2009 எப்டி

சிறுகோள்

2009 எப்டி (2009 FD) என்ற 470 மீ விட்டம்[6] உடைய புவியருகு சிறுகோள் 16 மார்ச் 2009[1] அன்று கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது புவியுடன் மோதும் வாய்ப்புகள் உள்ளது.அப்படி மோதும் போது சேதம் அதிகமாக இருக்குமெனப் பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல் காட்டுகிறது. 2009 எப்டி, 27 மார்ச் 2009 அன்று புவிக்கு மிக அருகில் 0.004172 வானியல் அலகு (624,100 கிமீ; 387,800 மைல்கள்)[7][8] தொலைவில் இது கடந்து சென்றது. 24 அக்டோபர் 2010 அன்று மற்றொரு முறை 0.0702 வானியல் அலகுகள் தொலைவில் கடந்து சென்றது.[7]30 நவம்பர் 2013 அன்று பர்னல் வான் ஆய்வுக்கூடம்[9] இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 23 என்று அறிந்தார்கள். ஏப்ரல் 2014 இல் இது 0.1 வானியல் அலகுகள் தொலைவில் கடந்து சென்றது[7]. அப்போது இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 19.3 ஆக இருந்தது.[10] 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது புவியை மீண்டும் புவியை நெருங்கும் போது கோல்ட்ஸ்டோன் விண்வெளி ஆய்வுக்கூடம் இதைப் பற்றி ஆராயும்.[11]

2009 எப்டி
புவியருகு விண்பொருள் 2009 எப்டி
கண்டுபிடிப்பு[1]
கண்டுபிடித்தவர்(கள்) சக்ரா
கண்டுபிடிப்பு நாள் 16 மார்ச் 2009
பெயர்க்குறிப்பினை
சிறு கோள்
பகுப்பு
புவியருகு விண்பொருட்கள்<[2]
காலகட்டம்2013-நவம்பர்-04
(நிலைத்தன்மை=0)[2]
சூரிய சேய்மை நிலை1.7361 வா அ (Q)
சூரிய அண்மை நிலை 0.58960 வா அ (q)
அரைப்பேரச்சு 1.1628 வா அ (a)
மையத்தொலைத்தகவு 0.49296
சுற்றுப்பாதை வேகம் 1.25 ஆண்டு
சராசரி பிறழ்வு 196.02° (M)
சாய்வு 3.1361°
Longitude of ascending node 9.4968°
Argument of perihelion 281.30°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் ~472 மீட்டர்கள் (1,549 அடி)[3][2][4]
நிறை 8.3×1010 கிகி (கருதப்படுகிறது)[4]
சுழற்சிக் காலம் 5.87 மணி[2]
எதிரொளி திறன்0.01 [2]
நிறமாலை வகைசி-வகை[5]
விண்மீன் ஒளிர்மை 22.1[2]

நாசாவின் புவியருகு விண்பொருட்கள் கண்கானிப்பு திட்டத்தில் கீழ் இதன் வானியல் வெண் எகிர்சிதறல் 0.15 என்று அறிந்தார்கள்[4] இதன் படி இது 130 மீ விட்டம் உடையதென மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 2,800,000 டன் நிறை உடையது எனவும் மதிப்பிட்டுள்ளார்கள்[12] .ஆனால் எமி மைந்சர் அகச்சிவப்பு கதிர்மூலம் செய்த ஆய்வில் இது 472 மீ விட்டமும் இதன் வானியல் வெண் எகிர்சிதறல் 0.01 ஆக இருக்க வாய்ப்பு உள்ளதென அறிந்தார்[3][2].

ஜெபிஎல் சிறிய விண்பொருள்கள் தரவுத் தளம், 2009 எப்டி, 22 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு முறை புவியை மிக நெருங்கி வரும் எனவும், 29 மார்ச் 2185 இது புவியுடன் மோத 385 இல் 1 பங்கு வாய்ப்பு உள்ளதாகக் காட்டுகிறது[4]. 2185 இல் இது 0.009 வானியல் அலகு (1,300,000 கிமீ; 840,000 மைல்) புவியை நெருங்கிவரவும் வாய்ப்புகள் உள்ளதாக வரைபடங்கள் காட்டுகிறது[7].இது 29 மார்ச் 2185 அன்று புவி மற்றும் நிலாவை கடப்பதைக் கொண்டு, 2190 இல் இதன் பாதையைத் தீர்மானிக்க முடியும்[7] . 2009 எப்டி புவியின் நிலப்பரப்பின் மீது மோதினால் பேரழிவையும் கடலில் மோதினால் பெரிய சுனாமி அலைகளை உருவாக்கும்.இதன் அளவு பெரியது என்பாதல் இது செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்களின் ஈர்ப்பு விசையால் இதன் பாதையைத் தீர்மானிப்பதில் சிக்கல் உள்ளது.எனவே இது செண்ட்ரி அபாய அட்டவணையின் முக்கிய இடத்தில் உள்ளது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "MPEC 2009-F09 : 2009 FD". IAU Minor Planet Center. 2009-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-01-09. (K09F00D)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "JPL Small-Body Database Browser: (2009 FD)". Jet Propulsion Laboratory. 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-02-10.
  3. 3.0 3.1 Amy Mainzer; Bauer, J.; Grav, T.; Masiero, J. (2014). "The Population of Tiny Near-Earth Objects Observed by NEOWISE". The Astrophysical Journal 784 (2). doi:10.1088/0004-637X/784/2/110. Bibcode: 2014ApJ...784..110M.  (listed as K09F00D)
  4. 4.0 4.1 4.2 4.3 "Earth Impact Risk Summary: 2009 FD". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 2011-01-11. பார்க்கப்பட்ட நாள் 2014-05-01.
  5. Spoto, F.; Milani, A.; Farnocchia, D.; Chesley, S. R.; Micheli; Valsecchi; Perna; Hainaut. Non-gravitational Perturbations and Virtual Impactors: the case of asteroid 2009 FD. 
  6. 6.0 6.1 "Sentry Risk Table". Archived from the original on 2013-05-20. பார்க்கப்பட்ட நாள் 2014-08-28.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 "JPL Close-Approach Data: (2009 FD)". 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-05-01.
  8. Near Earth Asteroid 2009 FD - whilst you were sleeping! (ice in space)
  9. "2009 FD Orbit". IAU Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 2013-12-17.
  10. "2009 FD Ephemerides for 1 April 2014". NEODyS (Near Earth Objects – Dynamic Site). பார்க்கப்பட்ட நாள் 2013-12-17.
  11. Dr. Lance A. M. Benner (2014-03-17). "Goldstone Asteroid Schedule". NASA/JPL Asteroid Radar Research. பார்க்கப்பட்ட நாள் 2014-03-21.
  12. "Earth Impact Risk Summary: 2009 FD (arc=650 days)". Wayback Machine: JPL. 2011-01-11. Archived from the original on 2011-01-11. பார்க்கப்பட்ட நாள் 2014-02-14. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help) (2.3e-03 பரணிடப்பட்டது 2014-02-14 at Archive.today = 1 in 435 chance)
"https://ta.wikipedia.org/w/index.php?title=2009_எப்டி&oldid=3576307" இலிருந்து மீள்விக்கப்பட்டது