2013 லிட்டில் இந்தியா கலவரம்
2013 லிட்டில் இந்தியா கலவரம் (ஆங்கிலம்: 2013 Little India riots) 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தியதி சிங்கப்பூரில் நடந்தது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 21:23 அன்று இக்கலவரம் நடைபெற்றது. வாகன விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இக்கலவரம் தொடங்கியது. ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் ஹேம்ஸ்பியர் சாலை சந்திப்பில் நடைபெற்ற இக்கலவரத்தில் சுமார் 400 வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டனர்.[2][3] இக்கலவரத்தில் பேருந்து ஒன்றும் அவசர வாகனம் (emergency vehicle) தாக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் இக்கலவரம் நடைபெற்றது. சிங்கப்பூரின் சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற இரண்டாவது கலவரம் ஆகும். முதல் கலவரம் 1969 ஆம் ஆண்டு நடைபெற்றது.[2][4]
தேதி | 8 டிசம்பர் 2013 |
---|---|
நிகழ்விடம் | லிட்டில் இந்தியா, சிங்கப்பூர் |
விளைவு | 18 பேர் காயம்[1] |
வாகன விபத்து
தொகுசிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் இந்தியத் தொழிலாளி சக்திவேல் குமாரவேலு மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து மரணம் அடைந்தார். இவர் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமளத்திலுள்ள ஓணன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். [5] சக்திவேல் குமாரவேலு மது அருந்தியிருந்தார் என சிங்கப்பூர் காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்[6].
கலவரம்
தொகுஇரண்டு மணி நேரம் நடந்த இக்கலவரம் நள்ளிரவுக்குப் பின் முடிவுக்கு வந்தது. [7] கலவரத்தின் போது மதுக் குப்பிகளை கலவரக்காரர்கள் வீசி எறிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரின் சிறப்புப் படைப் பிரிவு இக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இக்கலவரத்தின் போது 25 அவசர வாகனங்கள் சேதமுற்றன. மேலும் 5 வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.[8] இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளிகளில் கலவரக்காரர்கள் காவல்துறை வானங்களை தலைகீழாய் புரட்டினர்.[7] கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்த காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர்.[8]இக்கலவரத்தைக் கையாள 300 காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.[9]
விசாரணை
தொகுசிங்கப்பூர் காவல் துறையின் அறிக்கையின் படி சக்திவேல் குமாரவேலு எனும் இந்திய கட்டுமானத் தொழிலாளி வாகன விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இக்கலவரம் நடைபெற்றது.[10]. வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.[11]
கைதானவர்களின் விபரம்
தொகுகலவரத்தில் கைதானவர்கள் விபரம் கீழே. [12]
- சின்னத்தம்பி மல்லேசன்
- சின்னப்பா பிரபாகரன்
- சிங்காரவேலு விக்னேஷ்
- தியாகராஜன் ஶ்ரீபாலமுருகன்
- கருப்பையா திருநாவுக்கரசு
- பெரியையா கணேசன்
- ரவி அருண் வெங்கடேஷ்
- ரெங்கசாமி முருகானந்தம்
- அன்பரசன் வேல் முருகன்
- ராஜேந்திரன் மோகன்
- தங்கையா செல்வக்குமார்
- மகாலிங்கம் தவமணி
- செல்வநாதன் முருகேசன்
- அருண் கைலமூர்த்தி
- செல்வராஜ் கரிகாலன்
- போஸ் பிராபாகர்
- சின்ன்னப்பா கோவிந்தராசு
- கணேசன் அசோக்குமார்
- கிருஷ்ணன் சரவணன்
- சின்னப்பா விஜயரகுநாத பூபதி
- ராமலிங்கம் சக்திவேல்
- அழகப்பன் கந்தையா
- செல்வன்
- அன்பழகன்
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களின் மீதான குற்றம் தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் மாதம் 17 தியதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். [13] இந்தியத் தூதரகம் கைதானவர்களுக்கு சட்ட உதவி செய்துவருகிறது. [14]
சன் தொலைக்காட்சியின் தவறான தகவல்
தொகுதமிழகத்தின் சன் தொலைக்காட்சி இக்கலவரம் பற்றிய தவறான தகவல்களை ஒளிபரப்பியது. இது தொடர்பாய் சிங்கப்பூர் காவல் துறையினரிடம் வழக்கு பதிவாகியுள்ளது. [15] மேலும் சன் தொலைக்காட்சி நிறுவனம் சரியான செய்தியை தனது ஒளிபரப்பிலும் இணையத்திலும் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. [16] [17] எனவே சன் தொலைக்காட்சி தனது தவறான செய்தி ஒளிபரப்புக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.[18] [19]
நாட்டைவிட்டு வெளியேற்றம்
தொகுகலவரம் தொடர்பாக 4000 நபர்களை சிங்கப்பூர் காவல்துறையினர் விசாரித்தனர்.[20] மேலும் 53 நபர்களை நாட்டைவிட்டு வெளியேற்றினர். இதில் 52 பேர் இந்திய நாட்டவர் ஒருவர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர். இவர்கள் வேலை அனுமதி அட்டையுடன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதுடன், மீண்டும் சிங்கப்பூருக்குள் எதிர்காலத்தில் நுழையமுடியாது எனவும் சிங்கப்பூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.[21][22]
தீர்ப்பு
தொகு- பிப்ரவரி 10, 2014 அன்று சிங்கப்பூர் நீதிமன்றம், இக்கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரான சின்னப்பா விஜயரகுநாத பூபதிக்கு சிங்கப்பூர் சட்டப் பிரிவு 151-ன் படி 15 வாரங்கள் சிறைத் தண்டனை என தீர்ப்பளித்தது.[23][24][25] சின்னப்பா விஜயரகுநாத பூபதி நேரடியாகக் கலவரத்தில் ஈடுபடவில்லை எனினும் காவலர்களின் ஆணையைக் கேட்டு கலைந்து செல்லாமல் கூடி நின்றதால் அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.[23] இவரது தண்டனைக் காலம் இவர் கைது செய்யப்பட்ட 2013 டிசம்பர் 8 ஆம் தியதியிலிருந்து கணக்கில் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.[23] இவர் தனது தவறை உணர்ந்து கொண்டதால் இவருக்கு 15 வாரங்கள் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் சட்டப் பிரிவு 151-ன் படி தண்டிக்கப்படும் முதல் நபர் இவர் ஆவார். இத்தண்டனையானது திருப்தியளிக்கிறது என சின்னப்பா விஜயரகுநாத பூபதியின் வழக்கறிஞர் சுனில் சுதீசன் கருத்து தெரிவித்துள்ளார்.[23]
- 01.04.2014 அன்று சிங்கப்பூர் நீதிமன்றம் மற்றொரு இந்தியரான கிருஷ்ணன் சரவணனுக்கு 18 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது அவர் மீதான குற்றச்சாட்டு குறைக்கப்பட்டதால் அவருக்கு 18 வாரம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.மேலும், அவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்த நாள்களும் தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படும் என தெரிவித்தது.[26]
- கட்டுமானப் பணியில் பணிபுரிந்து வந்த ராமலிங்கம் சக்திவேல் என்பவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.[27]
- மூர்த்திக்கு 24 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.[28]
- அன்பழகனுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. [28]
- 23 ஜூன் 2014 அன்று மகாலிங்கம் தவமணிக்கு ஐந்து மாதச் சிறை விதிக்கப்பட்டது. இவருக்கான தண்டனைக் காலம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதிக்கு பின் தேதியிடப்பட்டதால் அவருடைய தண்டனைக் காலம் ஜூன் 23 அன்று முடிவடைந்து அவர் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[29]
மேற்கோள்கள்
தொகு- ↑ "18 injured in Little India riot". Channel NewsAsia. 9 December 2013 இம் மூலத்தில் இருந்து 10 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131210073006/http://www.channelnewsasia.com/news/singapore/18-injured-in-little/914914.html. பார்த்த நாள்: December 09, 2013.
- ↑ 2.0 2.1 Nghiem, Ashleigh (9 December 2013). "Singapore bus death triggers riot". BBC News. http://www.bbc.co.uk/news/world-asia-25294918. பார்த்த நாள்: 9 December 2013.
- ↑ Grant, Jeremy (8 December 2013). "Riot tarnishes Singapore’s image as place of ethnic harmony". Financial Times. http://www.ft.com/intl/cms/s/0/9266db8a-602e-11e3-b360-00144feabdc0.html#axzz2msn9OzlE. பார்த்த நாள்: 9 December 2013.
- ↑ "Rare riot shuts down Singapore's Little India district". The Australian. 9 December 2013. http://www.theaustralian.com.au/news/world/rare-riot-shuts-down-singapores-little-india-district/story-e6frg6so-1226778385511. பார்த்த நாள்: 9 December 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-11.
- ↑ "Deceased foreign worker in Little India riot tripped and fell after being ejected from bus: Police". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ 7.0 7.1 Chin, Neo Chai (9 December 2013). "Riot breaks out at Little India". Today. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ 8.0 8.1 "Deceased foreign worker in Little India Riot was drunk: Police". Yahoo! News. 9 December 2013. http://sg.news.yahoo.com/fire--rioting-taking-place-in-little-india--reports-152651999.html. பார்த்த நாள்: 9 December 2013.
- ↑ Chan, Francis (8 December 2013). "Rioting in Singapore's Little India, busloads of riot police dispatched". The Star Online. Archived from the original on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ Sim, Walter. "Little India Riot: Victim of road traffic accident that sparked off mob identified". Straits Times. http://www.straitstimes.com/the-big-story/little-india-riot/story/little-india-riot-victim-road-traffic-accident-sparked-mob-ide. பார்த்த நாள்: 9 December 2013.
- ↑ "Singapore charges 24 Indian workers for rioting". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ migration (11 December 2013). "Little India Riot: Eight more riot suspects held, 24 workers charged". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ [http://tamilmurasu.com.sg/story/33727}[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [[1]]
- ↑ {http://www.straitstimes.com/the-big-story/little-india-riot/story/little-india-riot-police-report-made-against-sun-tvs-riot-repo]
- ↑ migration (10 December 2013). "Little India Riot: Police report made against Sun TV's riot report". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-11.
- ↑ "India's Sun TV apologises for erroneous report on Little India riot". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-24.
- ↑ http://www.thestandard.com.hk/breaking_news_detail.asp?id=44243&icid=1&d_str=
- ↑ "53 people involved in Little India riot repatriated: Police". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ "Little India riot: 53 repatriated; 4 more to be deported". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ 23.0 23.1 23.2 23.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-06. பார்க்கப்பட்ட நாள் 2014-02-12.
- ↑ "சிங்கப்பூர் கலவரம் : இந்தியருக்கு 15 வார சிறைத் தண்டனை". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ "சிங்கப்பூர் கலவரம்... தமிழருக்கு 15 வார சிறை- தண்டனைக்குள்ளான முதல் இந்தியர்". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=946718
- ↑ "Singapore riots: Indian gets 30 months jail, caning - Times of India". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ 28.0 28.1 "Two Indians jailed for Little India riots in Singapore - Times of India". பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-01. பார்க்கப்பட்ட நாள் 2014-06-24.