3,4-சைலிடின் (3,4-Xylidine ) என்பது C8H11N என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அனிலின் வழிப்பொருளான இச்சேர்மத்தின் கட்டமைப்பு (CH3)2C6H3NH2 என்று எழுதப்படுகிறது. 2,6-சைலிடின் மற்றும் 2,4-சைலிடின் சேர்மங்களின் மாற்று வடிவம் 2,4-சைலிடின் ஆகும். 3,4-சைலிடின் ஒரு படிகத் திடப்பொருளாக உள்ளது[1].

3,4-சைலிடின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3,4-டைமெத்தில்பென்சீன்-1-அமீன்
வேறு பெயர்கள்
3,4-டைமெத்திலனிலின்
3,4-டைமெத்தில்பீனைலமீன்
3,4-டைமெத்தில்பென்சீனமைன்
இனங்காட்டிகள்
95-64-7 Y
ChEBI CHEBI:39901 N
ChemSpider 6978 Y
InChI
  • InChI=1S/C8H11N/c1-6-3-4-8(9)5-7(6)2/h3-5H,9H2,1-2H3 N
    Key: DOLQYFPDPKPQSS-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
  • Cc1ccc(N)cc1C
பண்புகள்
C8H11N
வாய்ப்பாட்டு எடை 121.18 g·mol−1
உருகுநிலை 51.0 °C (123.8 °F; 324.1 K)
கொதிநிலை 226.0 °C (438.8 °F; 499.1 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் வினைகள்

தொகு

3,4-சைலிடின் இரண்டு வழிமுறைகளில் தயாரிக்கப்படுகிறது.

  • (2-குளோரோமெத்தில்)-4-நைட்ரோடொலுயீனை ஐதரசனேற்றம் செய்து தயாரித்தல்,
  • புரோமோசைலினை அமோனியாவுடன் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரித்தல்.

உயிர்ச்சத்து பி எனப்படும் ரிபோபிளாவின் தயாரித்தலில் 3,4-சைலிடின் முன்னோடியாக விளங்குகிறது[1] .

பாதுகாப்பு நடவடிக்கை

தொகு

மற்ற சைலிடின்கள் போலவே 3,4-சைலிடின் சுமாரான நச்சுத்தன்மை கொண்டுள்ளது. எலிகளுக்கு வாய்வழியாகக் கொடுக்கும்போது இதன் உயிர் கொல்லும் நச்சளவு 812 மி.கி/கி.கி ஆகும்[1]

2003 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவப் படைகள் ஈராக் படையெடுப்பின் போது இருபதுக்கும் மேலான படைவீரர்கள் 3,4-சைலிடினால் பாதிக்கப்பட்டு எண்ணற்ற உடல்நலக் கேடுகளுக்கு ஆளாயினர்[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=3,4-சைலிடின்&oldid=2096762" இலிருந்து மீள்விக்கப்பட்டது