வினைகளில் பயன்படுத்துகிறார்கள். ஐதராக்சி கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து இவ்வினைகள் மூலம் நடுத்தர மற்றும் பெரிய அளவு லாக்டோன்கள் மூலக்கூறிடை வளைய மூடல் வினை வழியாக உருவாகின்றன. இவ்வினை பொதுவாக சைனா பெருலாக்டோனாக்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[4][5]. இவ்வினை அறைவெப்பநிலையில் காரம் அல்லது நடுநிலை நிபந்தனைகளின் கீழாக நடைபெறுகிறது. பெருலாக்டோனாக்க வினை மட்டுமின்றி இவ்வினையாக்கி எசுத்தராக்கல் வினை, அமைடாக்க வினை, பெப்டைடு இணைப்பு வினைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Named Reagents". OChemOnline. Archived from the original on 2017-09-04.
  2. Yahata, K.; Ye, N.; Iso, K.; Naini, S. R.; Yamashita, S.; Ai, Y.; Kishi, Y. (2017). "Unified Synthesis of Right Halves of Halichondrins A–C". J. Org. Chem. 82 (17): 8792–8807. doi:10.1021/acs.joc.7b01283. பப்மெட்:28741352. 
  3. Shiina, I.; Ibuka, R.; Kubota, M. (2002). "A New Condensation Reaction for the Synthesis of Carboxylic Esters from Nearly Equimolar Amounts of Carboxylic Acids and Alcohols Using 2-Methyl-6-nitrobenzoic Anhydride". Chem. Lett. 31 (3): 286. doi:10.1246/cl.2002.286. 
  4. Shiina, I.; Kubota, M.; Oshiumi, H.; Hashizume, M. (2004). "An Effective Use of Benzoic Anhydride and Its Derivatives for the Synthesis of Carboxylic Esters and Lactones: A Powerful and Convenient Mixed Anhydride Method Promoted by Basic Catalysts". J. Org. Chem. 69 (6): 1822–30. doi:10.1021/jo030367x. பப்மெட்:15058924. 
  5. Shiina, I. (2014). "An Adventurous Synthetic Journey with MNBA from Its Reaction Chemistry to the Total Synthesis of Natural Products". Bull. Chem. Soc. Jpn. 87 (2): 196–233. doi:10.1246/bcsj.20130216. 

புற இணைப்புகள் தொகு