2021 தெற்காசிய வெள்ளம்

2021 தெற்காசிய வெள்ளம் (2021 South Asian floods) பல தெற்காசிய நாடுகளை தாக்கி அந்நாட்டு மக்களைப் பாதித்தது. 2020 ஆம் ஆண்டு சுமார் 6,500 பேர் வெள்ளத்தில் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டும் தெற்கு ஆசியாவில் பருவ மழையும் வெள்ளமும் மீண்டும் தாக்கியது.

2021 தெற்காசிய வெள்ளம்
2021 South Asian floods
நாள்மே - அக்டோபர் 2021
அமைவிடம்ஆப்கானித்தான், இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பாக்கித்தான், இலங்கை
காரணம்பருவ மழை
இறப்புகள்1,107

தாக்கம் தொகு

ஆப்கானித்தான் தொகு

மே மாத தொடக்கத்தில், வடக்கு ஆப்கானித்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன.[1] சூலை மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி ஆகத்து மாதம் வரை ஏற்பட்ட நூரித்தான் மாகாண வெள்ளத்தில் 113 பேர் இறந்தனர்.[2]

வங்காளதேசம் தொகு

வங்காளதேசத்தில் உள்ள காக்சு பசார் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பாதி பேர் குழந்தைகளாவர்.[3]

இந்தியா தொகு

இந்தியாவின் உத்தராகண்ட்டம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி 83 பேர் இறந்தனர். 121 பேரைக் காணவில்லை.[4]

அரபிக்கடலில் உருவான தாக்டே சூறாவளியால் தென்னிந்தியா பாதிக்கப்பட்டு 169 பேர் கொல்லப்பட்டனர்.[5] தொடர்ந்து வங்கக் கடலில் ஏற்பட்ட இயாசு புயல் மேலும் 20 பேரைக் கொன்றது.[6]

சூலை மாதம முதல் ஆகத்து மாதம் வரை ஏற்பட்ட வெள்ளம் மகாராட்டிரா மாநிலத்தை பாதித்தது. 251 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலரை காணவில்லை.[7] வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு கனமழை காரணமாக மும்பை நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து 32 பேர் உயிரிழந்தனர்.[8][9]

சூலை மாதத்தின் பிற்பகுதியில் சம்மு மற்றும் காசுமீரில் பெய்த கனமழை வெள்ளத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காணாமல் போனார்கள்.[10]

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆகத்து மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர்.[11]

கேரளா மற்றும் உத்தராகண்டம் மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 47 பேர் இறந்தனர்.[12][13]

நேபாளம் தொகு

அக்டோபர் மாதத்தில் மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 88 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காணாமல் போனார்கள்.[14]

பாக்கித்தான் தொகு

செப்டம்பர் மாதத்தில் பாக்கித்தான் நாட்டின் மிகப்பெரிய நகரமான கராச்சி வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறைந்தது 187 பேர் வீடுகள் இடிந்து விழுந்ததால் அல்லது வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர்.[15]

இலங்கை தொகு

மே முதல் நவம்பர் மாதம் வரை இலங்கையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. மே மாதத்தில் நான்கு பேர் இறந்தனர்.[16] 17 in June,[17] and 20 in November.[18]

மேற்கோள்கள் தொகு

  1. Richard Davies. "Afghanistan – Flash Floods Leave 16 Dead, 10 Missing".
  2. "Death Toll in Nuristan Flash Floods Rises to 113". 31 July 2021.
  3. Richard Davies. "Bangladesh – Deadly Floods and Landslides in Cox's Bazar".
  4. "Uttarakhand Tragedy: One More Body Recovered from Tapovan Tunnel, Death Toll Rises to 83". News18 (in ஆங்கிலம்). 2021-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.
  5. "India | Tropical Cyclone TAUKTAE – DG ECHO Daily Map | May 20, 2021". ReliefWeb. Archived from the original on May 20, 2021. பார்க்கப்பட்ட நாள் May 20, 2021.
  6. "Two electrocuted, 40 houses partly damaged in tornado ahead of Cyclone Yaas: Chief Minister Mamata Banerjee". Hindustan Times (in ஆங்கிலம்). Archived from the original on May 26, 2021. பார்க்கப்பட்ட நாள் May 25, 2021.
  7. "Maharashtra floods claim 251 lives, 13 districts across state affected, says Nawab Malik". 27 July 2021. பார்க்கப்பட்ட நாள் 28 July 2021.
  8. Singh, Laxman; Naidu, Jayprakash S; Naik, Yogesh; Bhalerao, Sanjana (19 July 2021). "32 killed as intense rain triggers landslides, leaves Mumbai flooded". Indian Express. https://indianexpress.com/article/cities/mumbai/32-killed-as-intense-rain-triggers-landslides-leaves-mumbai-flooded-7411134/. 
  9. Jadhav, Rajendra; Jamkhandikar, Shilpa (18 July 2021). "Landslides kill at least 30 in Mumbai after heavy rains". Reuters. https://www.reuters.com/world/india/landslides-kill-least-15-mumbai-after-heavy-rains-2021-07-18/. 
  10. Richard Davies. "India – 7 Dead, 19 Missing After Cloudburst Triggers Floods in Jammu and Kashmir".
  11. Richard Davies. "India – Madhya Pradesh Floods Death Toll Rises to 24".
  12. Richard Davies. "India – Floods and Landslides in Kerala Leave More Than 20 Dead".
  13. Richard Davies. "India – Floods and Landslides Cause 27 Fatalities in Uttarakhand".
  14. "Nepal floods: Death toll climbs to 88; 30 still missing". france24. 21 October 2021. பார்க்கப்பட்ட நாள் 21 October 2021.
  15. Richard Davies. "Pakistan – Flood Chaos in Karachi, Monsoon Death Toll Rises to 187".
  16. "You are being redirected..." floodlist.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06.
  17. "Thousands homeless as Sri Lanka floods death toll hits 17". France 24 (in ஆங்கிலம்). 2021-06-07. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  18. Richard Davies. "Sri Lanka – 20 Dead After Days of Severe Weather".
"https://ta.wikipedia.org/w/index.php?title=2021_தெற்காசிய_வெள்ளம்&oldid=3687025" இலிருந்து மீள்விக்கப்பட்டது