3-நைட்ராக்சிபுரோப்பனால்

3-நைட்ராக்சிபுரோப்பனால் (3-Nitrooxypropanol) என்பது C3H7NO4 அல்லது HOCH2CH2CH2ONO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சுருக்கக் குறியீடாக இதை 3என்.ஓ.பீஎன்று எழுதுவார்கள். 1,3-புரோப்பேன்டையாலினுடைய மோனோநைட்ரேட்டு எசுத்தராக இது வகைப்படுத்தப்படுகிறது. மெத்தில் கோயென்சைம் பி ரிடக்டேசு நொதிக்கு வளர்தடுபொருளாக இச்சேர்மம் பயன்படுகிறது. மீத்தேனுருவாக்கல் வினையின் கடைசிப் படிநிலையில் மெத்தில் கோயென்சைம் ரிடக்டேசு வினையூக்கியாக செயல்படுகிறது[1]. அசைபோடும் விலங்குகளுக்கு இது உணவாக்கப்பட்டால் மீத்தேன் உற்பத்தி குறைந்து மறைந்துவிடுகிரது. அவை எடை அதிகரிக்கின்றன. அசைபோடும் விலங்குகள் பைங்குடில் வளிமமான மீத்தேன் வாயு உற்பத்தியில் மிகப் பெரும் பங்காற்றுகின்றன.

3-நைட்ராக்சிபுரோப்பனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிபுரோப்பைல் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
100502-66-7
InChI
  • InChI=1S/C3H7NO4/c5-2-1-3-8-4(6)7/h5H,1-3H2
    Key: PTMLFFXFTRSBJW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10011893
  • C(CO)CO[N+](=O)[O-]
பண்புகள்
C3H7NO4
வாய்ப்பாட்டு எடை 121.09
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Hristov, A. N., et al., "An inhibitor persistently decreased enteric methane emission from dairy cows with no negative effect on milk production", Proc. Natl. Acad. Sci. U. S. A. 2015, volume 112, 10663-10668. எஆசு:10.1073/pnas.1504124112
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-நைட்ராக்சிபுரோப்பனால்&oldid=3620254" இலிருந்து மீள்விக்கப்பட்டது