2006 மலேகான் குண்டு வெடிப்புகள்

மலேகான் குண்டு வெடிப்புகள் 2006 செப்டம்பர் 8 ஆம் நாள் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலின் போது 37 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்[1].

இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் இசுலாமியர்களின் புனித இரவான பரா அத் இரவையொட்டி 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கூடி இருந்தனர். மறைந்த தங்களுடைய உறவினர்களுக்காக பிரார்த்தனை நடத்துவதற்காக அவர்கள் வந்து இருந்தனர்.

பள்ளிவாசலில் தொழுகை முடிந்து பிற்பகல் 1:45 மணி அளவில் ஏராளமான பேர் அங்கிருந்து வெளியே வரத் தொடங்கினார்கள். அப்போது பள்ளிவாசலின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

மற்றொரு குண்டு வெடிப்பு

தொகு

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பள்ளிவாசலில் இருந்து கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தைப் பகுதியிலும் 2 குண்டுகள் வெடித்தன. இந்த 2 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் மொத்தம் 37 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்[2][3].

இது தொடர்பாக பஜ்ரங் தள் அமைபைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் ராணுவ அதிகாரி புரோகித், 3 முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதும், அவர்கள் மூலம் குண்டு வெடிப்பு நாசவேலை நடத்தப்பட்டதும் காவல்துறையினரின் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது[4].

மேற்கோள்கள்

தொகு
  1. Blasts Kill Up to 37 in Western India; Dozens Hurt
  2. http://www.nitharsanam.net/2006/09/09/1640?xsid=5465868
  3. Sonawane, Santosh (28 December 2013). "Sadhvi in jail for Malegaon blast - Times Of India". web.archive.org இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104120056/http://articles.timesofindia.indiatimes.com/2008-10-25/india/27909361_1_maharashtra-s-anti-terrorism-squad-ats-abvp.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.