2000 அமர்நாத் யாத்ரீகர்கள் படுகொலை

2000 அமர்நாத் யாத்ரீகர்கள் படுகொலைகள், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் இமயமலையில் அமைந்த சிவத்தலமான அமர்நாத்தை தர்சனம் செய்யச் சென்றவர்களில் 89 இந்து சமய யாத்திரீகர்கள் இசுலாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆகஸ்டு மாதம், 2000-ஆம் ஆண்டு 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில், அனந்தநாக் மாவட்டம் மற்றும் தோடா மாவட்டங்களின் வழியாக அமர்நாத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்து பக்தர்களை குறிவைத்து 5 இடங்களில், காஷ்மீர் பிரிவினைவாத இசுலாமிய பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுகளாலும், கையெறிகுண்டு வீச்சுகளாலும் 89 பேர் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் 62 பேர் படுகாயமுற்றனர்.[1]

அமர்நாத் குகையில் யாத்திரீகர்கள்

கொல்லப்பட்டவர்களில் 32 பேர் பகல்கம் அடிவார முகாமில் 2 ஆகஸ்டு 2020 அன்று கொல்லப்பட்டனர், 7 பேர் படுகாயமடைந்தனர்.[2][3][4]முன்னதாக பயங்கரவாதிகள் 1 ஆகஸ்டு 2000 அன்று தோடா மாவட்டத்தின் கிராமத்தின் 11 பொதுமக்களை சுட்டுக் கொன்றனர்.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாச்பாய் உடனடியாக பகல்கம் முகாமிற்கு சென்று அமர்நாத் பக்தர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இந்த படுகொலைகளுக்கு பொறுப்பு ஏற்ற லஷ்கர்-ஏ-தொய்பா எனும் இசுலாமிய பயகரவாத இயக்கத்தை கண்டனம் செய்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Tribune, Chandigarh, India - Main News". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
  2. "Amarnath Yatra devotees have faced repeated terror attacks: Here's the blood-soaked history of pilgrimage" (in en-US). Firstpost. 2017-07-11. http://www.firstpost.com/india/amarnath-yatra-devotees-have-faced-repeated-terror-attacks-heres-the-blood-soaked-history-of-pilgrimage-3799091.html. 
  3. "BBC News | SOUTH ASIA | Amarnath pilgrimage resumes". news.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
  4. "Muslim militants kill 21 Hindu pilgrims in Kashmir" (in en-GB). The Independent. 2000-08-02. https://www.independent.co.uk/news/world/asia/muslim-militants-kill-21-hindu-pilgrims-in-kashmir-5370347.html. 
  5. "A Look At The Bloody History Of Terror Attacks On Amarnath Yatra Pilgrims". Huffington Post India. 2017-07-11. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.