2010 மும்பை எண்ணெய் கசிவு
2010 மும்பை எண்ணெய் கசிவு (2010 Mumbai oil spill) பனாமா நாட்டைச் சேர்ந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்டது. [3][4] 2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.50 மணியளவில் தெற்கு மும்பையின் நவ சேவா துறைமுகத்திலிருந்து வெளியே சென்றுகொண்டிருந்த எம்.வி. எம்.எசு.சி சித்ரா என்ற கப்பலும், துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த எம்.வி. கலீசியா 3 என்ற சரக்குக் கப்பலும் மும்பைக்கு அருகில் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து நிகழ்ந்தது. [5][6] எம்.வி. எம்.எசு.சி சித்ரா என்ற கப்பல் சேதமடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்து விட்ட காரணத்தால் கப்பலில் இருந்த 1219 சரக்குப் பெட்டகங்களில் கிட்டத்தட்ட 300 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் கடலில் மூழ்கிவிட்டன.[7] கப்பல் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2010 ஆண்டு சூலை மாதம் 18 அன்று கலீசியா 3 கப்பல் வேறொரு விபத்தில் சிக்கியதாகவும் அறியப்படுகிறது. [8]
மும்பை எண்ணெய் கசிவு Mumbai oil spill | |
---|---|
அமைவிடம் | மும்பை துறைமுகம், அரபிக்கடல் |
ஆள்கூறுகள் | 18°54′18″N 72°52′34″E / 18.9051°N 72.8760°E |
நாள் | 7 ஆகத்து 2010 |
விபத்து | |
காரணம் | எம்.வி. எம்.எசு.சி சித்ரா, எம்.வி. கலீசியா 3 கப்பல்கள் மோதல் |
உயிரிழப்புகள் | இல்லை |
கசிவுப் பண்புகள் | |
பருமன் | 2,900 barrels (460 m3) (400 tonnes)[1] – 5,900 barrels (940 m3) (800 tonnes)[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ NDTV correspondent (9 August 2010). "Oil leak off Mumbai coast has stopped: Coast Guard sources". NDTV இம் மூலத்தில் இருந்து 11 September 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100911082217/http://www.ndtv.com/article/india/oil-spill-scare-on-maharashtra-shore-43039. பார்த்த நாள்: 12 August 2010.
- ↑ Sukhada Tatke (15 January 2011). "Oil spill damage to soil irreversible: Report". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104123526/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-15/mumbai/28360295_1_collision-of-panamanian-vessels-oil-spill-mv-khalijia. பார்த்த நாள்: 24 January 2011.
- ↑ J Dey (8 August 2010). "Ships collide near Mumbai". Mid-Day (MiD DAY Infomedia Ltd.) இம் மூலத்தில் இருந்து 21 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100821062021/http://www.mid-day.com/news/2010/aug/080810-mv-khalijia-ship-collision.htm. பார்த்த நாள்: 12 August 2010.
- ↑ "Khalijia 3 - VesselTracker". பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
- ↑ "Efforts on to check oil spill, Chavan undertakes aerial survey". Deccan Chronicle. 9 August 2010 இம் மூலத்தில் இருந்து 11 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811233916/http://www.deccanchronicle.com/national/oil-spill-continues-3rd-day-225. பார்த்த நாள்: 9 August 2010.
- ↑ PTI, Mumbai (9 August 2010). "Mumbai oil spill continues, 300 containers tumbled into water so far". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811095808/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/mumbai/28319409_1_oil-spill-msc-chitra-cargo-ships. பார்த்த நாள்: 10 August 2010.
- ↑ "விபத்துக்குள்ளான கப்பல் மூழ்குகிறது". தினமணி. https://www.dinamani.com/india/2010/aug/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-224338.html. பார்த்த நாள்: 31 May 2021.
- ↑ Naik, Yogesh; Sharad Vyas (8 August 2010). "Major oil spill fears as ships collide off Mumbai coast". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811095938/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-08/mumbai/28286525_1_mumbai-coast-mumbai-port-trust-crew-members. பார்த்த நாள்: 10 August 2010.