2008 அசாம் குண்டுவெடிப்புகள்

2008 அசாம் குண்டுவெடிப்புகள் என்பது 2008இல் அக்டோபர் 30ஆம் தேதி இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். குவஹாத்தியிலும் புறநகரங்களிலும் வெடித்த குண்டுகளால் குறைந்தது 81 மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 470 மக்கள் படுகாயம் அடைந்தனர். மொத்தத்தில் 18 குண்டுகள் வெடித்தன. அசாம் வரலாற்றிலேயே நிகழ்ந்த தாக்குதல்களில் இதுவே மிகக் கடுமையானது. அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, ஹூஜி, இந்திய முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளும் சந்தேகப்படுகின்றன. அக்டோபர் 2008இல் ஏழு மாநிலங்களில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் இது மூன்றாவது; இதற்கு முன்னர் அகர்தலா மற்றும் இம்பால் நகரங்களிலும் குண்டுத் தாக்குதல்கள் ஏற்பட்டன[1].

2008 அசாம் தொடர் குண்டுவெடிப்புகள்
இடம்அசாம், இந்தியா
நாள்அக்டோபர் 30, 2008
தாக்குதல்
வகை
18 குண்டுவெடிப்புகள்
ஆயுதம்RDX
இறப்பு(கள்)81[1]
காயமடைந்தோர்470[1][2]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA) / ஹூஜி
இந்திய முஜாஹிதீன்[3]

மேற்கோள்கள்தொகு