4,5-இருகுளோரோ-1,2,3-இருதயோசோலியம் குளோரைடு

வேதிச் சேர்மம்

4,5-இருகுளோரோ-1,2,3-இருதயோசோலியம் குளோரைடு (4,5-Dichloro-1,2,3-dithiazolium chloride) என்பது C2Cl3NS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமக் கந்தகச் சேர்மமான இச்சேர்மம் 4,5-இருகுளோரோ-1,2,3-இருதயோசோலியம் நேர்மின் அயனியின் குளோரைடு உப்பாகக் கருதப்படுகிறது. பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் குறைவாகக் கரையும்.:[1]

4,5-இருகுளோரோ-1,2,3-இருதயோசோலியம் குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
Appel's salt
இனங்காட்டிகள்
75318-43-3
ChemSpider 9270989
InChI
  • InChI=1S/C2Cl2NS2.ClH/c3-1-2(4)6-7-5-1;/h;1H/q+1;/p-1
    Key: NIZMCFUMSHISLW-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11095847
  • C1(=NS[S+]=C1Cl)Cl.[Cl-]
UNII 156NP9484D
பண்புகள்
C2Cl3NS2
வாய்ப்பாட்டு எடை 208.50 g·mol−1
தோற்றம் பச்சை நிறத் திண்மம்
உருகுநிலை 172 °C (342 °F; 445 K) சிதைவடையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

கந்தக மோனோகுளோரைடுடன் அசிட்டோநைட்ரைலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் 4,5-இருகுளோரோ-1,2,3-இருதயோசோலியம் குளோரைடு பெறப்படுகிறது. இந்த வினையின் ஆரம்ப கட்ட வினை அசிட்டோநைட்ரைலின் குளோரினேற்றமாகும். இதன் விளைவாக வரும் இருகுளோரோ அசிட்டோநைட்ரைல் கந்தக மோனோகுளோரைடுடன் வளையக்கூட்டு வினைக்கு உட்படுகிறது:

Cl2CHCN + S2Cl2 -> [S2NC2Cl2]Cl + HCl

இந்த நேர்மின் அயனி எலக்ட்ரான் நாட்டம் கொண்டதாகும். இது உடனடியாக நீராற்பகுப்பு க்கு உட்படுகிறது. புரோட்டின் தரா அணுக்கருகவர் பொருள்கள் ஒரு குளோரைடை இடமாற்றம் செய்கின்றன:[2][3]

[S2NC2Cl2]Cl + 2 RNH2 -> S2NC2Cl(\dNR) + [RNH3]Cl }}

இந்தச் சேர்மம் ஏப்பல் மற்றும் குழுவினரால் கண்டறியப்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Rees, Charles W. (1992). "Polysulfur-Nitrogen Heterocyclic Chemistry". Journal of Heterocyclic Chemistry 29 (3): 639–651. doi:10.1002/jhet.5570290306. 
  2. Foucourt, Alicia; Chosson, Elizabeth; Besson, Thierry (2009). "4,5-Dichloro-1,2,3-dithiazol-1-ium Chloride". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rn01113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471936237.
  3. Cuadro, Ana M.; Alvarez-Buila, Julio (1994). "4,5-Dichloro-1,2,3-dithiazolium chloride (Appel's Salt): Reactions with N-Nucleophiles". Tetrahedron 50 (33): 10037–10046. doi:10.1016/S0040-4020(01)89619-8. https://archive.org/details/sim_tetrahedron_1994-08-15_50_33/page/n204. 
  4. Appel, Rolf; Janssen, Heinrich; Siray, Mustafa; Knoch, Falk (1985). "Synthese und Reaktionen des 4,5-Dichlor-1,2,3-dithiazolium-chlorids". Chemische Berichte 118 (4): 1632–1643. doi:10.1002/cber.19851180430.