2022 மலேசிய கிழக்கு கடற்கரை வெள்ளம்
பிப்ரவரி 2022 இல் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
2022 மலேசிய கிழக்கு கடற்கரை வெள்ளம் (ஆங்கிலம்: 2022 Malaysian East Coast Floods; மலாய்: Banjir Pantai Timur Malaysia 2022) என்பது 2022-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகும்.
நேரம் | 26 பிப்ரவரி 2022 - முதல் |
---|---|
அமைவிடம் | கிளாந்தான் மற்றும் திராங்கானு, மலேசியா |
காரணம் | தொடர் மழை |
விளைவு |
|
இடம்பெயர்ந்தது | 9 ஆயிரம் மக்களுக்கும் மேல்[1] |
தீபகற்ப மலேசியாவில் குறிப்பாக கிளாந்தான் மற்றும் திராங்கானு மாநிலங்களில் பிப்ரவரி 25 முதல் பல நாட்கள் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் இவ்வெள்ளம் ஏற்பட்டது. இரு மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது.[2][3]மேலும் தாய்லாந்தின் அண்டைப் பகுதிகளையும் வெள்ளம் பாதித்தது.[4]
வெள்ளத்தைத் தொடர்ந்து பல ஆயிரம் மக்கள் இந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வழக்கமான வருடாந்திர வானிலை முறைகளுக்கு இணங்காத வெள்ள நேரம் காரணமாக இந்த வெள்ளம் எதிர்பாராததாகக் கருதப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "6,327 mangsa banjir dipindahkan di Kelantan, Terengganu". Berita Harian. 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.
- ↑ "Hujan sangat lebat, angin kencang mulai malam ini". Berita Harian. 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.
- ↑ "Amaran hujan berterusan tahap bahaya di Kelantan, Terengganu". Berita Harian. 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.
- ↑ Davies, Richard. "Malaysia – Thousands Evacuate Floods in Kelantan and Terengganu – FloodList". floodlist.com. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.
- ↑ Ilham, Rosli (26 February 2022). "Banjir kali ini pelik". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.