3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலம்
3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலம் (3-Chloropropanoic acid) என்பது C3H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்பாடைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். ClCH2CH2CO2H என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். 3-குளோரோபுரோப்பியோனிக்கு அமிலம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. வெள்ளை அல்லது நிறமற்ற திடப்பொருளாகக் காணப்படுகிறது. ஒரு மருந்தாகவும், செயற்கை இடைநிலையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அக்ரிலிக் அமிலத்த்தை ஐதரோகுளோரினேற்றம் செய்து 3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலம் தயாரிக்கப்படுகிறது.[1] நீரிய கரைசலில், இதன் காடித்தன்மை மதிப்பு 4.08 ஆகும்.[2]
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
3-குளோரோபுரோப்பியானிக் அமிலம் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 107-94-8 |
ATC குறியீடு | ? |
பப்கெம் | CID 7899 |
ChemSpider | 7611 |
UNII | R5J180FN9Z |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C3 |
SMILES | eMolecules & PubChem |
| |
இயற்பியல் தரவு | |
உருகு நிலை | 42 °C (108 °F) |
கொதி நிலை | 204 °C (399 °F) (சிதையும்.) |
3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலம் அறிவியல் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக காமா -ஐதராக்சி பியூட்டைரிக்கு அமிலத்துடன் தொடர்புடையது மற்றும் காமா -ஐதராக்சி பியூட்டைரிக்கு அமில ஏற்பியுடன் பிணைக்கிறது. ஆனால் காமா அமினோபியூட்டைரிக்கு அமிலத்துடன் எந்தவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை.[3] சில களைக்கொல்லி கலவைகளில் இது ஒரு செயலில் உள்ள பொருளாகவும் உள்ளது.[4] அதிகப்படியான அளவு எடுத்துக் கொண்டால் மயக்கம் மற்றும் வலிப்பு ஏற்படலாம்.[5] நுண்ணுயிரேற்றம் வழிமுறையாக பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகிய இரண்டாலும் 3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலத்தை உடைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.[6][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Propionic Acid and Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, 2005, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_223
- ↑ "Estimation of p K a for organic oxyacids using calculated atomic charges" (in en). Journal of Computational Chemistry 14 (12): 1460–1467. December 1993. doi:10.1002/jcc.540141208. பன்னாட்டுத் தர தொடர் எண்:0192-8651. https://archive.org/details/sim_journal-of-computational-chemistry_1993-12_14_12/page/1460.
- ↑ "3-chloropropanoic acid (UMB66): a ligand for the gamma-hydroxybutyric acid receptor lacking a 4-hydroxyl group". Bioorganic & Medicinal Chemistry 12 (7): 1643–1647. April 2004. doi:10.1016/j.bmc.2004.01.025. பப்மெட்:15028257.
- ↑ 4.0 4.1 "Degradation Of Herbicide (3-Chloropropionic Acid) By Bacterial Dehalogenases". Proc. KUSTEM 4th Annual Seminar 2005: 586–590. 2005. http://eprints.utm.my/1748/2/FZH.pdf.
- ↑ "Chemical Data Sheet for 3-CHLOROPROPIONIC ACID". NOAA.
- ↑ Edbeib, Mohamed (2020-04-15). "3-Chloropropionic Acid (3cp) Degradation and Production of Propionic Acid by Newly Isolated Fungus Trichoderma Sp. Mf1" (in en). International Journal of Life Sciences and Biotechnology 3 (1): 41–50. doi:10.38001/ijlsb.677005. பன்னாட்டுத் தர தொடர் எண்:2651-4621. https://dergipark.org.tr/en/pub/ijlsb/issue/52888/677005.