2019 அமேசான் காட்டுத்தீ

அமேசான் காட்டில் 2019 ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ

2019 அமேசான் காட்டுத்தீ (2019 Amazon rainforest wildfires) என்பது 2019 ஆம் ஆண்டு அமேசான் பசுமை மாறாக் காடுகளில் வறண்ட காலநிலையின் காரணமாக ஆயிரக்கணக்கான தனித்தனியான இடங்களில் ஏற்பட்ட வலிமையான காட்டுத்தீ நிகழ்வுகளின் தொடரைக் குறிப்பதாகும். இவற்றில் பெரும்பான்மையான காட்டுத்தீ நிகழ்வுகளானது பிரேசிலின் ஆட்சி எல்லைக்குள் உள்ள வனப்பகுதிகள் மற்றும் அதன் அருகாமை நாடுகளான பொலிவியா பெரு, பராகுவே ஆகிய பகுதிகளில் நிகழ்ந்தவையாகும்.[2] பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1.8 மில்லியன் ஏக்கர் (>7,200 சதுர கிலோ மீட்டர்) பொலிவியாவை மட்டும் சார்ந்ததாகும்.[3] இத்தகைய காட்டுத்தீ நிகழ்வுகள் வழக்கமாக வறண்ட காலங்களில் ஏற்படுபவை தானெனினும், 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீ நிகழ்வுகள் உலக அறிவியலாளர்கள் மற்றும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு பிரேசில் நாட்டின் விண்வெளி ஆய்விற்கான தேசிய நிறுவனத்தால் சூலை மற்றும் ஆகத்து 2019 மாதங்களில் கொண்டு வரப்பட்டது. செயற்கைக் கோளினால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி இந்நாட்டில் மட்டும் சனவரி முதல் ஆகத்து 23, 2019 வரை, குறைந்தது 75,336 காட்டுத்தீ நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாயும் இவற்றில் 40,000 நிகழ்வுகள் அமேசானின் பசுமை மாறாக் காடுகளில் ஏற்பட்டவையாகும் என்றும் பிரேசிலின் விண்வெளி ஆய்விற்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 2013 இலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள தரவுகளின்படி மிக அதிக அளவாகும்.[4][5][6][7] நாசாவினால் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒளிப்படங்களும் பிரேசிலின் அறிவிப்பை, அதாவது அமேசான் காடுகள் முன்னெப்போதும் நிகழ்ந்த காட்டுத்தீ நிகழ்வுகளைக் காட்டிலும் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீ நிகழ்வுகள் மிகவும் அடர்வு மிகுந்தவை என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளன.[8] பிரேசில் மற்றும் பொலிவிய அரசாங்கங்கள் சமீபத்தில் பசுமைமாறாக் காடுகளின் பரப்புகளை விவசாயத்திற்கும், பதிவு செய்து கொள்வதற்கும் அனுமதித்து கொள்கை முடிவுகளை இயற்றின.[9][10] 2004 ஆம் ஆண்டிலிருந்து பசுமை மாறாக்காடுகள் அழிக்கப்படும் வேகத்தைக் குறைக்க பிரேசில் சில நடவடிக்கைகளை எடுத்திருப்பினும், 2019 ஆம் ஆண்டில் இத்தகைய காட்டுத்தீயின் காரணமாக காடுகள் அழிப்பு வீதமானது அதிகரித்திருப்பது சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கவலையை அதிகரித்துள்ளது. ஏனெனில், அமேசான் வடிநிலமானது காலநிலை மாற்றத்தின் விரும்பத்தகாக விளைவுகளை தணிக்கும் காரணியாக இருந்துள்ளது.[11][12] கூடுதலாக, மரங்கள் வெட்டப்பட்டோ, தீயிடப்பட்டோ அழிக்கப்பட்ட பின் விவசாயம் செய்வதற்காக நிலத்தைத் தயார்படுத்தும் உத்தி மற்றும் அதைத் தொடர்ந்த காட்டுத்தீ போன்றவை மழைக்காடுகளுக்குள் உள்ள பூர்வகுடி மக்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்கலாம்.[13]

2019 அமேசான் காட்டுத்தீ
கட்புலனாகும் அகச்சிவப்பு பிம்பமாக்கு கதிர்வீச்சு அளவித் தொகுதியால் எடுக்கப்பட்ட அமேசான் வடிநிலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ மற்றும் புகை மண்டலத்தைக் காட்டும் ஒளிப்படம்
அமைவிடம்பிரேசில், பொலிவியா, பெரு, பராகுவே
புள்ளிவிவரங்கள்
நாள்(கள்)சனவரி 2019 — தொடர்கிறது
உயிரிழப்புகள்2[1]

முதல் ஊடக அறிக்கைகள்

தொகு

பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் இக்காட்டுத்தீ தொடர்பான செய்திகளை முன்னதாகவே சர்வதேச செய்தி முகமைகளில் தெரிவித்திருந்தாலும், 2019 ஆம் ஆண்டு ஆகத்து 20 வரையிலும் இது செய்திகளில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆகத்து 20 அன்று ரொன்டோனியா மற்றும் அமேசோனாஸ் பகுதிகளிலிருந்து வெளிப்பட்ட தீயின் காரணமான புகைக்கற்றையானது கிழக்கு கடற்கரையோர அமேசான் வடிநிலத்திலிருந்து 2800 கிலோமீட்டர் (1700 மைல்கள்) தொலைவிலுள்ள சாவோ பாவுலோ நகரின் மீது பிற்பகல் 2.00 மணியளவில் வானை மறைக்குமளவு கருமையை ஏற்படுத்தியது.[14][15][16] தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) அமைப்பும், தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) அமைப்பும் பிரேசிலின் தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்த தகவலோடு ஒத்துப்போகும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகைசுவாலைகள் விண்வெளியிலிருந்து பார்வைக்குப் புலனாவதை சுட்டும் செயற்கைக்கோள் ஒளிப்படங்களை வெளியிட்டன.[17] நிகழ்ந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயின் தாக்கம் குறித்த பிரேசிலின் தேசிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசாவின் தரவுகள் மற்றும் ஒளிப்படங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்ததோடு சமூக ஊடகங்களில் எழுச்சி மிக்க பேசுபொருளாயின. பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள், தடகள வீரர்கள் போன்றோர் இப்பிரச்சனையின் தீவிரம் குறித்து தங்கள் கவலைகளை வெளியிட்டனர்.[18]

மேற்கோள்கள்

தொகு
  1. Moreira, Rinaldo; Valley, Jamari (August 15, 2019). "Casal morre abraçado ao tentar fugir de queimada em RO" [Couple die hugged while trying to escape burnt out RO]. G1 (in portuguese). Archived from the original on August 15, 2019. பார்க்கப்பட்ட நாள் August 22, 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Frightening images of Amazon fire taken from space". NewsComAu. 2019-08-25. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
  3. https://www-cnn.com/2019/08/26/americas/bolivia-amazon-fires-intl/index.html[தொடர்பிழந்த இணைப்பு].
  4. Team, The Visual and Data Journalism (2019-08-23). "Amazon fires: How bad have they got?" (in en-GB). https://www.bbc.com/news/world-latin-america-49433767. 
  5. "'Record number of fires' in Brazilian rainforest". BBC News Online. பிபிசி (BBC Online). August 21, 2019. https://www.bbc.com/news/world-latin-america-49415973. 
  6. Rodriguez, Jeremiah (August 22, 2019). "As the Amazon burns, Brazil's president draws global outrage". CTV News. https://www.ctvnews.ca/world/as-the-amazon-burns-brazil-s-president-draws-global-outrage-1.4560481. 
  7. Andreoni, Manuela; Hauser, Christine (August 21, 2019). "Fires in Amazon Rain Forest Have Surged This Year". த நியூயார்க் டைம்ஸ். Rio de Janeiro. பார்க்கப்பட்ட நாள் August 21, 2019.
  8. "Uptick in Amazon Fire Activity in 2019". www.earthobservatory.nasa.gov (in ஆங்கிலம்). 2019-08-23. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25. While drought has played a large role in exacerbating fires in the past, the timing and location of fire detections early in the 2019 dry season are more consistent with land clearing than with regional drought.
  9. Press, Associated (2019-08-20). "Brazil's environmental changes under a far-right climate skeptic". New York Post (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
  10. "Tras incendios en Santa Cruz, Morales justifica los chaqueos - Diario Pagina Siete". www.paginasiete.bo (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
  11. Melillo, J.M.; McGuire, A.D.; Kicklighter, D.W.; Moore III, B.; Vörösmarty, C.J.; Schloss, A.L. (20 May 1993). "Global climate change and terrestrial net primary production". Nature 363 (6426): 234–240. doi:10.1038/363234a0. Bibcode: 1993Natur.363..234M. https://archive.org/details/sim_nature-uk_1993-05-20_363_6426/page/234. 
  12. Tian, H.; Melillo, J.M.; Kicklighter, D.W.; McGuire, A.D.; Helfrich III, J.; Moore III, B.; Vörösmarty, C.J. (July 2000). "Climatic and biotic controls on annual carbon storage in Amazonian ecosystems". Global Ecology and Biogeography 9 (4): 315–335. doi:10.1046/j.1365-2699.2000.00198.x. 
  13. Alexander Zaitchik (July 6, 2019). "In Bolsonaro's Brazil, a Showdown Over Amazon Rainforest". The Intercept and Pulitzer Center on Crisis Reporting. https://theintercept.com/2019/07/06/brazil-amazon-rainforest-indigenous-conservation-agribusiness-ranching/. With contributions by Mauro Toledo Rodrigues
  14. Garrand, Danielle (August 20, 2019). "Parts of the Amazon rainforest are on fire — and smoke can be spotted from space". cbsnews.com (CBS Interactive Inc.). https://www.cbsnews.com/news/amazon-wildfire-parts-of-amazon-rainforest-on-fire-smoke-seen-from-space-2019-08-20/. 
  15. Umair Irfan (23 August 2019). "Wildfires are burning around the world. The most alarming is in the Amazon rainforest". Vox. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2019.
  16. "Amazon fires: Record number burning in Brazil rainforest - space agency". BBC. 21 August 2019. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2019.
  17. "Fires in Brazil". NASA. 13 August 2019. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2019.
  18. Andreoni, Manuela; Casado, Letícia; Londoño, Ernesto (August 22, 2019). "With Amazon Rain Forest Ablaze, Brazil Faces Global Backlash". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.

வெளி இணைப்புகள்

தொகு
  • "Updates on wildfires". INPE. Portal do Programa Queimadas do INPE. பார்க்கப்பட்ட நாள் August 22, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2019_அமேசான்_காட்டுத்தீ&oldid=3967889" இலிருந்து மீள்விக்கப்பட்டது