2022 தெற்கு பெரு நிலநடுக்கம்

2022 தெற்கு பெரு நிலநடுக்கம் (2022 Southern Peru earthquake) பெரு நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.[1] மே மாதம் 26 ஆம் தேதியன்று அதிகாலை 5.52 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.2 புள்ளிகளாக பதிவானது.[2] [3]வடமேற்கு கடலோர நகரமான பாராங்காவில் இருந்து 42 கி.மீ தொலைவில் சுமார் 112 கிமீ ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. நான்கு நூற்றாண்டுகளை கடந்த தேவாலயத்தில் இருந்த 14 மீட்டர் கோபுரம் நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமானது. இதேபோல் தெற்கு ஈக்வடோரில் உள்ள தேவாலயமும் நிலநடுக்கத்தில் சேதமடைந்தது. கொலம்பியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Ap (2022-05-26). "Powerful earthquake shakes southern Peru". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.
  2. News, A. B. C. "Powerful earthquake shakes southern Peru". ABC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-26. {{cite web}}: |last= has generic name (help)
  3. Reuters (2022-05-26). "Strong quake strikes Peru, no reports of damage or casualties". Reuters (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-26. {{cite web}}: |last= has generic name (help)