2010 ஆர்எஃப்12

சிறுகோள்

2010 ஆர்எஃப்12 (2010 RF12) என்பது ஒரு சிறுகோள் (asteroid) ஆகும். இது 2010, செப்டம்பர் 8 ஆம் நாள் 2112 ஜிஎம்டி மணிக்கு பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் கடந்து சென்றது. இது பூமிக்குக் கிட்டவாக அண்டார்க்டிக்காவின் மேல் 49,088 மைல்கள் உயரத்தில் பூமியைக் கடந்தது[1].

இதன் விட்டம் 20 அடிக்கும் 46 அடிக்கும் இடையில் இருந்ததாக நாசா மதிப்பிட்டுள்ளது[2].

இச்சிறுகோள் 2010 செப்டம்பர் 5 ஆம் நாள் அரிசோனாவின் டூசோன் நகரில் நிறுவப்பட்டுள்ள கட்டலீனா விண்வெளி ஆய்வு மையத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன் 2010 ஆர்எக்சு30 என்ற சிறுகோளும் கடந்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது[3].

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2010_ஆர்எஃப்12&oldid=1356958" இலிருந்து மீள்விக்கப்பட்டது