2195 அலுமினிய உலோகக்கலவை
2195 அலுமினிய உலோகக்கலவை (2195 aluminium alloy) என்பது அலுமினியம்-தாமிரம் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கலப்புலோகமாகும். 2000 அல்லது 2xxx தொடர் என்றும் இதனை அடையாளப்படுத்துவர். அலுமினியம் இலித்தியம் கலப்புலோகங்களின் பற்றவைத்து இணைக்கும் உலோகக்கலவைகளில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. 2000 தொடர் உலோகக் கலவைகளில் மிகவும் சிக்கலான தரம் கொண்டதாகவும் இக்கலப்புலோகம் உள்ளது. இதன் எடையில் குறைந்தது 91.9% அலுமினியம் உள்ளது. 2195 அலுமினியத்தை ஒருங்கிணைந்த எண் அமைப்பு திட்டத்தில் ஏ92195 என்ற குறியீட்டால் குறிக்கலாம்.
பண்புகள்
தொகுமற்ற அலுமினியம்-தாமிர உலோகக்கலவைகளைப் போலவே, 2195 உலோகக் கல்வையும் மோசமான வேலைத்திறனும், மோசமான அரிப்பு எதிர்ப்பும் கொண்ட அதிக வலிமை கொண்ட கலவையாகும். அதிக கலப்பு இருப்பதால் இது அதிக வலிமை கொண்ட குறைந்த அரிப்பு எதிர்ப்பு பக்கத்தில் விழுகிறது. உருவாக்கப்பட்ட உலோகக் கலவையாக, இது வார்ப்பில் பயன்படுத்தப்படுவதில்லை. பற்றவைத்து இணைக்க பயன்படுத்தலாம். குறிப்பாக திண்ம நிலை இணைப்புச் செயல்முறையில் இதை பயன்படுத்தலாம். மேலும் கடுங்குளிர் வெப்பநிலையில் பொருள் உடைவதை எதிர்க்கும் திறன் கொண்டுள்ளது.[1]
பயன்பாடுகள்
தொகு2195 அலுமினிய உலோகக்கலவையின் அதிக வலிமை மற்றும் எடை விகிதமானது விண்வெளிப் பயன்பாடுகளில் பயன்படுத்த உதவுகிறது. விண்வெளி ஓட அதிலேசான எடை வெளிப்புற தொட்டி போன்றவற்றில் இது பயன்படுகிறது.[1] இபயன்பாடுக்காகவே உருவாக்கப்பட்ட உலோகக் கலவையான 2219 கலப்புலோகத்தைக் காட்டிலும் இது 30 % வலிமையானது மற்றும் 5 % குறைவான அடர்த்தி கொண்டது.[1]
பால்கன் 9 முழு உந்துதல் வகை சுற்றுப்பாதை செலுத்து வாகனங்களின் உந்து தொட்டிகள் தயாரிக்க 2195 அலுமினிய உலோகக்கலவை பயன்படுத்தப்பட்டது.[2][3]
வேதி இயைபு
தொகு2195 அலுமினிய உலோகக்கலவையின் வேதி இயைபு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[4][5]
- அலுமினியம்: 91.9 to 94.9%
- செப்பு: 3.7 to 4.3%
- இலித்தியம்: 0.8 to 1.2%
- மக்னீசியம்: 0.25 to 0.8%
- வெள்ளி (தனிமம்): 0.25 to 0.6%
- சிர்க்கோனியம்: 0.08 to 0.16%
- இரும்பு: 0.15% max
- சிலிக்கான்: 0.12% max
- தைட்டானியம்: 0.1% max
- துத்தநாகம்: 0.25% max
- எச்சங்கள்: 0.15% max
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Super Lightweight External Tank, NASA, retrieved 12 Dec 2013.
- ↑ "How Light Metals Help SpaceX Land Falcon 9 Rockets with Astonishing Accuracy". Light Metal Age. 26 April 2019. Archived from the original on 28 August 2023. பார்க்கப்பட்ட நாள் 9 May 2024.
- ↑ "Falcon 9". SpaceX. 2013. Archived from the original on 24 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
- ↑ Häusler, Ines; Schwarze, Christian; Bilal, Muhammad; Ramirez, Daniela; Hetaba, Walid; Kamachali, Reza; Skrotzki, Birgit (2017). "Precipitation of T1 and θ′ Phase in Al-4Cu-1Li-0.25Mn During Age Hardening: Microstructural Investigation and Phase-Field Simulation". Materials 10 (2). doi:10.3390/ma10020117. பன்னாட்டுத் தர தொடர் எண்:1996-1944. பப்மெட்:28772481. பப்மெட் சென்ட்ரல்:5459132. http://www.mdpi.com/1996-1944/10/2/117.
- ↑ "2195 Aluminum Composition Spec". www.matweb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-02-18.