2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் தேர்தல் பரப்புரை
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சிகள் செய்யும் பரப்புரைகள், அவற்றின் தேர்தல் அறிக்கைகள் குறித்த தகவல்கள் இங்கு ஆவணப்படுத்தப்படுகின்றன.
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்
தொகுகட்சி | வெளியிடப்பட்ட நாள் | குறிப்புகளும், மேற்கோள்களும் |
---|---|---|
தேமுதிக | மார்ச் 20 | இரு பகுதிகளாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிப்பரவரி மாதம் நடந்த காஞ்சிபுர மாநாட்டில் முதல் பகுதியையும், கோயம்பேட்டிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இரண்டாம் பகுதியையும் விஜயகாந்த் வெளியிட்டார். |
நாம் தமிழர் கட்சி | மார்ச் 23 | [3] |
திமுக | ஏப்ரல் 10 | [4] |
பாமக | ஏப்ரல் 15 | [5] |
பாசக | ஏப்பிரல் 21 | [6] |
தமாகா | ஏப்பிரல் 23 | [7] |
மக்கள் நலக் கூட்டணி | ஏப்பிரல் 28 | 80 பக்கங்கள் கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.[8] |
அதிமுக | மே 5 | [9] |
கட்சிகளின் தேர்தல் பரப்புரை
தொகுஅதிமுக
தொகுகட்சியின் பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதா, ஏப்ரல் 9 - மே 12 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பரப்புரைப் பயணம் மேற்கொள்வார்[10]
செயலலிதா சென்னை தீவுத்திடலில் இருந்து தனது முதல் பரப்புரையை தொடங்கினார்.[11]
பொதுக்கூட்டம்
எண் |
நடந்த தேதி | நடந்த இடம் | குறிப்புகளும், மேற்கோள்களும் |
---|---|---|---|
1 | ஏப்பிரல் 9 | தீவுத்திடல், சென்னை | தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என ஜெயலலிதா கூறினார்.[12] |
2 | ஏப்பிரல் 11 | விருத்தாச்சலம் | பரப்புரைக் கூட்டத்திற்கு வந்த மக்களில் இருவர் வெயிலாலும் கூட்டநெரிச்சலாலும் உயிரிழந்தனர்.[13] |
3 | ஏப்பிரல் 12 | தருமபுரி | கெயில் திட்டத்தை விவசாயிகள் நிலங்கள் பாதிக்காதவாறு செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார்.[14] |
4 | ஏப்பிரல் 15 | அருப்புக்கோட்டை | ஜெயலலிதாவின் அருப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் பெண் போலீஸ் மயக்கம்[15] |
5 | ஏப்பிரல் 17 | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் அருகே வாரணவாசி ஊராட்சியில் இன்று அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது[16] |
6 | ஏப்பிரல் 20 | சேலம் | அதிமுக தொண்டர் வெயில் கொடுமையால் உயிரிழந்தார்.[17] |
7 | ஏப்பிரல் 23 | ஜி கார்னர் மைதானம், திருச்சிராப்பள்ளி | இலங்கைத் தமிழர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா பேசினார்[18][19] |
8 | ஏப்பிரல் 25 | புதுச்சேரி | புதுச்சேரி, உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் செயலலிதா[20] |
9 | ஏப்பிரல் 26 | மதுரை | [21] |
10 | மே 1 | கோவை | கொடீசியா திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.[22] |
11 | மே 7 | தஞ்சாவூர் | தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பின்புறமுள்ள மாநகராட்சி திடலில் அமைக்கப்பட்டிருந்து பேசினார்.[23] |
12 | மே 10 | வேலூர் | அரக்கோணம் அருகே வேடல் கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்தார்.[24] |
13 | மே 12 | திருநெல்வேலி | பாளையங்கோட்டையில் மாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார்[25] |
திமுக
தொகுகட்சித் தலைவர் மு. கருணாநிதி
தொகு- ஏப்ரல் 23 - மே 14 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுக்க பரப்புரை செய்கிறார்.[26]
தேதி | இடங்கள் | குறிப்புகளும், மேற்கோள்களும் |
---|---|---|
ஏப்பிரல் 23 | சென்னை சைதாப்பேட்டை | ஆட்சி மாற்றத்தை தாருங்கள்; ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள் என கருணாநிதி பேசினார்.[27][28] |
ஏப்பிரல் 28 | விழுப்புரம் | [29] |
- இதுவரை புதுச்சேரி, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்துள்ள நிலையில் வெயில் மற்றும் கருணாநிதியின் வயதையும் உடல் நிலையையும் கருதி இனி அவர் வேன் மூலம் பரப்புரை மேற்கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் பொதுக்கூட்டங்களில் மட்டும் அவர் கலந்து கொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.. திருத்தியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி மே 3ல் மதுரையிலும், 5ம் தேதி சென்னையிலும், 8ம் தேதி சென்னை தங்கச்சாலையிலும், 11ம் தேதி திருவாரூரிலும், 14ம் தேதி சென்னை சேப்பாக்கத்திலும் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார்.[30]
- திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னையின் பல பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.[31]
- திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் நடந்தது. இதில் கருணாநிதியும் சோனியா காந்தியும் உரையாற்றினார்கள்.[32]
கட்சியின் பொருளாளர் முக. இசுதாலின்
தொகு- முக. இசுதாலின் இராதாகிருட்டிணன் நகர் (ஆர் கே நகர்) தொகுதியில் பரப்புரையைத் தொடங்கினார்.[33]
- மதுரையில் பரப்புரையை மேற்கொண்டார்.[34]
- மதுரையில் காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.[35]
காங்கிரசு
தொகுசென்னை தீவுத்திடலில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி திமுக கூட்டணி சார்பாக பேசினார். திமுக தலைவர் கருணாநிதியும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.[36]
- மதுரை பொதுக்கூட்டத்தில் ராகுலுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். பின்னர் கோவைக்கு சென்ற ராகுல் காந்தி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். சென்னையில் அவர் மதுரவாயல் கேபிஎன் திருமண மண்டபம் அருகே உள்ள திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.[35]
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரசு அணி
தொகு- அணியின் அனைத்துத் தலைவர்கள் கலந்துகொண்ட தேர்தல் சிறப்பு மாநாடு மாமண்டூரில் ஏப்ரல் 10 அன்று நடந்தது.
- இக்கூட்டணியின் மாநாடு திருச்சிராப்பள்ளியில் மே 11 அன்று நடைபெற்றது. இதில் கூட்டணி தலைவர்கள் உரையாற்றினார்கள்.[37]
தேமுதிக
தொகு- கும்மிடிப்பூண்டியில் விசயகாந்த் தனது தேர்தல் பரப்புரையை ஏப்ரல் 11 அன்று தொடங்கினார்.[38]
- தே.மு.தி.க, மக்கள் நல கூட்டணி, தமாகா சார்பில் சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தே.மு.தி.க தலைவர் விசயகாந்த் கலந்துகொண்டார்.[39]
மதிமுக
தொகு- ஏப்பிரல் 16 அன்று வைகோ சென்னை அண்ணாநகரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.[40]
பாமக
தொகுநாம் தமிழர் கட்சி
தொகுபாசக
தொகு- பாசக வேட்பாளர்களை ஆதரித்து ஒசூரில் மோதி பொதுக்கூட்டத்தில் பேசினார்.[41]
- சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு பாசக. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.[42]
- பாசக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோதி நேற்று முன்தினம் ஓசூர், சென்னையில் பரப்புரை செய்த மோதி இரண்டாம் கட்டமாக கன்னியாகுமரியில் முருகன் குன்றம் அருகே உள்ள ஏழுசாட்டுபத்து என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாசக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார்.[43]
- பாசக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோதி வேதாரண்யத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.[44]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தேமுதிகவின் தேர்தல் அறிக்கை முதல் பகுதி". நக்கீரன். 22 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 22 பிப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "தேமுதிகவின் தேர்தல் அறிக்கை இரண்டாம் பகுதி". தமிழ்ஒன் இந்தியா. 21 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள்.. நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை!". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.tamiltel.in/dmk-manifesto-2016-1801
- ↑ "குடும்பத்துக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் இலவச திட்டம்: பாமக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்". தி இந்து (தமிழ்). 15 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "மதுவிலக்கு, நெசவாளர்களுக்கு வீடு, 20 லி.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்- பாஜக தேர்தல் அறிக்கை". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டம்: தமாகா தேர்தல் அறிக்கை வெளியீடு". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "இலவச மினரல் வாட்டர், பால் விலை குறைப்பு.. வெளியானது ம.ந.கூ தேர்தல் அறிக்கை". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-28.
- ↑ "ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை... முழு விவரம்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
- ↑ "தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம்" (PDF). அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவல்முறை இணையதளம். 4 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "பெண்களின் பொற்கால ஆட்சி இது... மீண்டும் தொடரவேண்டும் : பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெ". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Jayalalithaa vows to phase out liquor". தி இந்து (ஆங்கிலம்). 10 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஜெயலலிதாவின் விருத்தாச்சலம் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கிய இருவர் பலி". தட்சு தமிம். பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "விளை நிலங்களில் கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துவேன்: ஜெயலலிதா". பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஜெயலலிதாவின் அருப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் பெண் போலீஸ் மயக்கம்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் நிறைவேற்ற முடியாது.. ஜெ. தடாலடி!". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "வெயில் கொடுமை.. ஜெ. பிரசார கூட்டத்தில் 2 பேர் பலி! விருதாசலத்தை தொடர்ந்து சேலத்திலும் சோகம்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கருணாநிதியின் கபடநாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள்: ஜெயலலிதா". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DMK betrayed Lankan Tamils: Jayalalithaa". தி இந்து (ஆங்கிலம்). 24 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "காங்கிரஸ் - திமுக எதிரி... என்.ஆர் காங்கிரஸ் துரோகி- இருவரையும் தூக்கி எறியுங்கள்: ஜெயலலிதா". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
- ↑ "முல்லைப் பெரியாறு-ஜல்லிக்கட்டு விவகாரத்தில் துரோகம் இழைத்த திமுக - காங்.: மதுரையில் ஜெ. பேச்சு". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
- ↑ "சொன்னதை செய்யாதவர்கள் திமுகவினர்.. நான்தான் செய்தேன்.. கோவையில் ஜெ. பிரசாரம்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-01.
- ↑ "காவிரி டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி: ஜெயலலிதா". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-08.
- ↑ "திமுகவினர் ஓட்டு கேட்டு வந்தால் ஓட ஓட விரட்டுங்கள்... செய்வீர்களா?...: ஜெ". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-10.
- ↑ "நெல்லையில் ஜெ. பொதுக்கூட்டத்திற்கு வந்த முதியவர் சாவு! பிரசார பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
- ↑ "Karunanidhi to contest from Tiruvarur again". தி இந்து (ஆங்கிலம்). 13 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் கருணாநிதி..!". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஆட்சி மாற்றத்தை தாருங்கள்; ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள்: பிரச்சாரத்தை தொடங்கி கருணாநிதி உருக்கம்". தி இந்து (தமிழ்). 24 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "93 வயதல்ல 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் - விழுப்புரத்தில் கருணாநிதி பேச்ச". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-28.
- ↑ "தமிழகம் கருணாநிதியின் வேன் பிரசாரங்கள் ரத்து". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-01.
- ↑ "சென்னையில் கருணாநிதி தீவிர வாக்கு வேட்டை". தினம்ணி. பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
- ↑ "திமுக ஆட்சி அமைந்தால் ஜனநாயக ஆட்சியாக இருக்கும்: சோனியா முன்னிலையில் கருணாநிதி திட்டவட்டம்". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
- ↑ "ஸ்டாலின் அதிரடி.. ஜெ.வுக்கு முன்பாகவே பிரசாரத்தைத் தொடங்கினார்.. ஆர்.கே.நகரில்!". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டிய காலம் நெருங்கிவிட்டது: ஸ்டாலின்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 35.0 35.1 "மதுரையில் ராகுல்- ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்! கோவையில் கனிமொழி, சென்னையில் அன்பழகன்!". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-08.
- ↑ "திமுக - காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் தமிழகத்தில் செயல்படுகிற அரசை தருவோம்: சென்னை தீவுத்திடல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி உறுதி". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
- ↑ "வேஷ்டி கட்டிய ஜெ., சேலை கட்டிய கருணாநிதி... திருச்சி மாநாட்டில் விஜயகாந்த் த்ரில் பேச்சு". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-11.
- ↑ "நடக்கப்போவது சட்டசபை தேர்தல் அல்ல; யுத்தம்: முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார் விஜயகாந்த்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "திமுக, அதிமுக கட்டிய வீட்டுக்குள் புகுந்த கருநாகங்கள் - விஜயகாந்த் தாக்கு". நட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ பேச்சு". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஊழலை ஒழித்த பாஜகவுக்கு தமிழக மக்களே ஆதரவு தாருங்கள்: ஒசூரில் மோடி பேச்சு". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
- ↑ "3வது சக்தியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது: மோடி". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.
- ↑ "ஊழலற்ற ஆட்சி அமைய உதவியது கன்னியாகுமரி: நரேந்திர மோடி". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 2016-05-08.
- ↑ "அதிமுக, திமுகவிடமிருந்து விடுதலை வாங்கித்தர வந்துள்ளேன்.. வேதாரண்யத்தில் மோடி ஆவேச பேச்சு". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-11.