3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம்
3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் (3000 metres steeplechase) தடகள விளையாட்டில் பலதடை ஓட்டத்தில் மிகவும் வழமையான தொலைவாகும். இது 3000 மீட்டர்கள் தொலைவிற்குப் பல தடைகளைத் தாண்டிச் செல்லும் ஓட்டப்பந்தயமாகும். இதன் பெயர் குதிரைகளுக்கான ஸ்டீபிள்சேசை அடுத்து ஆங்கிலத்தில் இது ஸ்டீபிள்சேஸ் எனப்படுகின்றது.
தடகள விளையாட்டு 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் | |
---|---|
![]() 2009 உலக தடகளப் போட்டிகளின்போது நீர்த்தடைகளைத் தாண்டிச் செல்லுதல் | |
ஆண்கள் சாதனைகள் | |
உலகச் சாதனை | ![]() |
ஒலிம்பிக் சாதனை | ![]() |
பெண்கள் சாதனைகள் | |
உலகச் சாதனை | ![]() |
ஒலிம்பிக் சாதனை | ![]() |
விதிமுறைகள்தொகு
ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் உலகத் தடகளப் போட்டியிலும் இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது; தவிரவும் இந்தப் போட்டியை தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் (IAAF) அங்கீகரித்துள்ளது.[1] ஆண்களுக்கான தடைகள் 914 மில்லிமீட்டர்கள் (36.0 in) உயரமானதாகவும், பெண்களுக்கான தடைகள் 762 மில்லிமீட்டர்கள் (30.0 in) உயரமானதாகவும் அமைக்கப்படுகின்றன. நீர்த் தடையில் வேலியை அடுத்து நீர்க்குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது; கால்பதிக்கும் பரப்பு 3.66 மீட்டர்கள் (12.0 ft) அகலம் × 0.70 மீட்டர்கள் (2.3 ft). பின்னர் இது மேனோக்கியச் சரிவாக 700 மில்லிமீட்டர்கள் (28 in)இலிருந்து ஓடுதளம் மேற்பரப்புவரை விரிந்துள்ளது.[1]
இந்த ஓட்டத்தின் நீளம் பொதுவாக 3,000 மீட்டர்கள் (9,800 ft) ஆகும்; இளையோர் மற்றும் சில மாஸ்டர் நிகழ்வுகளில் 2,000 மீட்டர்கள் (6,600 ft) தொலைவிற்கும் நடத்தப்படுகின்றது. முன்னதாக பெண்களுக்கானப் போட்டிகள் 2000 மீட்டருக்கே நடத்தப்பட்டு வந்தன. ஒரு சுற்றில் நான்கு சாதாரண தடைகளும் ஒரு நீர்த்தடையும் அமைக்கப்பட்டிருக்கும். 3,000 மீட்டர்கள் (9,800 ft) தொலைவில் ஒவ்வொரு போட்டியாளரும் 28 சாதாரணத் தடைகளையும் ஏழு நீர்த்தடைகளையும் கடக்க வேண்டியிருக்கும். இதில் முதலில் தடைகளில்லாத பகுதிச்சுற்றும் பின்னர் ஏழு முழுச் சுற்றுக்களும் இருக்கும். நீர்த்தடை, உள்தடத்தின் உட்புறத்திலோ வெளித் தடத்தின் வெளிப்புறத்திலோ அமைக்கப்பட்டிருக்கும்.
தடை தாண்டும் ஓட்டத்தில் உள்ளது போலன்றி ஸ்டீபிள்சேஸ் தடைகளை தட்டினால் கீழே விழுவதில்லை; எனவே மெய்வல்லுநர் இந்தத் தடைகளை எவ்வாறும் கடக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பல போட்டியாளர்கள் தடைகள் மீது கால்பதித்துக் கடக்கின்றனர்.
மேற்சான்றுகள்தொகு
- ↑ 1.0 1.1 "3000 metres steeplechase". International Association of Athletics Federations. பார்த்த நாள் 5 January 2015.