முதன்மை பட்டியைத் திறக்கவும்

2010 எயிட்டி நிலநடுக்கம்

நடு அமெரிக்காவில் கரிபியன் பகுதியில் அமைந்துள்ள எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே 10 மைல் தொலைவில், ஐந்து மைல் ஆழத்தில் செவ்வாய் சனவரி 13, 2010 அன்று உள்ளூர் நேரம் 1653 (2153 கிரீன்விச்) பெருநிலநடுக்கம் நிகழ்தது. இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் எயிட்டியின் கரையோரப் பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்தப்பகுதியில் (அண்மைநாடான டொமினிகன் ரிபப்ளிக் உள்ளடங்கலாக) மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் 1946 -ல் இசுபானியோலாவில் ஏற்பட்ட 8.1 ரிக்டர் நிலநடுக்கமே; இதனால் ஏற்பட்ட சுனாமியால் 1,790 பேர் இறந்தார்கள். இதற்கு முன்னர் ஹைட்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.

2010 எயிட்டி நிலநடுக்கம்
Haitian national palace earthquake.jpg
சேதமடைந்த அதிபர் மாளிகை
நாள்21:53:09, 12 சனவரி 2010 (UTC) (2010-01-12T21:53:09Z)
நிலநடுக்க அளவு7.0 Mw
ஆழம்10 கிலோமீட்டர்கள் (6.2 mi)
நிலநடுக்க மையம்18°27′05″N 72°26′43″W / 18.4514°N 72.4452°W / 18.4514; -72.4452ஆள்கூறுகள்: 18°27′05″N 72°26′43″W / 18.4514°N 72.4452°W / 18.4514; -72.4452
பாதிக்கப்பட்ட பகுதிகள் எயிட்டி
அதிகபட்ச செறிவுMM X[1]
பின்னதிர்வுகள்35[2]
உயிரிழப்புகள்Total unknown, estimated to be tens of thousands to more than 100,000[3][4][5]

பாதிப்புகள்தொகு

 
போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரின் நிலநடுக்கத்தால் சேதமடைந்த ஒரு பகுதி

இதுவரை 50,000 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 100,000 லிருந்து 200,000 வரை மக்கள் இறந்திருக்கலாம் என்றும் எயிட்டியின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார் [6]. பான் அமெரிக்க சுகாதார அமைப்பு இறப்பு எண்ணிக்கை 200,000 வரை இருக்கலாம் என கணித்துள்ளது. 300,000 மக்கள் வீடு இழந்துள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.

அதிபர் மாளிகை, மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள் உட்பட பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நாட்டின் தொலை தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிலவியல் காரணங்கள்தொகு

 
1906 சான் பிரான்சிஸ்கோவில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்திய சான் ஆண்ட்ரியாஸ் பிளவுப்பெயர்ச்சி - இது ஒரு திருப்பு பிளவுப்பெயர்ச்சி

என்ரிகீயோ-ப்ளாண்டைன் கார்டன் பிளவுப்பெயர்ச்சி மண்டலம் (Enriquillo-Plantain Garden Fault Zone) என்ற அமைப்பில் ஏற்பட்ட சிதைவே (rupture) இதன் நிலவியல் காரணங்களுள் முதன்மையானதாகும். கரீபியப் புவிமேலோடும் வட அமெரிக்க புவிமேலோடும் கிழக்கு-மேற்காக ஒன்றையொன்று உராய்ந்து செல்லும் போது ஏற்படும் திருப்பு பிளவுப்பெயர்ச்சியினாலேயே (strike-slip fault) எயிட்டி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.[7]

இந்தப்பகுதியில் பெரிய நிலநடுக்கங்கள் அரிதே - ஏனெனில் கரீபியப் புவிமேலோடு ஒரு சிறிய அளவிலான மேலோடுதான் - இருப்பினும் சனவரி 12 நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியதற்கு மற்றொரு முக்கிய காரணம் அதன் செறிவு. (முதல் காரணம் அதன் ரிக்டர் அளவு எண்மதிப்பு - 7.0) குறிப்பு:நிலநடுக்கம் எவ்வளவு தீவிரமாக உணரப்பட்டது என்பதன் அளவே செறிவு ஆகும்.

2008-ஆம் ஆண்டிலேயே கணிக்கப்பட்டது எயிட்டி பேரழிவு நிலநடுக்கம்தொகு

 
நிலநடுக்கத்தின் தாக்கத்தை காட்டும் படம் (ஐக்கிய அமெரிக்க புவியியல் சேவை)

டொமினிகன் குடியரசில் மார்ச் 2008 நடைபெற்ற கருத்தரங்கில் ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான நிலநடுக்கம் விரைவில் (ஹெய்ட்டியில்) ஏற்படக்கூடும் என்று கணிப்பு எரிக் கேலே (Eric Calais), பால் மான் (Paul Mann) ஆகிய அறிவியலாளர்களால் எடுத்துரைக்கப்பட்டது. அவர்கள் உலகளாவிய இடங்காட்டு அமைப்பைக் (GPS) கொண்டு மேற்கொண்ட ஆய்வில் என்ரிகீயோ பிளவுப்பெயர்ச்சி அமைப்பில் கண்ட உயரும் பார அளவுகளை (rising stress) வைத்து இவ்வாறு கணித்துள்ளனர். ஹெய்ட்டியின் பிரதமர் உள்பட பல முக்கிய அதிகாரிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தனர். இருப்பினும், மிகக்குறுகிய காலத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதாலும் ஹெய்ட்டி ஏழை நாடாக இருந்ததால் முன்னேற்பாடு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடியாததாலும் மேலும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித்தவித்த ஹெய்ட்டியால் இந்த கணிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க இயலவில்லை.[8]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு