2014 ஐரோப்பிய தனிநபர் சதுரங்க வெற்றியாளர் போட்டி
2014 ஐரோப்பிய தனிநபர் சதுரங்க வெற்றியாளர் போட்டி (2014 European Individual Chess Championship) 2014 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி வரை ஆர்மீனியா நாட்டின் இயெரவான் நகரத்தில் நடைபெற்றது.
263 சதுரங்க வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். ஆண்கள் வெற்றியாளர் போட்டி என விவரிக்கப்பட்டாலும், சூடித் போல்கர் மற்றும் அன்டோனெட்டா இசுடெபனோவா உட்பட பல பெண்களும் பங்கேற்றனர். வெற்றிப்புள்ளிகள் பட்டியலில் முதல் 23 வீரர்கள் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சதுரங்கப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். உலகக் கோப்பைப் போட்டிகள் அசர்பைசானின் பாகுவில் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 5 வரை நடைபெற்றது. செர்கி கர்சாகின் இப்போட்டியில் வெற்றி பெற்றார்.
2014 ஐரோப்பிய தனிநபர் சதுரங்க வெற்றியாளர் போட்டியை உருசிய நாட்டைச் சேர்ந்த அலெக்சாந்தர் மோட்டிலெவ் வென்றார்.[1]
இப்போட்டிக்குச் சமமான பெண்கள் நிகழ்வானது 2014 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 முதல் 17 வரை பல்கேரியாவின் இரண்டாவது பெரிய நகரமான புலோவ்திவ் நகரில் நடைபெற்றது. உருசிய நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வாலண்டினா குனினா இப்போட்ட்டியில் வெற்றி பெற்றார்.[2]
முடிவு
தொகுஇடம் வீரர் தலைப்பு நாடு முடிவு 1 அலெக்சாந்தர் மோட்டிலெவ் கி.மா உருசியா 9/11 2 டேவிட் ஆண்டன் குயிசாரோ கி.மா எசுப்பானியா 8/11 3 விளாதிமிர் பெதோசீவ் கி.மா உருசியா 8/11 4 திராகன் சோலக் கி.மா துருக்கி 8/11 5 பாவெல் எலியானோவ் கி.மா உருசியா 8/11 6 கான்சுடாண்டின் லுபுலெசுக்கு கி.மா உருமேனியா 8/11 7 டேவிட் நவெரா கி.மா செக் குடியரசு 8/11 8 இவான் சாரிக் கி.மா குரோவாசியா 8/11 9 இகோர் லைசிய் கி.மா உருசியா 8/11 10 இரண்ட் மெல்கும்யன் கி.மா ஆர்மீனியா 7½/11 11 இராதோசுலாவ் வொய்ட்டாசெக் கி.மா போலந்து 7½/11 12 திமித்ரி யாகோவெங்கோ கி.மா உருசியா 7½/11 13 விளாதிசிலேவ் அர்டெமீவ் பன்னாட்டு
மாசுட்டர்உருசியா 7½/11 14 இல்யா சிமெரின் கி.மா இசுரேல் 7½/11 15 இலாரெண்ட் பிரெசினெட் கி.மா பிரான்சு 7½/11 16 காப்ரியல் சர்க்கீசியன் கி.மா ஆர்மீனியா 7½/11 17 அலெக்சாந்தர் அரெசெங்கோ கி.மா உக்ரைன் 7½/11 18 மிலாசு பெருனோவிக் கி.மா செர்பியா 7½/11 19 இவான் செப்பாரினோவ் கி.மா பல்கேரியா 7½/11 20 வையோரல் லோர்டாசெசுக்கு கி.மா மல்தோவா 7½/11 21 செர்கி சிகால்கோ கி.மா பெலருஸ் 7½/11 22 சாம்வெல் டெர்-சகாக்யன் கி.மா ஆர்மீனியா 7½/11 23 சிசபா பலோக் கி.மா அங்கேரி 7½/11
மேற்கோள்கள்
தொகு- ↑ Final Ranking after 11 rounds at Chess-Results.com
- ↑ The final ranking of the 2014 European Individual Chess Championip for Women auf chess-results.com