2 நயா பைசா (இந்திய நாணயம்)

இரண்டு நயா பைசா (Two naye paise) (இந்தி: दो नए पैसे) (singular: Paisa), என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 2100 பங்கு. பைசாவின் சின்னம் p.

இரண்டு நயா பைசா
Two naye paise
दो नए पैसे
மதிப்புஇந்திய ரூபாயில் 2100
Mass2.95 g (45.5 gr)
விட்டம்18 mm (0.71 in)
தடிமன்1.80 mm (0.071 in)
முனைSmooth
Compositionசெப்புநிக்கல்
Years of minting1957 (1957)
Mint marksமும்பை = ♦
Circulationசெல்லாமலாக்கப்பட்டது
Catalog numberKM#11
Obverse
வடிவமைப்புஇந்திய தேசிய இலச்சினையுடன் நாட்டுப் பெயர்.
Reverse
Designமதிப்பு மற்றும் அச்சிட்ட ஆண்டு

வரலாறு

தொகு

1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாய் ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைச நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. நயா பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2] நயா பைசா நாயணயங்கள் 2011 சூன் 30 இல் செல்லாமல் ஆக்கப்பட்டன.[3]

காசு அச்சடிப்பு

தொகு

1957 முதல் 1963 வரை பம்பாயில் (இன்றைய மும்பை) இந்திய அரசு காசாலையில் இரண்டு நயா பைசா நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் சிறிய அடையாளச் சின்னமாக ♦ (சிறிய புள்ளி / வைரம்) வைக்கப்பட்டது.[4]

மொத்த காசுகள்

தொகு

மொத்தம் 1,826,326,000 காசுகள் 1957 முதல் 1964 முடிய அடச்சிடப்பட்டன.

உலோகம்

தொகு

இரண்டு நயா பைசா நாணயங்கள் செம்புநிக்கல் கலப்பு உலோகத்தில் தயாரிக்கப்பட்டன. காசின் எடை 2.95 கிராம், இதன் விட்டம் 18 மில்லிமீட்டர்கள் (0.71 அங்), கனம் 1.8 மில்லிமீட்டர்கள் (0.071 அங்). நாணத்தின் விளிம்பில் எட்டு குவிபுடைப்புகள் இடம்பெற்றிருந்தன.

வகைகள்

தொகு
வகைகள் (1957-1964).
படம் மதிப்பு தொழில்நுட்ப அளவீடுகள் விளக்கம் அச்சிடப்பட்ட ஆண்டு தற்போதைய
நிலை
முன்பக்கம் பின்பக்கம் எடை விட்டம் கனம் உலோகம் முனை முன்பக்கம் பின்பக்கம் முதல் கடைசி
  2 நயா பைசா 2.95 கி 18 மிமீ 1.8 மிமீ செம்புநிக்கல் Smooth இந்திய தேசிய இலச்சினை & நாட்டுப்
பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்.
மதிப்பு மற்றும் ஆண்டு. 1957 1964 செல்லாக்காசு.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Republic India Coinage". Reserve Bank of India. https://rbi.org.in/SCRIPTs/mc_republic.aspx. பார்த்த நாள்: 30 November 2016. 
  2. "1 paisa coin". India Numismatics. https://indianumismatics.wordpress.com/category/history-of-indian-coins/. பார்த்த நாள்: 30 November 2016. 
  3. "Currency Matters". Reserve Bank of India. https://www.rbi.org.in/scripts/BS_CurrencyFAQView.aspx?Id=39. பார்த்த நாள்: 30 November 2016. 
  4. "2 naye paise". colnect.com. http://colnect.com/en/coins/list/variant/2100. பார்த்த நாள்: 26 August 2017. 
  5. "2 naye paise details". India Numismatics. https://en.numista.com/catalogue/pieces1625.html. பார்த்த நாள்: 26 August 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2_நயா_பைசா_(இந்திய_நாணயம்)&oldid=2462902" இலிருந்து மீள்விக்கப்பட்டது