2018 ஆம்பலாப்பட்டு வன்முறை

தலித் சமூகத்திற்கு எதிரான வன்முறை

2018 அம்பலாப்பட்டு வன்முறை (2018 Ambalapattu violence) என்பது 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று தமிழ்நாட்டின், ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்பில் நடந்த வன்முறையைக் குறிக்கிறது. தலித் சமூகத்தினர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது ஆதிக்க சாதி கிராம மக்களால் இந்த குடியிருப்பு தாக்கப்பட்டது. சுமார் 80 ஆதிக்க சாதி கிராம மக்கள் தலித் மக்களின் வீடுகள், விசையுந்துகள், சொத்துக்கள் போன்றவற்றை சேதப்படுத்தினர். 8 தலித்துகள் காயமடைந்து 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

2018 ஆம்பலாப்பட்டு வன்முறை
தமிழகத்தின் ஆம்பலாபட்டில் தலித் சமூகத்திற்கு எதிரான வன்முறை
தேதி31 திசம்பர் 2017 – 1 சனவரி 2018
அமைவிடம்
காரணம்சாதி பதற்றம்
முறைகள்கலவரம் விளைவித்தல், திடீர்தாக்குதல்
உயிரிழப்புகள்
காயமுற்றோர்8 தலித்துகள் (4 மருத்துவமனையில் அனுமதி)
கைதானோர்6
சேதம்
  • 15 தலித்துகளின் வீடுகள் சேதம்
  • 15 தலித்துகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன
  • வீட்டில் இருந்த பொருட்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், பாத்திரங்கள் நாசமானது

தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் போராட்டங்கள் மற்றும் சாலை மறியல்கள் செய்யப்பட்டன.

வன்முறையில் ஈடுபட்டதாக அடுத்த இரண்டு நாட்களில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னணி

தொகு

ஆம்பலாப்பட்டு என்ற பெரிய கிராமத்தின் தெற்கே உள்ள குடிகாடு என்ற பகுதியில் தலித் மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமப்பகுதியில் குறைந்தபட்சம் 300 கள்ளர் சாதிக் குடும்பங்களைக் கொண்ட ஆதிக்க சாதிக் குழுவினரும், ஒப்பீட்டளவில் குறைந்த மக்களான 60 குடும்பங்களைச் சேர்ந்த தலித் பறையர் மக்களும் உள்ளனர். இரு தரப்பிலும் உள்ள கிராமவாசிகள் ஒப்பீட்டளவில் நல்ல வசதி படைத்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவர் சிங்கப்பூரில் பணிபுரிகிறார்கள். இந்த பகுதி 'லிட்டில் சிங்கப்பூர்' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் தலித் குடும்பங்கள் நன்கு படித்ததாகவும், பலர் அரசாங்க வேலைகளில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது .[1] மேலும் இப்பகுதி 6 தசாப்தங்களுக்கும் மேலாக பொதுவுடைமை இயக்கத்தினரின் மையமாக இருந்து வருகிறது. அங்கு வசிப்பவர்கள் நிலக்கிழமையின் அடக்குமுறையை எதிர்க்கிறார்கள் மற்றும் அனைத்து வகுப்பினருக்குமிடையிலான சுமூக உறவு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கின்றனர்.[2]

புத்தாண்டு கொண்டாட்டங்கள்

தொகு

குடிகாடு பகுதியில் உள்ள தலித் சமூகத்தினர் 2017 திசம்பர் 31 நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டிருந்தனர். மக்கள் தங்கள் குடியிருப்பின் நுழைவாயிலை பலூன் வளைவுகளால் அலங்கரித்து, பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய தமிழர் பாரம்பரியமான பாலைக் கொதிக்க வைத்து புத்தாண்டைக் கொண்டாடினர். மேலும் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினர். குடியிருப்பின் குழந்தைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிக்கு, ஒலி அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும், குடியிருப்பு இளைஞர்கள் குடியிருப்பு மக்களிடமிருந்து பணம் திரட்டி இந்த விழா ஏற்பாட்டடை செய்துவந்தனர்.[1][3][4]

கிராம மக்களுக்கு இடையே கைகலப்பு

தொகு

சில தலித் கிராமவாசிகள் 2018 சனவர் முதல் நாளன்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஆதிக்க சாதியினர் கள்ளர் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் குடியிருப்பின் நுழைவாயிலுக்கு அருகில் நிற்பதைக் கண்டனர். இந்த நபர்கள் கிராமத்தின் வடக்கு பகுதியில், சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து வந்தனர். தலித் கிராம மக்கள் கொண்டாட்டத்திற்காக கட்டிய வளைவை அகற்ற அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு தலித் ஒருவர் காயம் அடைந்தார். சண்டை விரைவில் முடிவுக்கு வந்தது.[1][3][4]

தாக்குதல்கள்

தொகு

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, கள்ளர் சாதியைச் சேர்ந்த சுமார் 80 ஆதிக்க சாதியினர், கத்திகள், தடிகள், பிற ஆயுதங்களுடன் குடிகாடு தலித் குடியிருப்பை அடைந்தனர்.[1] ஆயுதங்களை மூடுந்தில் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.[3] கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒலி அமைப்புகள் தொடர்பாக ஆதிக்க சாதியினர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் தலித் வீடுகளை சூறையாடுதல் போன்ற வெறியாட்டங்களில் ஈடுபட்டனர்.[3] அவர்கள் தாக்குதலுக்கு முன் தலித் குடியிருப்பின் மின் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.[5] ஆதிக்க சாதியினர், "நீங்கள் ஏன் கால்சராய், சட்டை அணிகிறீர்கள்?" என்று கத்தியதாக கூறப்படுகிறது. தாழ்த்தபட்ட நாய்களான நீங்கள் ஏன் புத்தாண்டு கொண்டாட வேண்டுகிறீர்கள்? என அவர்களின் தாக்குதல்களின் போது சொன்னார்கள்.[1][6]

கும்பல் தாக்கியதலில் ஈடுபட்டபோது பெண்கள் பீதியில் வீடுகளுக்குள் சென்று பூட்டிக் கொண்டிருக்கும் போது தலித் ஆண்கள் தங்கள் குடும்பங்களை விட்டுவிடுமாறு தாக்குபவர்களிடம் கெஞ்சினார்கள். தலித்துகளுக்கு "பாடம்" கற்பிக்க நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முப்பது நிமிடங்கள் நீடித்தது.[1][2] சில தலித்துகள் வீடுகளுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டனர். மற்றவர்கள் அருகிலுள்ள வயல்களுக்கு தப்பிச் சென்றனர்.[3][4]

தலித் ஆண்கள் எதிர்த்துப் போராடுவதைத் தவிர்த்ததால் வன்முறையில் உயிரிழப்புகள் ஏற்படாமல் முடிந்தது என்று கிராம மக்கள் கூறினர்.[5]

சேதங்கள்

தொகு

தலித்துகளின் 15 விசையுந்துகளும், 15 வீடுகளும் சேதமடைந்தன.[1] வீட்டில் இருந்த பாத்திரங்கள், தளபாடங்கள், தண்ணீர் குழாய்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் அழிக்கப்பட்டன. ஒலி அமைப்பும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[3][6][7] The sound system was also reportedly destroyed.[4]

இந்த தாக்குதலில் 8 தலித்துகள் படுகாயமடைந்தனர் மற்றும் 4 ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.[1][6]

எதிர்ப்புகள்

தொகு

மறுநாள் 2018 சனவரி முதல் நாளன்று காலை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாக்கியவர்களைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிடவும் வலியுறுத்தினர். போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இந்த சாலை மறியலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மார்க்சிய இந்தியப் பொதுவுடமைக் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளும், ஆதி திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.[5][8][9]

இந்த தாக்குதலை கண்டித்து திருவள்ளூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.[9]

கைதுகள்

தொகு

தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் தாக்குதல்களுக்காக கைது செய்யப்பட்டனர்.[1][2]

விசாரணைகள்

தொகு

மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கதிர் கூறுகையில், இந்த பகுதியில் உள்ள கிராமங்களின் சமூக அமைப்பு சலனமற்ற நிலையில் இருந்தாலும் சாதி பாகுபாடு ஆழமாக வேரூன்றியுள்ளது. அப்பகுதியில் பல இடதுசாரி கட்சிகளின் தலையீடும் சமீப காலங்களில் தாக்குதல்கள் குறைந்ததற்கான காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். தலித்துகள் தங்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு எதிராக பேசும்போது அல்லது பொருளாதாரத்தில் முன்னேறும் போது இந்த தாக்குதல்கள் பொதுவாக நிகழ்கின்றன என்றார். இந்த தலித் குடியிருப்பில் நல்ல அரசு பதவிகளில் உள்ளவர்கள் அதிகம் என்பதால் சமூகம் தாக்கப்பட்டது என்றார்.[1][2]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

 

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Govindarajan, Vinita (3 January 2018). "Dalit colony in Tamil Nadu attacked by an upper caste mob after its residents ring in the new year". scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்).{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. 2.0 2.1 2.2 2.3 Renganathan, L. (2018-01-13). "Dalits in Ambalapattu attacked by upper-caste Kallars on New Year's eve" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/society/dalits-in-ambalapattu-were-attacked-by-upper-caste-kallars-on-new-years-eve/article22428965.ece. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Dalit homes vandalised in Thanjavur allegedly by caste-Hindus over NY celebrations". The News Minute. 2 January 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. 4.0 4.1 4.2 4.3 "Mob attacks Dalits over celebrations in Thanjai of Tamil Nadu". The New Indian Express. 2 January 2018. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jan/02/mob-attacks-dalits-over-celebrations-in-thanjai-of-tamil-nadu-1742171.html. 
  5. 5.0 5.1 5.2 "தலித்துகள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல்; ஆம் இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?". Pattukottai News (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. 6.0 6.1 6.2 Jagannath, G. (2018-01-03). "Tamil Nadu Dalits attacked for celebrating NY by upper-caste Hindus". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
  7. "மோதலில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்". Tamil Murasu. 2018-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. "உரத்தநாடு அருகே தலித்துகள் மீது ஜாதி வெறியர்கள் தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்". viduthalai.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. 9.0 9.1 "தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2018_ஆம்பலாப்பட்டு_வன்முறை&oldid=3937878" இலிருந்து மீள்விக்கப்பட்டது