2011 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்

2011 ம் ஆண்டிற்கான இந்திய நிதியறிக்கையானது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால் பெப்ரவரி 28, 2011 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:

வரிகள்

தொகு
  • ஆயத்தீர்வை 10 சதவிகிதமாக இருக்கும். சென்வாட் வரியில் மாற்றம் இல்லை
  • தனிநபருக்கான வருமான உச்சவரம்பு 1,60,000 ரூபாயிலிருந்து 1,80,000ம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது
  • மூத்த குடிமக்களுக்கான தகுதி வயது 65லிருந்து 60 ஆக குறைக்கப்படுகிறது. 2.50 லட்சம் வரைக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது
  • 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 5.00 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது
  • உள்நாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் சர்சாரசு 7.5 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது
  • சுகம் என்ற புதிய வருமான வரி தாக்கல் முறை குறைந்த வருவாய் உள்ளவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும்
  • மாற்று வரிகள் (Alternate Tax) 18 சதவிகிதத்திலிருந்து 18.5 சதவிகிதமாக உயர்த்தப்படும்
  • நேரடி வரி விதிப்பின் மூலம் 115 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது
  • சேவை வரி 10 சதவிகிதமாக நீடிக்கும்
  • புதிய சுங்கம் மற்றும் ஆயத்தீர்வை மூலம் 73 பில்லியன் ரூபாய் வரவாய் கிடைக்கும்
  • இரும்பு தாதுவிற்கான ஏற்றுமதி வரி 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 130 பொருட்டகளுக்கு ஒரு சதவிகித மத்திய ஆயத்தீர்வை புதிதாக விதிக்கப்படும். அடிப்படை உணவு, எரிபொருள், மற்றம் அலங்கார கற்கள் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
  • சுங்க வரியின் உச்சவரம்பு 10 சதவிகிதமாக நீடிக்கும்
  • விவசாய இயந்திரங்களுக்கான கசுடம்சு டூட்டி 5 சதவிகிதத்திலிருந்து 4.5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது
  • 1000 ரூபாயக்கு மேல் வாடகை உள்ள ஆடம்பர தங்கும் விடுதிகள், குளிரூட்டப்பட்ட மதுபான நிறுவனங்கள், சில மருத்துவமனைகள், மருத்துவ கோதனை நிலையங்களுக்கு சேவை வரி விதிக்கப்படுகின்றது
  • குறைந்த கட்டண விமான பயனத்திற்கான சேவை வரி உள்நாட்டிற்கு ரூபாய் 50ம் வெளிநாட்டிற்க் ரூபாய் 200ம் அதிகரிக்கப்பட்டுள்ளது
  • இணையம் மூலம் வரி செலுத்தும் முறை வலுப்படுத்தப்படும்.
  • காட்சிப்படுத்த இறக்குமதி செய்யப்படும் கலைப்பொருட்களுக்கான சுங்க விலக்கு அரசு நிறுவனங்களுக்கு இருப்பது தனியார் நிறுவனங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகின்றது.

சலுகைகள்

தொகு
  • மாத வருமானம் பெறும் சம்பளதாரர்களுக்கு நிறுவனங்களே வரியை பிடித்தம் செய்வதால் தனியாக வரி ஆவணங்கள் தாக்கல் செய்யவேண்டியதில்லை.
  • சலுகை முன்வரைவு 2011-2012 1.44 டிரிலியன் ரூபாயாகும்
  • உணவு சலுகை முன் வரைவுக்கு 6.5.7 பில்லியன்
  • திருத்தியமைக்கப்பட்ட உணவு சலுகை முன்வரைவுக்கு 606 பில்லியன்
  • உரங்களுக்கான சலுகைகளுக்கு 500 பில்லியன்
  • திருத்தியர்க்கப்பட்ட உர மானியம் முன் வரைவுக்கு 550 பில்லியன்
  • பெட்ரோலிய பொருட்களுக்காடன மானிய முன் வரைவு 236.4 பில்லியன்
  • திருத்தியமைக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களுக்காடன மானிய முன் வரைவு 384 பில்லியன
  • இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் 200 பில்லியனாக இருக்கும்

வருவாய் பற்றாக்குறை

தொகு
  • 2010-2011 ல் வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவிகிதமாக இருந்தது
  • 2011-2012 ல் வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவிகிதமாக இருக்கும்
  • 2012-2013 ல் வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

செலவுகள்

தொகு
  • 2011-2012 க்கான மொத்த செலவீனம் 12.58 டிரிலியன் ரூபாயாக இருக்கும்
  • திட்டமிடப்பட்ட செலவு 2011-2012ல் 4.41 டிரிலியன் ரூபாயாக இருக்கும். இது கழிந்த வருடத்தை விட 18.3 சதவிகிதம் அதிகமாகும்

வருவாய்

தொகு
  • மொத்த வருவாய் 9.32 டிரிலியன் ரூபாய்
  • வரி தவிர இதர வருவாய் 1.25 டிரிலியன் ரூபாய்
  • நிறுவன வரி மூலம் வருவாய் 3.6 டிரிலியன்
  • 2011-2012ல் வரி மற்றும் மொத்த வருமானம் விகிதாச்சாரம் 10.4 சதவிகிதமாகும். இது 2012-2013ல் 10.8 சதவிகிதமாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • சுங்க வரி மூலம் 1.52 டிரிலியன்
  • தொழிற்சாலை நுழைவு வரி 1.64 சதவிகிதம்
  • சேவை வரி மூலம் வருவாய் 820 பில்லியன்
  • மறைமுக வரு மூலம் வருவாய் அதிக வருவாய்் 113 பில்லியன்
  • சேவை வரி மூலம் வாபம் 40 பில்லியன் அதிக வருவாய்

வளர்ச்சி மற்றும் பணவீக்கம்

தொகு
  • வளர்ச்சி விகிதம் 8 சதவிகிதமாக இருக்கும். 0.25 சதவிகிதம மாற்றங்களுக்குட்பட்டது
  • 2011-2012 க்கான பணவீக்கம் குறைவாக இருக்கும்் ்

தனியார்மயம்

தொகு
  • அரசுக்கு பங்குகளை விற்பதன் மூலம் 400 பில்லியன் ரூபாய் கிடைக்கும்
  • பொது துறை வங்கிகளின் 51 சதவிகித பங்குகளை அரசே வைத்திருக்கும்

கடன்

தொகு
  • 2010-11ல் அரசு 3.45 டிரிலியன் ரூபாய் சந்தையிலிருந்து கடன் வாங்கும்
  • 2011-12ல் அரசு 3.43 டிரிலியன் ரூபாய் சந்தையிலிருந்து கடன் வாங்கும்
  • 2011-201ல் அரசு மொத்தம் 4.17 டிரிலியன் ரூபாய் கடன் வாங்கும்
  • 201-2011ல் திருத்தியமைக்கப்பட்ட கடன் 4.77 டிரிலியன் ரூபாய்

திட்டங்கள்

தொகு
  • உள்கட்டமைப்புக்கான கடன் அட்டைகள் உருவாக்கப்படும்
  • அன்னிய நேரடி முதலீடு தளர்த்தப்படும்
  • உணவு பாதுகாப்பு சட்ட முன் வரைவு இந்த ஆண்டு கொண்டு வரப்படும்
  • செபியில் பதிவு செய்யப்பட்ட பரசுபர நிதியில் வெளிநாட்டு முதலீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்
  • வெளிநாட்டு நிறுவனங்கள் 5 வருட இந்திய உள்கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்வது 20 பில்லியன் டாலராக உயர்த்தபடுகிறது
  • தனித்து இயங்கும் கடன் மேலாண்மை அலுவலகம் உருவாக்கப்படும். பொது கடன் சட்டமுன் வரைவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
  • காப்பீடு, ஓய்வூதிய பண மேலாண்மை, வங்கி ஆகியவற்றிற்கான முன்வரைவு அறிமுகப்படுத்தப்படும்
  • GST ஐ அரசியல் சட்டத்தில் கொண்டுவர முன்வரைவு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும்
  • புதிய நிறுவனங்களுக்கான முன் வரைவு கொண்டுவரப்படும்

துறைவாரியான செலவீனங்கள்

தொகு
  • பாதுகாப்பு துறைக்கு 1.64 டிரிலியன்
  • உள்கட்டமைப்புக்கான பணம் 180 பில்லியன்
  • கல்வித்துறைக்கு 520.5 பில்லியன் ரூபாய். சர்வ சக்சா அபியானுக்கு 21,000 கோடி ரூபாய்
  • மருத்துவ துறைக்கான ஒதுக்கீடு 267.6 பில்லியன்
  • மனித வள ஆற்றலை மேம்படுத்த 500 கோடி ரூபாய்
  • முர்சிதாபாத் மற்றும் மலப்புறத்திலிருக்கும் அலிகார் இசுலாம் பள்ளிக்கு 54 கோடி வீதம் வழங்கப்படும்
  • பாரத் நிர்மான் திட்டத்திற்கு 58,000 கோடு ரூபாய் ஒதுக்கப்படும்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் சம்பளம் consumer price index உடன் இணைக்கப்படும். தற்போதைய 100 ரூபாய் உயரும்
  • பல்வேறு சமூக திட்டங்களுக்கான ஒதுக்கீடு 17 சதவிகிதம் உயர்த்தப்படும்
  • முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு 23 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது

விவசாயம்

தொகு
  • உணவு தானியங்கள் சப்ளையில் உள்ள சிக்கல்கள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • கிழக்கு பகுதிகளில் பசுமை புரட்சி ஏற்படுத்தப்படும்
  • ஒழுங்காக கட்டப்படும் விவசாய கடத்திற்கான கடன் வட்டி 3 சதவிகிதமாக குறைக்கப்படும்
  • உணவு பொருட்களை குளிர் நிலையில் பதனிடும் துறைக்கு உள்கட்டமைப்பு தகுதி வழங்கப்படும்
  • நபார்டு 30 பில்லியன் ரூபாய் வழங்கப்படும்
  • 60,000 கெக்டேர் நிலத்தில் பாமாயில் எடுக்கும பனைகளை பயிரிட 3 பில்லியன் ஒதுக்கப்படும்
  • யூரியாவிற்கான புதிய உரக் கொள்கை வகுக்கப்படும்
  • உணவு சேமிக்கும் வசதிகள் மேம்படுத்தப்படும். 15 பெரிய உணவு பூங்காக்கள் 2011-2012 ல் உருவாக்கப்படும்.
  • அரசு மற்றும் தனியார் பங்களிப்புக்கான (public-private-partnership) விதிமுறைகள் வகுக்கப்படும்
  • விவசாயிகளுக்கு தேவையான கடன் கிடைக்க தேவையானவை செய்யப்படும்
  • விவசாயிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க முயற்சி எடுக்கப்படும்
  • தீவன உற்பத்திக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்

அரசாங்க நிலை

தொகு
  • அரசாங்கம் ஊழலுக்கு எதிராக செயல்படும். ஊழல் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை அரசு உணர்ந்துள்ளது

மற்றவை

தொகு
  • மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உரங்களுக்கான சலுகைகள் அரசால் நேரடியாக பட்டுவாடா செய்யப்படும்
  • சிறீ கிருசுனா தலைமையிலான நிதி சீரமைப்பு குழுவின் அறிக்கை 24 மாதங்களில் தாக்கல் செய்யப்படும்
  • கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் ஐந்து கட்டமாக எடுக்கப்படும்.
  • இந்திய ஸ்டாம் சட்டத்தை மறுபரிசீலன் செய்ய சட்ட முன் வரைவு கொண்டு வரப்படும்
  • ரூபாய் அடையாளம் உள்ள புதிய நாணயங்கள் வெளியிடப்படும்
  • பால்வாடி ஊழியர்களுக்கான சம்பளம் 1500லிருந்து 3000 ஆக உயர்த்தப்படும்
  • சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவிடும் வகையில் வீட்டு கடன் உறுதியளிப்பு நிதி உருவாக்கப்படும்
  • வீட்டுக்கடனுக்கான அளவு 25 லட்சமாக உயர்த்தப்படுகின்றது

[1]

முழு நிதியறிக்கையை பதிவிறக்க

தொகு

இந்திய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. http://timesofindia.indiatimes.com/union-budget-2011/Highlights-of-Union-Budget-2011-2012/articleshow/7592642.cms