2012 உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு
2012 உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு (World Tamil University Youth Conference, 2012) சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையால் 2012, சூலை 20 முதல் சூலை 22 வரை நடத்தப்பட்ட ஒரு உலக இளையர் மாநாடு ஆகும்[1].
தற்கால உலகமயமாதல் சூழலில் தமிழ் பேசும் இளையோரின் அடையாளங்களின் தேடல், அவர்களைத் தமிழ் அடையாளத்தில் பெருமை கொள்ள உதவுதல் ஆகியவை இந்த மாநாட்டின் முதன்மை நோக்கங்களாகக் கூறப்பட்டது. தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 33ம் ஆண்டின் செயற்குழுவினர் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாடு "தமிழ் இளையர் அடையாளம்: ஒரு கண்ணோட்டம்," என்ற கருப்பொருளில் நடைபெற்றது[2].
தேசிய பல்கலைக் கழக நகர வளாகத்தின் டவுன் பிளாசா அரங்கத்தில் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்த மாநாட்டில் கல்விசார் நிகழ்வுகள், திருவிழா என இரு பிரிவுகள் இடம்பெற்றன. சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, மலேசியா, பிலிப்பீன்சு, ஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றினர். 13 மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஊடகங்களில் சிங்கப்பூர் தமிழ் இளையரின் சுய அடையாளம், தமிழ் திரைப்படங்களில் வட இந்திய நடிகைகளில் ஊடுருவல், பெண்களின் வெளிப்பாடு, முகநூலில் தமிழ் மொழியும் சாதியும், சங்க இலக்கியம் மூலம் தமிழ் இளையர் அடையாளத்தை வெளிக் காட்டுதல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பெண்களிடையே நவீன தமிழ் மொழி அடையாளம் போன்ற தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும், விவாதங்களும் இடம்பெற்றன[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ உலகத் தமிழ் இளையர்களின் இன்றைய தமிழ் அடையாளம் பற்றி ஆராயும் மாநாடு பரணிடப்பட்டது 2012-11-10 at the வந்தவழி இயந்திரம், தமிழ் முரசு, சூலை 18, 2012
- ↑ உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு: உலக மேடையில் தமிழ் அடையாளம் பரணிடப்பட்டது 2012-10-04 at the வந்தவழி இயந்திரம், தமிழ் முரசு, சூலை 23, 2012
- ↑ தமிழ் இளையர் மாநாடு 2012 பரணிடப்பட்டது 2012-10-04 at the வந்தவழி இயந்திரம், தமிழ் முரசு, சூலை 22, 2012
வெளி இணைப்புகள்
தொகு- www.wtuyc2012.com பரணிடப்பட்டது 2014-01-09 at the வந்தவழி இயந்திரம்